Border Gavaskar Trophy Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் நடைபெற்று வருகின்றது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 1ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்க உள்ளது.
ஆஸி. அணியில் பாதி வீரர்கள் எஸ்கேப்: அடுத்தடுத்து சொந்த நாட்டுக்கு பறந்தது ஏன்?
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பாதி வீரர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை நிலவரப்படி, இந்தூர் டெஸ்டுக்கு 8 நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியா அணியில் பாதி பேர் தாயகம் சென்றுள்ளனர். கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஆஷ்டன் அகர் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஏற்கனவே சொந்த நாட்டுக்கு பறந்த நிலையில், தற்போது அவர்களுடன் மாட் ரென்ஷா, லான்ஸ் மோரி போன்ற வீரர்களும் இணைந்துள்ளார்.
சொந்த நாடு திரும்பிய வீரர்கள் பட்டியல்:
பேட் கம்மின்ஸ் (குடும்ப மருத்துவ அவசரநிலை)
டேவிட் வார்னர் (முழங்கையில் காயம்)
ஆஷ்டன் அகர் (சாதகமாக இல்லை)
ஜோஷ் ஹேசில்வுட் (அகில்லெஸ் காயம்)
டோட் மர்பி (ஒரு பக்க தசை பிடிப்பு)
மிட்செல் ஸ்வெப்சன்
லான்ஸ் மோரிஸ்
மேத்யூ ரென்ஷா
கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது குடும்பத்தில் ஏற்பட்ட தீவிர சுகாதார பிரச்சனைகளை முன்னிட்டு சொந்த நாடு திரும்பினார். தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் (முழங்கை காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். எனினும், அவர் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க திரும்பி வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை காயம் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்கிறார்.
இத்தொடரில் ஆஷ்டன் அகர் பற்றி அணி நிர்வாகத்திடம் எந்த திட்டமும் இல்லாததால் அவர் தாயகம் திரும்பினார். மாறாக அவர் ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் விளையாடுகிறார். நாக்பூர் டெஸ்டில் கலக்கிய டோட் மர்பி ஒருபக்க தசை பிடிப்பு காரணமாக நாடு திரும்பியுள்ளார். மிட்செல் ஸ்வெப்சன் தனது குழந்தையின் பிறப்புக்காக சென்றுள்ளார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸும் ஷெஃபீல்ட் ஷீல்டில் விளையாட உள்ளார்.
சுற்றுப்பயணத்தின் முதல் மூன்று வாரங்களில் 19 வீரர்கள் அணியில் இடம்பெற்றனர். அவர்களில் இருவர் (கேமரூன் கிரீன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்) இரண்டு டெஸ்டுகளுக்கும் அணியில் இல்லை. மேலும், இருவர் (மிட்செல் ஸ்டார்க் மற்றும் மிட்செல் ஸ்வெப்சன்) தலா ஒரு டெஸ்ட் மற்றும் மற்றொருவர் (மேத்யூ குஹ்னேமேன்) டெல்லியில் விளையாடிய 18 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்திருக்கவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட அணி அடுத்தவராம் புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
"நாங்கள் அணியை மாற்றி அமைத்து வருகிறோம். உடல் தகுதி பெற்றுள்ள மற்றும் அணியில் புதிதாக சேர்ந்துள்ள வீரர்களுடன் விளையாடுகிறோமா? என்பதை யோசிக்க வேண்டும். அணியின் கட்டமைப்பின் அடிப்படையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். சொந்த நாட்டிலும் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. வீரர்கள் அதில் விளையாடினால் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது. நாங்கள் அதை மதிக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி:
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குஹ்னிமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மாட் மர்பி, , ஸ்டீவ் ஸ்மித் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.