தவானின் எலக்ட்ரிஃபை ஸ்டார்ட்... கோலியின் வெரிஃபைட் அரைசதம்... இந்தியா அசத்தல் வெற்றி

19.4வது ஓவரில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Ind vs Aus 3rd T20I: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலியா, தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தற்போது தடுமாறி வருகிறது. நான்கு விக்கெட்டுகளில் க்ருனல் பாண்ட்யா மட்டும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு. இறுதிக் கட்டத்தில், ஸ்டாய்னிஸ் மற்றும் கோல்டர் நைல்-ன் சுமாரான அதிரடியால், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய பவுலர்களை அச்சுறுத்தி வந்த தவானை LBW ஆக்கினார் ஸ்டார்க்.ஒரு நல்ல யார்க்கர் பந்தில் தவானை 41 ரன்னில் வெளியேற்றினார். 19.4வது ஓவரில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம், 1-1 என டி20 தொடரை டிரா செய்தது இந்தியா.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதற்கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 21ம் தேதி நடந்த முதல் போட்டியில், ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.

கடந்த 23ம் தேதி நடந்த இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று மூன்றாவது போட்டி நடைபெறுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா 1-0 என லீடிங்கில் இருப்பதால், தொடரை இழக்காமல் இன்றைய போட்டியில் இந்திய அணி கட்டாயம் வென்றாக வேண்டும்.

இன்றும் மழை பெய்யுமா? என்று ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம். ஏனெனில், சிட்னியில் இன்று மழை வருவதற்கான அறிகுறி இல்லை. 22 டிகிரி செல்சியல் வெப்பநிலை அங்கு நிலவுகிறது.

ஈரப்பதம் – 49%
காற்று – 24km/h

ஆக, இன்று போட்டி முழுமையாக நடைபெறுவது உறுதி.

இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நமது tamil.indianexpress தளத்தில் நீங்கள் காணலாம்.

05:10 PM – கேப்டன் விராட் கோலி பேசிய போது, “180 வரை ஸ்கோர் செல்லும் என நினைத்தேன். கிட்டத்தட்ட 15 ரன்கள் குறைவாக எங்கள் பவுலர்கள் கொடுத்தார்கள். அது எங்களுக்கு போனஸ்.. உண்மையில், இறுதிக் கட்டத்தில் அந்த 15 ரன்கள் எங்களின் பேட்டிங்கிற்கு உதவியது” என்றார்.

05:05 PM – ஆட்ட நாயகன் விருது க்ருனல் பாண்ட்யாவுக்கும், தொடர் நாயகன் விருது ‘கப்பர்’ தவானுக்கும் வழங்கப்பட்டது.

05:00 PM – சர்வதேச டி20 போட்டிகளில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட ரன் சேஸ்களில் விராட் கோலி அடித்த ரன்கள்

26*
31
78*
21
29
36*
54
57*
72*
50
49
56*
41*
55*
82*
82
22*
20*
43
61*

04:50 PM – கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல், 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தார்.

04:45 PM – 19.4வது ஓவரில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம், 1-1 என டி20 தொடரை டிரா செய்தது இந்தியா.

04:40 PM – விராட் கோலி அரைசதம்… வெற்றியின் விளிம்பில் இந்தியா.

04:30 PM – வாவ் கோலி… டை ஓவரில் பவுண்டரி, சிக்ஸ். சற்று இறங்கி நடந்து வந்து அசத்தலாக அடித்த சிக்ஸ் அட்டகாசம்.

04:18 PM – ரிஷப் பண்ட் முதல் பந்திலேயே டை ஓவரில் அவுட்டானார்.

04:16 PM – அப்பாவி பையன் லோகேஷ் ராகுலை 14 ரன்னில் அவுட்டாக்கினார் மேக்ஸ்வெல். லாங் ஆஃபில் நின்றுக் கொண்டிருந்த கோல்டர் நைல்லிடம் கேட்ச் கொடுத்து சோகத்துடன் வெளியேறினார் லோகேஷ். (அந்த பையனை கொஞ்சமாச்சும் அடிக்க விடுங்கப்பா!)

04:05 PM – பத்து ஓவர்கள் முடிவில், இந்தியா 92/2.

03:53 PM – ஆடம் ஜம்பா ஓவரில், 23 ரன்னில் போல்டானார் ரோஹித். இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் சரிவு.

03:48 PM – ஆஸ்திரேலிய பவுலர்களை அச்சுறுத்தி வந்த தவானை LBW ஆக்கினார் ஸ்டார்க்.ஒரு நல்ல யார்க்கர் பந்தில் தவானை 41 ரன்னில் வெளியேற்றினார்.

03:42 PM – ஐந்தாவது ஓவரை வீசிய ஸ்டாய்னிசையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி என 22 ரன்கள் விளாசப்பட்டது.

03:40 PM – நான்காவது ஓவரை வீசிய கோல்டர் நைல்லை நையப் புடைத்தனர் இந்திய ஓப்பனர்கள். அந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என 20 ரன்கள் விளாசப்பட்டது.

03:30 PM – கோல்டர் நைல் ஓவரை மட்டும் டார்கெட் செய்து ரோஹித்தும், தவானும் ஆடி வருகிறார்கள். ஸ்டார்க் மிகவும் எச்சரிக்கையுடன் அணுகி வருவது சிறப்பு.

03:20 PM – களமிறங்கியது இந்தியா…. வெற்றிப் பெறுமா?

03:15 PM – இன்னும் சில நொடிகளில் இந்தியா தனது பேட்டிங்கை தொடங்குகிறது.

03:05 PM – நடப்பு தொடரில் குல்தீப்பின் செயல்பாடு:

Gabba: 2/24 (9 டாட் பந்துகள்)
MCG: 1/23 (12 டாட் பந்துகள்)
SCG: 1/19 (13 டாட் பந்துகள்)
Series: 12 ஓவர்களில் 4/66 (34 டாட் பந்துகள்; ER 5.50)

02:57 PM – இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு. இறுதிக் கட்டத்தில், ஸ்டாய்னிஸ் மற்றும் கோல்டர் நைல்-ன் சுமாரான அதிரடியால், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா.

02:47 PM – க்ரிஸ் லின் ரன் அவுட்

02:37 PM – க்ருனல் பாண்ட்யா ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடித்த கேரி, மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு தூக்க எண்ணி, டீப் மிட் விக்கெட்டில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த மேட்சில், பாண்ட்யாவின் நான்காவது விக்கெட் இது.

02:25 PM – மேக்ஸ்வெல் அவுட்… க்ருனல் பாண்ட்யா ஓவரில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, ரோஹித்திடம் கேட்ச் ஆனார் மேக்ஸ்வெல்.

02:15 PM – கேப்டன் ஃபின்ச் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 172 ரன்கள் விளாசிய பிறகு, டி20 போட்டிகளில் அடித்த ரன்கள் இவ்வளவு தான்.

16 (11)
3 (5)
47 (27)
1 (6)
0 (3)
3 (10)
1 (3)
7 (6)
27 (24)
0 (1)
28 (3)

02:05 PM – 10வது ஓவரை வீசிய க்ருனல் பாண்ட்யா, முதல் இரண்டு பந்துகளில் டேர்சி ஷார்ட் மற்றும் மெக்டெர்மோட் ஆகியோரை அடுத்தடுத்து எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார்.

02:00 PM – ஃபின்ச் அவுட் குல்தீப் ஓவரில், ஃபின்ச் ஸ்வீப் செய்ய முயல், அது டாப் எட்ஜ் ஆகி, ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்றிருந்த க்ருனல் பாண்ட்யா கைகளில் தஞ்சம் புகுந்தது.

01:55 PM –  க்ருனல் பாண்ட்யா ஓவரில், கேப்டன் ஃபின்ச் கேட்சை கோட்டைவிட்டார் ரோஹித் ஷர்மா. பாண்ட்யாவுக்கு ஏகத்துக்கு ஏமாற்றம்.

01:50 PM – குல்தீப்பின் முதல் ஓவரிலேயே எல்பிடபிள்யூ அப்பீல் கேட்கப்பட்டது. ஆனால், ஸ்டெம்புகளுக்கு வெளியே பந்து பட்டதால், விக்கெட் கிடைக்கவில்லை.

01:40 PM – ஓவருக்கு ஒரு பவுண்டரி… ஆஸ்திரேலியாவிடம் ஒரு நிதானமான ஸ்டார்ட் தெரிகிறது. பார்க்கலாம்.

01:32 PM – இருதரப்பு டி20 தொடரில், இந்திய அணி இதுவரை மூன்றாவது டி20 போட்டியில் இதுவரை தோற்றதே கிடையாது. அந்த சாதனையை இன்றும் தக்க வைக்குமா?

Bt Aus by 7 wkts, 2016
Bt SL by 9 wkts, 2016
Bt Zim by 3 runs, 2016
Bt Eng by 75 runs, 2017
Bt NZ by 6 runs, 2017
Bt SL by 5 wkts, 2017
Bt SA by 7 runs, 2018
Bt Eng by 7 wkts, 2018
Bt WI by 6 wkts, 2018

01:25 PM – ஆட்டம் தொடங்கியது. புவனேஷின் முதல் ஓவரில் எட்டு ரன்கள்.

01:10 PM – டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்திருந்தாலும், விராட் கோலியின் ஆப்ஷன் பவுலிங் தான். எனவே, கோலி டாஸ் ஜெயித்திருந்தாலும் நாம ஃபீல்டிங் தான் செய்திருப்போம். பிட்சை பொறுத்தவரை, நன்கு டிரையாக உள்ளது. பேட்டிங் செய்வதற்கு ஏற்றார் போல் உள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 10 டி20 போட்டிகளில் 7ல் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது.

01:00 PM – இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் Behrendorff-க்கு பதிலாக டேஞ்சரஸ் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

12:55 PM – ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். மூன்றாவது போட்டியிலும் கோலி டாஸ் இழந்துள்ளார். டாஸ் தோற்றால் என்ன, மேட்ச் நம்ம கையில தான்!

12:50 PM – ஹாய், ஹலோ ரசிகர்களே… நான் உங்கள் அன்பரசன் ஞானமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் இருந்து.. இன்று ஒரு அபாரமான மேட்சை பார்க்கவிருக்கிறோம். அதுவும், முழு மேட்சை. ஆஸ்திரேலியா லீடிங்கில் உள்ள இந்த நேரத்தில், தொடரை இழக்காமல் இருக்க, இன்றைய போட்டியை நாம் வென்றாக வேண்டும். இந்த தருணத்தில் இருந்து போட்டியின் லைவ் அப்டேட்ஸ்களை உங்களுக்கு அளிக்க காத்திருக்கிறேன்… தெறிக்க விடலாமா!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close