India Vs Australia ODI 2023 Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் வருகிற 17ம் தேதி முதல் தொடங்குகிறது. அன்று நடக்கும் முதல் போட்டி மும்பையிலும், 19ம் தேதி நடக்கும் 2வது போட்டி விசாகப்பட்டினத்திலும், 22ம் தேதி நடக்கும் 3வது போட்டி சென்னையிலும் நடைபெற உள்ளன.
மும்பையில் இந்திய வீரர்கள்

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் இன்று மும்பை வந்து சேர்ந்தனர். விராட் கோலி,
நட்சத்திர ஆல்-ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜா சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். அவருடன் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்திருக்கிறார். இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட்டிலும் முக்கிய வீரர்களாக உள்ள பலரும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளனர். சொல்லப்போனால், இந்தியா அதன் முழு பலத்துடன் களமாட உள்ளது.
Virat kohli and Shubman Gill at Ahmedabad Airport#viratkohli #Shubmangill pic.twitter.com/nyNMimtd4Q
— ft.wrogn18 (@Imlakshay_18) March 13, 2023
கேப்டனாக ஸ்மித்
பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப காரணங்களுக்காக நாடு திரும்பினார். இதனால் அவர் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளைத் தவறவிட்டார். அவரது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பு கேப்டனாக அணியை வழிநடத்தினார்.
கடந்த வாரம் அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். தற்போது அவர் குடும்பத்தினரை கவனித்து வரும் நிலையில், அவரால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒருநாள் தொடரிலும் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்த இருக்கிறார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பேசுகையில், “பேட் திரும்பி வரமாட்டார். குடும்பத்தினரை அவர் இன்னும் கவனித்து வருகிறார். துக்க நாளை கடந்து வரும் அவரது குடும்பத்தினருடனும், அவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன.” என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் பேட் காமின்சுக்கு பதிலாக நாதன் எல்லிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரின் போது முழங்கையில் முடி முறிவு ஏற்பட்ட டேவிட் வார்னரும் ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறார். டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் சொந்த ஊருக்குச் சென்ற ஆஷ்டன் அகரும் இந்தியாவுக்கு விமானம் மூலம் திரும்ப உள்ளார். இவர்களுடன் மிட்செல் மார்ஷ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் அணியில் இணைக்கின்றனர். எனினும், அணியின் இரண்டு முன்னணி வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா
இந்திய ஒருநாள் அணி
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil