Advertisment

உமேஷ் யாதவ் பந்துவீச்சும் விராட் கோலி முழியும்… மீம்ஸ் மழை பொழிந்த நெட்டிசன்கள்!

India vs Australia: Virat Kohli’s animated reaction to Umesh Yadav getting boundary goes viral Tamil News: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி கொடுத்த ஃபேஸ் எக்ஸ்பிரெஸ்ஸன் மீம்ஸ்களாக நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பதிவிடப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
Sep 21, 2022 15:42 IST
Ind vs Aus: Kohli's Reaction To Umesh Yadav Being Hit For Boundaries Becomes An Instant Meme Tamil News

India vs Australia - Virat Kohli’s animated reaction

Virat Kohli Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் புதுமுக வீரராக டிம் டேவிட் இடம் பிடித்தார்.

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். இந்திய அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ராகுல் 55 ரன்கள் எடுத்தார். இதேபோல், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்த ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 71 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் எலிஸ் 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து இமாலய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதனால்ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 61 ரன்களும், மேத்யூ வேட் 45 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்திய தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். புவனேஷ்வர்குமார் 4 ஓவர்களில் 52 ரன்களை வாரி வழங்கியது பின்னடைவாக அமைந்தது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 23-ந்தேதி நாக்பூரில் நடக்கிறது.

உமேஷ் யாதவ் பந்துவீச்சும் விராட் கோலி முழியும்… மீம்ஸ் மழை பொழிந்த நெட்டிசன்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ​​​​இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இரண்டாவது ஓவரை வீசினார். அவரது பந்தை எதிர்கொண்ட தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அவரின் ஒரே ஓவரில்

4 பவுண்டரி விரட்டியடித்து மிரட்டினார். உமேஷ் யாதவின் இரண்டாவது பந்தை கிரீன் மிட்-ஆஃப் திசையில் பவுண்டரிக்கு அடித்தபோது, ​​​​கேமிரா கவலையுடன் அனிமேஷன் போல் முகபாவனை செய்த விராட் கோலியை படம்பிடித்தது.

கோலியின் அந்த எக்ஸ்பிரெஸ்ஸன் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு, இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த படத்திற்கு, அவர்கள் மீம்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.

"விராட் கோலியின் தோற்றம் ஒரு மீம்ஸ் ஆக மாறுவதை என்னால் பார்க்க முடிகிறது," என்று சில சிரிக்கும் எமோஜிகளுடன் ட்வீட் செய்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

#India Vs Australia #Sports #Social Media Viral #Viral #Indian Cricket #Cricket #Virat Kohli #Viral Photo #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment