India vs Australia 2nd Test, KL Rahul Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. நாக்பூரில் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 9) முதல் தொடங்கி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வருகிற வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 17) முதல் தொடங்குகிறது.
சொதப்பல் ஆட்டம், சொற்ப ரன்னில் அவுட்… 2வது டெஸ்ட்டில் ராகுலுக்கு வாய்ப்பு?
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் ஒரு பவுண்டரியை விரட்டி 20 ரன்னில் அவுட் ஆனார். டோட் மர்பி பந்துவீச்சில் அவர் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறி இருந்தார் ராகுல். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அவர் சரியான தொடக்கத்தை பெறவில்லை. ஷாட் தேர்வில் சொதப்பினார். இதனால், அவர் மீது பலரும் விமர்சனம் வைத்துள்ளனர்.
இந்த தொடர் தொடங்கும் முன் இந்தியாவுக்கு தொடக்க வீரராக ஷுப்மான் கில் தான் களமிறங்க வேண்டும் சிலர் தெரிவித்தனர். ஏனென்றால், கில் சொந்த மண்ணில் நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் சதம், இரட்டை சதம் என தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், அணிக்கு நல்ல தொடக்கத்தையும் கொடுத்தார். மேலும், 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். எனவே, தொடக்க வீரர் இடத்திற்கு அவரை பரிந்துரை செய்தனர்.
ஆனால், முதல் டெஸ்டில் ராகுலுக்கு தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக டெஸ்ட் அணி ஃபார்மில் இல்லாத அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தற்கு எதிர்ப்பு குரல்கள் வந்தன. இந்த நிலையில் டெல்லியில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மற்றொரு டெஸ்டில் அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர் தோல்வியடைந்தால், கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“ராகுலுக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் இருந்து நம்பிக்கையைப் பெற்றுள்ளார். எல்லோரும் மோசமான ஃபார்மில். விராட் அவரது ஃபார்மில் பெரும் பின்னடைவைக் கண்டார். ஆனால் தற்போது அவர் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். ராகுலிடமும் பொறுமையாக இருக்க வேண்டும். அவர் ஒரு உன்னதமான வீரர், அவர் நிச்சயமாக மீண்டு வருவார்.
ஆம், துணை கேப்டனிடம் எதிர்த்து போராடும் சக்தி என்று எதுவும் இல்லை என்றால், அவரை நீக்கலாம். ஆனால் அது அணி நிர்வாகத்தின் முடிவு. டெல்லி டெஸ்டுக்குப் பிறகு அது பற்றிய விவாதம் நடைபெறும்,” என்று அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த 12 மாதங்களில் கேஎல் ராகுல்…
ஃபார்மெட் - போட்டிகள் | அதிகபட்ச ஸ்கோர் | சராசரி | 50 | 100 | ஸ்ட்ரைக் ரேட்
டெஸ்ட் - 3 | 77 | 23 | 15.4| 0 | 0 | 0
ஒருநாள் - 9 | 236 | 73 | 33.71| 2| 0 | 79.46
டி20 - 16 | 434 | 62 | 28.93 | 6 | 0 | 126.53
முன்னாள் வீரர்கள் கருத்து:
ராகுலின் டெஸ்ட் தேர்வுக்கு கர்நாடகாவின் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். கே.எல்.ராகுல் "தொடர்ச்சியாக சீரற்றவர்" என்றும், அவருக்கு சாதமாக அவரை அணியில் தேர்வு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெங்கடேஷ் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், "கே.எல்.ராகுலின் திறமை மற்றும் முயற்சியை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது செயல்பாடுகள் சமமாக இல்லை. 46 டெஸ்ட்களுக்குப் பிறகு 34 மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் சராசரி சாதாரணமாக உள்ளது. பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட பலரை நினைத்துப் பார்க்க முடியாது.
ராகுலின் தேர்வு செயல்திறன் அடிப்படையிலானது அல்ல மாறாக விருப்பத்தின் அடிப்படையில் உள்ளது. தொடர்ந்து சீரற்று உள்ளது மற்றும் 8 ஆண்டுகளாக இருக்கும் ஒருவருக்கு திறனை செயல்திறன்களாக மாற்ற தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
I have a lot of regard for KL Rahul’s talent and ability, but sadly his performances have been well below par. A test average of 34 after 46 tests and more than 8 years in international cricket is ordinary. Can’t think of many who have been given so many chances. Especially..cont
— Venkatesh Prasad (@venkateshprasad) February 11, 2023
முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில், அவரது பெயர் குறைப்பட்ட பட்டியலில் (ஷோர்ட்லிஸ்ட்) கூட இடம் பெறவில்லை என்பது கவனித்தக்கது.
இருப்பினும், ஷுப்மான் கில் vs ராகுல் விவாதத்தில் இந்திய பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். "கடந்த 1-2 ஆண்டுகளில் அவர் பேட்டிங் செய்த விதத்தை நான் உணர்கிறேன், அவர் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். டெல்லியில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஆதரவாக இருப்பார் என உறுதியாக நம்புகிறேன். அதன்பிறகு நீங்கள் யோசித்துப் பார்க்கலாம், ஏனெனில் அவருக்குப் பதிலாக ஒரு இன்-ஃபார்ம் பேட்டர் உங்களிடம் உள்ளார் (ஷுப்மான் கில்).” என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷுப்மான் கில் அணியில் இருப்பதால், அடுத்த இரண்டு இன்னிங்ஸ்கள் ராகுலின் வாழ்க்கையின் இறுதி சோதனையாக இருக்கும். அனைவருக்கும் நினைவூட்டும் வகையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து துணை கேப்டன் பதவியில் இருந்து அவர் ஏற்கனேவே நீக்கப்பட்ட நிலையில், டி20 அணியில் இருந்தும் தனக்கான இடத்தை இழந்துள்ளார். எனவே, தேர்வாளர்கள் அவருக்கு பதிலாக ஷுப்மான் அல்லது சர்பராஸ் கானை ஆடும் லெவனில் சேர்த்தால் ஆச்சரியமில்லை.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.