Advertisment

இஷான் கிஷன் vs கே.எஸ் பரத்: ஆட்டத்தை மாற்றும் வீரர் வேண்டுமா? பெஸ்ட் கீப்பர் தேவையா?

இஷான் கிஷன் இதுவரை 48 முதல் தர போட்டிகளில் விளையாடி 38.96 சராசரியில் 2985 ரன்கள் எடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
IND vs AUS: KS Bharat or Ishan Kishan in India Playing XI? Decision pending for wiketkeeper role Tamil News

Rahul Dravid and Rohit Sharma to decide on KS Bharat or Ishan Kishan for wiketkeeper role for IND vs AUS WTC Final Tamil News

WTC Final 2023 - IND vs AUS: KS Bharat or Ishan Kishan in India Playing XI? Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

Advertisment

நியூசிலாந்திடம் முந்தைய சுழற்சியில் தோல்வியடைந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளது. மறுபுறம் பார்டர் கவாஸ்கர் டிராபி 2023ல் இந்தியா தோல்வி கண்ட ஆஸ்திரேலியா அதற்கு பதிலடி கொடுக்க உள்ளது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இஷான் கிஷன் vs கே.எஸ் பரத்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், விக்கெட் கீப்பர் இடத்தில் கே.எஸ் பாரத் அல்லது இஷான் கிஷான் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வது குறித்த முடிவு இன்று எடுக்கப்படலாம். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எனினும், அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய இருவரும் தான் ஒருவரை முடிவு செய்வார்கள்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் இஷான் கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர் இன்னும் டெஸ்ட் போட்டியில் அறிமுமாகத நிலையில், அவரை விளையாட வைக்க வேண்டுகின்றனர். ரசிகர்களில் ஒருவர், "இஷான் கிஷன் விளையாடினால் அது இந்தியாவின் பேட்டிங்கை பலப்படுத்தும், மேலும் கீப்பிங்கிழும் அவர் நன்றாக செயல்படுவார்" என்று பதிவிட்டுள்ளார்.

publive-image

மற்றொரு ரசிகர், “இஷான் கிஷன் பண்ட்டுக்கு மாற்றாக உள்ளார். கிஷன் பண்ட்டாக இந்தியாவுக்காக போட்டிகளையும் வெல்ல முடியும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இஷான் கிஷன் இதுவரை 48 முதல் தர போட்டிகளில் விளையாடி 38.96 சராசரியில் 2985 ரன்கள் எடுத்துள்ளார். 23 வயதான அவர் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் அவர் 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

மறுபுறம், கே.எஸ் பரத் இந்தியாவுக்காக பார்டர் கவாஸ்கர் டிராபியில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 28 வயதான அவர் 6 இன்னிங்ஸ்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும் ஆயரிப்படுத்தும் வகையில் பெரிய கேட்ச்களை அவர் பிடிக்கவில்லை.

publive-image

தற்போதைய நிலவரப்படி, இரண்டு விக்கெட் கீப்பர்களும் விளையாடுவதற்கு 50% வாய்ப்பு உள்ளது. கிஷன் இன்னும் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அறிமுகமாகவில்லை. அவர் இந்திய அணியில் பாரத்-க்கு பேக்-அப் விக்கெட் கீப்பராக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரும் பண்டைப் போலவே ஆக்ரோஷமான பேட்டர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்காக அவரை களமிறங்குவார்களாக என்பது சந்தேகம் தான்.

இதேபோல், சிலர் இஷான் கிஷனுக்கு ஆதரவு கொடுத்தாலும் பலரும் கே.எஸ் பரத்-க்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஏனெனில், டெஸ்டில் அறிமுகமாக ஒருவரை முக்கிய போட்டியில் களமிறக்குவது மிகப்பெரிய சூது. அதை ராகுல் டிராவிட் - ரோகித் சர்மா கூட்டணி செயல்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Bharath India Vs Australia Sports Cricket Indian Cricket Team Indian Cricket Ishan Kishan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment