India vs Australia T20: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கிரிக்கெட் தொடர் இது என்றால், 'தட் ஈஸ் நாட் எ நான் சென்ஸ்' என்று சொல்லலாம். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக, ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்க, இந்தியா வெற்றிப் பெற 174 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரோஹித், விராட், தவான் ஆகிய மூவரும் அவுட்டாகி இருப்பதால் இந்தியா தடுமாறுவது போல் தெரிகிறது. ஆனால், இறுதியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
மேலும் படிக்க - சொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா! டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா?
உலக சாம்பியன் அணிக்கும், உலக அரங்கில் பல வெற்றிகளை குவித்து வரும் அணிக்கும் இடையிலான ஆட்டம் என்பதால் இந்த எதிர்பார்ப்பு. அதுவும், சிங்கத்தை அதன் கோட்டைக்குள் சென்று சந்திக்கிறது இந்தியா.
ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை அடக்குவது என்பது சற்று ரிஸ்க் தான். இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் ரீசன்ட் ஃபார்ம், தர லோக்கலாக இருப்பதால், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இன்று முதல் டி20 போட்டி தொடங்கியுள்ளது. இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்(வி.கீ), க்ருனல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், பும்ரா, கலீல் அஹ்மத், யுவேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நமது tamil.indianexpress தளத்தில் நீங்கள் காணலாம்.
06:15 PM - ஆட்ட நாயகன் விருதை ஆடம் ஜம்பா வென்றார்.
05:45 PM - இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் மார்கஸ் ஸ்டாய்னிஸ். 15வது ஓவரை வீசிய ஸ்டாய்னிஸ் 11 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். அதிலும், அந்த ஓவரில் ஒரு ஃப்ரீ ஹிட் கிடைத்தும், அதனை அடிக்க முடியாமல் செய்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து, க்ருனல் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக்கை மிக நேர்த்தியாக, அதாவது ஸ்லோ பந்து வீசி அடுத்தடுத்து அவுட்டாக்கி, வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு வசப்படுத்திக் கொடுத்து அசத்திவிட்டார். இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா முழுவதும் தகுதியானது. நாளை மறுநாள், 23ம் தேதி அடுத்த போட்டியில் சந்திக்கலாம்.
05:40 PM - அஷ்வின் ட்வீட்
Such a closely fought game, too bad it dint go our way. This is going to be a cracking series. #AusvsInd
— Ashwin Ravichandran (@ashwinravi99) 21 November 2018
05:37 PM - இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் ரன் சேஸிங்கின் போது, தினேஷ் கார்த்திக் அடித்த ரன்கள்,
31(28)*
17(12)
4(1)*
18(12)*
2(2)*
39(25)*
29(8)*
31(34)*
0(0)*
30(13)
இறுதி வரை அவர் அவுட்டாகாமல் இருந்த எட்டு போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. அவர் அவுட்டான இரண்டு போட்டியிலும் இந்தியா தோற்றுள்ளது.
05:29 PM - 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.
05:28 PM - 1 பந்தில் 9 ரன்கள் தேவை
05:27 PM - வைட்... 2 பந்தில் 10 ரன்கள் தேவை
05:25 PM - தினேஷ் கார்த்திக் அவுட்.. 2 பந்தில் 11 ரன்கள் தேவை
05:24 PM - க்ருனல் பாண்ட்யா அவுட் . 3 பந்தில் 11 ரன்கள் தேவை
05:23 PM - 4 பந்தில் 11 ரன்கள்
05:22 PM - 5 பந்தில் 11 ரன்கள்
05:20 PM - 6 பந்தில் 13 ரன்கள் தேவை
05:18 PM - ரிஷப் பண்ட் அவுட்... 20 ரன்னில் டை ஓவரில் அவர் அவுட்டானார்.
05:12 PM - 12 பந்தில் 24 ரன்கள் தேவை
05:10 PM - தினேஷ் அடித்த சிக்ஸரை தடுக்க முயன்ற மேக்ஸ்வெல்... பட் இட்ஸ் சிக்ஸ்....
05:05 PM - களத்தில் நிற்பது ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக். 18 பந்துகளில் 35 ரன்கள் தேவை
04:50 PM - 76 ரன்களில் தவான் அவுட். ஸ்டேன்லேக் பந்தில் அவர் கேட்ச் ஆனார். இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவுட்.
04: 46 PM - ஆடம் ஜம்பா ஓவரில் கேப்டன் கோலி அவுட். 4 ரன்னில் அவர் வெளியேறினார்.
04:40 PM - விராட் கோலி களத்தில்
04:3o PM - தவான் 50 ரன்கள் அடித்தார். ஆனால், லோகேஷ் ராகுல் 13 ரன்னில் ஆடம் ஜம்பா ஓவரில் அவுட்டானார்.
04:16 PM - அணியின் ஸ்கோர் 53... இதில் தவான் அடித்தது 42.. கமான் தவான்
04:11 PM - லோகேஷ் ராகுல் களத்தில்... விராட் No.4 பொசிஷனில் களமிறங்கினால் பெட்டர் என நினைத்தோம்... நடந்து விட்டது.
04:10 PM - ரோஹித் அவுட். பெஹ்ரென்டோர்ஃப் பந்தில், கேப்டன் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித். நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது அவசியம். ஏனெனில், 174 ரன்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல.
04:00 PM - ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரோஹித் அடக்கி வாசிக்க, தவான் பந்துகளை சரி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
03:50 PM - முதல் ஓவரில் 2 பவுண்டரிகளுடன் இந்தியா 11 ரன்கள் எடுத்துள்ளது.
03:45 PM - டி20ல் இது மிகப்பெரிய டார்கெட் இல்லை என்றாலும், இது டி17 ஆக மாறி இருப்பதால், இந்தியாவுக்கு சில பாதகமான சூழ்நிலையே நிலவுகிறது.
முதலில் அவுட் ஃபீல்ட் ஈரமாக இருப்பதால் பந்து வேகமாக பவுண்டரியை நோக்கி செல்லாது. ஆஸ்திரேலியாவில் பவுண்டரிகள் பெரியது.
இதனால், வீரர்கள் பந்தை தூக்கி அடிக்கவே முயல்வார்கள். அதில், கேட்ச் ஆவதற்கு நிறைய வாய்ப்புள்ளது.
03:40 PM - ஆஸ்திரேலியா 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு டார்கெட் 174. வெற்றிப் பெறுமா இந்தியா?
03:35 PM - மேக்ஸ்வெல் அவுட் !
03:30 PM - மழை முற்றிலும் நின்றுவிட்டது. இதனால், ஆட்டம் 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டுள்ளது.
It an all clear. It will be a 17 over game. #TeamIndia will bowl 5 more deliveries. Play to restart 8:05PM local time #AUSvIND pic.twitter.com/z511TiKEF6
— BCCI (@BCCI) 21 November 2018
03:20 PM - 23 பந்துகளில் 46 ரன்கள் விளாசி இருக்கிறார் மேக்ஸ்வெல். கடந்த 2-3 வருடங்களாகவே டோட்டலாக அவுட் ஆஃப் பார்மில் இருந்து வரும் மேக்ஸ்வெல், நீண்ட நாட்களுக்குப் பிறகு, நான்கு சிக்ஸர்களை பார்க்கிங் செய்து, இன்னும் களத்தில் நிற்கிறார். அவர் இதே ஃபார்மை கடைப்பித்தால் இந்தியாவுக்கு கொஞ்சம் சிரமம் தான். ஆனால், ரசிகர்களுக்கு அது விருந்து தான். இந்த இந்தியா - ஆஸ்திரேலியா சீரிஸின் ஹாட் எகிறும்.
03:10 PM - ரசிகர்களுக்கு நல்ல செய்தி... மைதானத்தில் மழை நின்றுவிட்டது. ஆனால், அவுட் ஃபீல்ட் சரி செய்ய கொஞ்சம் நேரம் ஆகலாம் என தெரிகிறது.
03:00 PM - ஆஸ்திரேலியா தொடரில், முதல் போட்டியிலேயே இந்தியா சிறப்பாக விளையாடியதா என்று கேட்பதை தவிர்த்து, அடிப்படை கிரிக்கெட்டை ஒழுங்காக கடைப்பிடித்ததா என்ற சந்தேகம் பெரிதாக எழுந்துள்ளது. கேட்ச் மிஸ், ஃபீல்டிங் மிஸ், சரியான லெந்தில் பந்து வீசாமை போன்ற போல சொதப்பல்கள் இந்திய அணியில். அதுவும், கேப்டன் விராட் கோலியே கேட்ச், பீல்டிங் என தவறவிட்டது உண்மையில் வேதனை.
Reprieve for Marcus Stoinis!
Along with Maxwell, how much more damage can he do? ????
1st #AUSvIND T20I LIVE on SONY SIX and SONY TEN 3.#ChhodnaMat #SPNSports pic.twitter.com/L2pzBgdhGn
— SPN- Sports (@SPNSportsIndia) 21 November 2018
02:42 PM - ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
02:40 PM - இவ்வளவு நாளாக ஃபார்ம் அவுட்டில் இருந்த மேக்ஸ்வெல், இன்றைய ஆட்டத்தின் மூலம் மீண்டும் வந்துவிட்டாரோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
02:30 PM - க்ருனல் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அலற வைத்தார் மேக்ஸ்வெல்.
02:15 PM - இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியின் ஸ்கோர் கார்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.O படத்தின் விளம்பரம் ஒளிபரப்பானது.
02:12 PM - இந்திய பவுலர்களை அச்சுறுத்தி வந்த க்ரிஸ் லின் அவுட். குல்தீப் ஓவரில் 37 ரன்களில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்
02:02 PM - கேப்டன் ஆரோன் ஃபின்ச் அவுட்!. குல்தீப் ஓவரில், கலீலிடம் கேட்ச் கொடுத்து 27 ரன்களில் வெளியேறினார்.
02:00 PM - கலீல் அஹ்மத்தின் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்ட க்ரிஸ் லின். தம்பி கலீல்... அந்த லின்னுக்கு ஃபுல் லெந்த் பந்தையெல்லாம் போடாதீங்க... அதுவும் ஸ்டெம்ப்புக்குள்ள... பறக்க விட்டுடுவாப்ல!.
01:50 PM - வாவ்.... பேட்டிங் செய்வது ஆஸ்திரேலியா தானா? பவுலிங் செய்வது இந்தியா தானா? 7 ஓவரில் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் 6.00
01:45 PM - கலீல் அஹ்மத் வீசிய முதல் பந்திலேயே டேர்சி ஷார்ட் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். முதல் பந்திலேயே விக்கெட் கிடைத்தது கலீலுக்கு செம ஹேப்பி தான்.
01:40 PM - ஆஸ்திரேலியாவில் நமது கேட்ச் விடும் சம்பிரதாயத்தை இனிதே தொடங்கி வைத்தார் கேப்டன் விராட் கோலி. பும்ராவின் ஓவரில், டேர்சி ஷார்ட் அடித்த பந்தை ஷார்ட் கவரில் நின்றுக் கொண்டிருந்த கோலி தவற விட்டார்.
01:35 PM - ஃபின்ச், மேக்ஸ்வெல், க்ரிஸ் லின் ஆகியோரில் ஒருவராவது இறுதி வரை களத்தில் நிற்க வேண்டும். இல்லையெனில், ஆஸ்திரேலியா இன்று வெல்வது கடினம்.
01:30 PM - டைட் லைனில் இந்திய பவுலர்கள் வீசி வருகின்றனர். இது மிகவும் நல்ல விஷயம் நமக்கு.. ஏனெனில், இந்த டி20 தொடர்லாம் நமக்கு ஒரு பிராக்டீஸ் போன்று தான். நமது பவுலர்கள் சரியான லெந்தை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் டெஸ்ட் போட்டிகளில் நாம் சாதிக்க முடியும்.
01:20 PM - ஆஸ்திரேலிய தொடக்க பேட்ஸ்மேன்களாக ஃபின்ச் மற்றும் ஷார்ட் களமிறங்கியுள்ளனர். முதல் ஓவரை புவனேஷ் குமார் வீச, அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.
01:15 PM - ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல்
ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டி ஆர்சி ஷார்ட், க்ரிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், பென் மெக்டெர்மோட், அலெக்ஸ் கேரி, ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பில்லி ஸ்டேன்லேக்,
01:10 PM - இன்று மோதவுள்ள 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியல்
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்(வி.கீ), க்ருனல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், பும்ரா, கலீல் அஹ்மத்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.