IND vs AUS WTC Final 2023 Playing 11 Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், கோப்பையை யார் கைப்பற்றுவார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.
இரு அணிகளும் 2021-23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. இதில் ஆஸ்திரேலியா முந்தைய சுழற்சியில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், இந்த முறை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக விளையாட உள்ளது.
நியூசிலாந்திடம் முந்தைய சுழற்சியில் தோல்வியடைந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளது. மறுபுறம் பார்டர் கவாஸ்கர் டிராபி 2023ல் இந்தியா தோல்வி கண்ட ஆஸ்திரேலியா அதற்கு பதிலடி கொடுக்க உள்ளது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
The Captains 👍
The Championship Mace 👌
The Big Battle 💪
All In Readiness for the #WTC23#TeamIndia pic.twitter.com/Ep10vb2aj5— BCCI (@BCCI) June 6, 2023
இந்தியா பிளேயிங் 11 எப்படி?
இந்திய மண்ணில் நடந்த 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த அசத்தல் வெற்றியின் உத்தேவகத்துடன் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே போன்ற முன்னணி வீரர்கள் வலு சேர்க்கிறார்கள். இந்த வரிசையில் அனுப்பமுள்ள ரஹானே மீண்டும் இணைத்துள்ளது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
விக்கெட் கீப்பர் வீரராக கே.எஸ்.பாரத் தான் களமாடுவார். ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா சுழலில் மற்றும் பேட்டிங்கில் வழக்கம் போல் அசத்துவார் என நம்பலாம். மற்றொரு சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் வருவார். வேகப்பந்துவீச்சு தாக்குதலை முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தொடுக்க காத்திருக்கிறார்கள்.
— BCCI (@BCCI) June 5, 2023
இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல்: இந்தியாவின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.