Advertisment

ஜடேஜா கையில் மருந்து சர்ச்சை… அபராதம் விதித்த ஐ.சி.சி: ரவி சாஸ்திரி விளாசல்

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேள்விகளை எழுப்பி விளாசியுள்ளர்.

author-image
WebDesk
Feb 11, 2023 18:05 IST
New Update
Ind vs Aus, Jadeja fined for applying soothing cream, Ravi Shastri backs up Tamil News

Ravindra Jadeja found guilty of breaching ICC Code of Conduct

Ravindra Jadeja - Ravi Shastri Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சிஸ் முடிவில் 63.5 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 49 ரன்கள் எடுத்தார்.

Advertisment

இந்திய அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்த தொடக்க வீரரும், கேப்டனுமான ரோகித் 120 ரன்களும், அரைசதம் விளாசிய அக்சர் படேல் 84 ரன்களும், ஜடேஜா 70 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டோட் மர்பி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 32.1 ஓவர்களில் 91ரன்களுக்கு 10 விக்கெட் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அஸ்வின் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 31 வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆட்டநாயகன் விருதை ஜடேஜா வென்றார்.

ஜடேஜா கையில் மருந்து சர்ச்சை

இந்த நிலையில், முதல் நாள் போட்டியில் ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பந்தை வைத்திருந்த ஜடேஜா, தனது விரலில் ஏதோ ஒன்றை தேய்த்தார் . முகமது சிராஜிடம் இருந்து அதனை ஜடேஜா வாங்கி தனது விரலில் தேய்ப்பது போல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில் பார்க்க முடிந்தது.

இதனை ஊதி பெரிய சர்ச்சையாக்கிய ஆஸ்திரேலிய மீடியாக்கள், ஜடேஜா பந்து வீச வரும்போது ஒருவகை கிரீமை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக தெரிவித்தனர். இதற்கு சில முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். எனினும், ஆஸ்திரேலிய மீடியாக்களின் கருத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய அணி நிர்வாகம் கூறுகையில், ஜடேஜா, தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும், அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தது.

அபாரதம் விதித்த ஐ.சி.சி

இந்த நிலையில், நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை விதிகளை மீறியதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர்களிடம் தெரிவிக்காமல் கை விரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் அபாராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ரவி சாஸ்திரி கருத்து

இந்நிலையில், ஜடேஜாவுக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெ ட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “வலி நிவாரணிக்கான ஆயின்மென்ட்டை விரலில் பூசியதை வைத்து அவர் பந்தை சேதப்படுத்த முயற்சித்தார் எனக் கூறுகிறார்கள். அது வெறும் வலி நிவ ரணிதான். நடுவரே இதுபற்றி எந்த நடவடிக்கை யும் எடுக்காத போது ஏன் இதை சர்ச்சையாக்குகிறார்கள்?

நாக்பூர் களத்தில் பந்து ஸ்பின் ஆக எதையும் செய்யவே தேவையில்லை . ஆஸ்திரேலிய அணியில் கூட எந்த பிரச்னையும் இல்லையே. நடுவர்களே அமைதியாக இருக்கும்போது ஏன் இதனை விவாத பொருளாக்க வே ண்டும்?” என்று கேள்விகளை எழுப்பி விலகியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#India Vs Australia #Sports #Cricket #Indian Cricket Team #Ravindra Jadeja #Ravi Shastri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment