Advertisment

Ind vs Aus T20I: மீண்டும் மீண்டும் விளையாடிய மழை! ஆட்டம் முழுவதும் ரத்து

LIVE Cricket Score, India vs Australia 2nd T20I : ஆட்டம் முழுவதும் ரத்து

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ind vs Aus T20I: மீண்டும் மீண்டும் விளையாடிய மழை! ஆட்டம் முழுவதும் ரத்து

Ind vs Aus T20I: மீண்டும் மீண்டும் விளையாடிய மழை! ஆட்டம் முழுவதும் ரத்து

Ind vs Aus 2nd T20I: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி, 19 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த போது, மழை பெய்யத் தொடங்கியது. இதனால், ஆட்டம் தற்போது தடைப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்ததால், ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஆஸ்திரேலியா 1-0 என தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அடுத்தப் போட்டி நவ.25(நாளை) நடைபெறுகிறது. இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நமது tamil.indianexpress தளத்தில் நீங்கள் காணலாம். நாளைய ஆட்டத்திலாவது இந்தியா வெற்றிப் பெறுகிறதா என்று பார்ப்போம். அப்படி ஒருவேளை மீண்டும் மழை வந்து ஆட்டம் தடைப்பட்டால், கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு தான்.

Advertisment

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதற்கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 21ம் தேதி நடந்த முதல் போட்டியில், ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.

வலு குறைந்த அணியாக ஆஸ்திரேலியா இருப்பதாக கருதப்பட்டாலும், இந்தியாவுடனான அன்றைய போட்டியில் அவர்கள் வெற்றிப் பெற்ற விதம், 'Don't Under Estimate Us' என்று என்று உரக்க சொன்னது போல் இருந்தது.

இந்நிலையில், இன்று இரண்டாவது போட்டி, மெல்போர்னில் தொடங்கியுள்ளது.

இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நமது tamil.indianexpress தளத்தில் நீங்கள் காணலாம்.

LIVE Score, India vs Australia 2nd T20I : இந்தியா- ஆஸ்திரேலியா 2-வது டி 20

04:30 PM - மீண்டும் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்ததால், ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஆஸ்திரேலியா 1-0 என தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

04:10 PM - அடப்போங்கப்பா.... மீண்டும் பெய்யத் தொடங்கியது மழை.

04:05 PM - இறுதியாக வந்த அறிவிப்பு, இந்தியாவுக்கு டார்கெட் 90 ரன்கள். அதை 11 ஓவர்களில் அடிக்க வேண்டும்.

03:50 PM - மீண்டும் ஆட்டம் மழையால் தடைப்பட்டது. தற்போது மழை விட்டுள்ளது. இதனால், ஆட்டம் 12 அல்லது 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்படலாம்.

03:30 PM - ரசிகர்களுக்கு தித்திப்பான செய்தி... எந்த நாட்டு ரசிகர்களுக்கு என்று கேட்கக் கூடாது.... இரு அணி ரசிகர்களில் யாருக்கு வேண்டுமாவது அது இருக்கலாம். மழை முற்றிலும் நின்றுவிட்டது. இந்தியாவுக்கு DLS விதிப்படி 19 ஓவரில், 137 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

03:20 PM - நல்ல செய்தி... ஆட்டம் இந்திய நேரப்படி 3:43க்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லைட்டாக மீண்டும் மழை எட்டிப் பார்ப்பது சற்று சோதனையே!.

03:10 PM - குறிப்பாக,கேப்டன் ஃபின்ச்சின் செயல்பாடு படு மோசம் என்பதை STATS மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 172 ரன்கள் விளாசிய பிறகு, டி20 போட்டிகளில் அடித்த ரன்கள் இவ்வளவு தான்.

16 (11)

3 (5)

47 (27)

1 (6)

0 (3)

3 (10)

1 (3)

7 (6)

27 (24)

0 (1)

10 ஆட்டத்தில் 105 ரன்கள். ஆவரேஜ் 10.50. ஸ்டிரைக் ரேட் 109.37

03:05 PM - ஆஸ்திரேலியா கேப்டன் ஃபின்ச் உட்பட, அனைத்து பேட்ஸ்மேன்களும் பெயிலியர் ஆகிவிட்டனர். சரியான ஷார்ட் தேர்வின்மையால் தான் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனார்கள்.

02:55 PM - களத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 19 ஓவரில் 132/7 ரன்கள் எடுத்துள்ளது.

02:45 PM - கலீல் அஹ்மது வீசிய 17வது ஓவரில், 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது. மே பி, இது கூட மேட்ச் ஆஸி.,யின் வின்னிங் தருணமாக இருக்கலாம்.

02:40 PM - மேகங்கள் சூழ்ந்து, காற்று அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது நிச்சயம் தவறு தான். என்ன நம்பிக்கையில், கேப்டன் ஃபின்ச் அந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை. இந்தியாவிற்கும் இது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும், 130 ரன்களுக்குள் சுருட்டிவிட்டால், இந்தியா வெற்றிப் பெற முயற்சி செய்யலாம்.

02:35 PM - 7வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. ஓரளவிற்கு நம்பிக்கை அளித்த கோல்டர் நைல் 18 ரன்னில் கேட்ச் ஆனார்.

02:25 PM - ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு விக்கெட் விழுந்து கொண்டிருக்கிறது. அலெக்ஸ் கேரே அவுட்.  விக்கெட் கீப்பரான கேரே, குல்தீப் யாதவ் ஓவரில், 4 ரன்னில் கேட்ச் ஆனார்.

02:15 PM - மேக்ஸ்வெல் அவுட்.. க்ருனல் பாண்ட்யாவின் Left-arm orthodox பந்தில் போல்டானார் மேக்ஸ்வெல். முதல் போட்டியில் 46 ரன்கள் அடித்து அசத்திய மேக்ஸ் 19 ரன்னில் அவுட்டாகி இருப்பது, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வீழ்ச்சி தான். ஐந்து விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டது. இனி சிரமம் தான், பார்ப்போம்.

publive-image

02:05 PM - மேக்ஸ்வெல், மெக்டெர்மோட் பார்ட்னர்ஷிப் களத்தில் நிற்கிறது. மேற்கொண்டு இவர்கள் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டால் பிழைக்கலாம்... இல்லையெனில் கஷ்டம் தான்.

02:00 PM - முதல் போட்டியின் 'ஹீரோ' ஸ்டாய்னிஸ் 4 ரன்னில் அவுட். பும்ரா ஓவரில், மோசமான ஷார்ட் தேர்வால் ஸ்டாய்னிஸ் வெளியேற்றப்பட்டார்.

publive-image

01:53 PM: தடுமாறிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. 'டேஞ்சரஸ்' க்ரிஸ் லின் மற்றும் டெர்சி ஷார்ட் ஆகியோர் அடுத்தடுத்து அவுட். இருவரும் லெப்ட் ஆர்ம் சீமர் கலீல் அஹ்மத் ஓவரில் காலியானார்கள்.

1:40 PM : தொடக்கத்திலேயே 2 கேட்சகளை இந்தியா கோட்டை விட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய 3-வது ஓவரில் ஸ்லிப்பில் நின்ற பாண்ட் சற்று கடினமான ஒரு கேட்ச்சையும்,  ஃபைன் லெக் திசையில் எல்லைக்கோடு அருகே நின்ற பும்ரா மற்றொரு கேட்சையும் மிஸ் செய்தனர்.

1:30: ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. 2-வது பந்திலேயே ஆஸ்திரேலிய கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ஆரோன் பிஞ்சை அவுட் செய்தார் இந்திய ஓபனிங் பவுலர் புவனேஷ்வர்குமார்.

Virat Kohli India Vs Australia Rohit Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment