Advertisment

IND vs AUS: 3 ஒரு நாள் போட்டிகள் நடக்கும் இடம், தேதி: ஆன்லைனில் லைவ் பார்ப்பது எப்படி?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs AUS ODI series full schedule, date, time, venue, squad & livestreaming in tamil

India vs Australia 2023, ODI series full schedule, squads, streaming Tamil News

India vs Australia ODI series Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

Advertisment

இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (17ம் தேதி) மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடருக்கான 2வது போட்டி (19ம் தேதி) விசாகப்பட்டினத்திலும், 3வது போட்டி (22ம் தேதி) சென்னையிலும் நடைபெற உள்ளன. இதையொட்டி, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணி அதன் முழு பலத்துடன் களமிறங்குகிறது. கேப்டன் ரோகித் குடும்பக் கடமைகள் காரணமாக தொடக்க ஆட்டத்தில் விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துகிறார். கடைசி இரண்டு போட்டிகளுக்கு ரோகித் மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரின் போது காயம் அடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

publive-image

இந்திய அணியில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ், சுழல் மன்னன் யுஸ்வேந்திர சாஹல் போன்ற முன்னணி வீரர்களும் உள்ளனர். நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். அவருடன் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

மறுபுறம், ஆஸ்திரேலிய அணியில் குடும்பக் கடமைகள் காரணமாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்ட கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒருநாள் தொடருக்கும் திரும்ப போவதில்லை என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார். இதனால், ஒருநாள் தொடரிலும் பொறுப்பு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்த இருக்கிறார். டெஸ்ட் தொடரின் போது முழங்கையில் முடி முறிவு ஏற்பட்ட டேவிட் வார்னரும் ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறார்.

publive-image

டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் சொந்த ஊருக்குச் சென்ற ஆஷ்டன் அகரும் இந்தியாவுக்கு விமானம் மூலம் திரும்ப உள்ளார். இவர்களுடன் மிட்செல் மார்ஷ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் அணியில் இணைக்கின்றனர். எனினும், அணியின் இரண்டு முன்னணி வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2023, ஒருநாள் தொடர்: இரு அணி வீரர்கள் பட்டியல்

இந்திய அணி

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.

ஆஸ்திரேலிய அணி

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ்.

தேதி | போட்டி | இடம் | நேரம்

மார்ச் 17, 2023 (வெள்ளிக்கிழமை) | இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி | வான்கடே ஸ்டேடியம் (மும்பை) | மதியம் 1:30 IST

மார்ச் 19, 2023 (ஞாயிறு) | இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி | டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம் (விசாகப்பட்டினம்) | மதியம் 1:30 IST

மார்ச் 22, 2023 (புதன்கிழமை) | இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி | எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் (சென்னை) | மதியம் 1:30 IST

இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: ஆன்லைனில் லைவ் பார்ப்பது எப்படி?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Pat Cummins Cricket Rohit Sharma Sports Indian Cricket Hardik Pandya Steve Smith Indian Cricket Team Ind Vs Aus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment