/tamil-ie/media/media_files/uploads/2022/09/tamil-indian-express-2022-09-17T172510.149-2.jpg)
IND VS AUS T20 series
IND VS AUS T20 Series 2022 | Australia Tour of India 2022 | IND VS AUS T20 தொடர் 2022 | ஆஸ்திரேலியா டூர் ஆஃப்இந்தியா 2022: ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி வருகிற 20-ஆம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. நாக்பூரில் 2-வது போட்டி 23-ஆம் தேதியும், இறுதி மற்றும் 3-வது போட்டி 25 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்காக தயாராகி வருகிறது. இதற்கிடையில், இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடர்களில் சொந்த மண்ணில் விளையாடுகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறிய நிலையில், அந்த அழுத்தத்தில் இருந்து வெளியேற தற்போது கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடர்களில் வெற்றி பெறும் பட்சத்தில், டி20 உலகக் கோப்பைக்கான உத்வேகமும் உற்சாகமாகமும் கிடைக்கும். எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய தீயாய் செயல்படும் என்று எதிர்பார்க்காலம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/tamil-indian-express-2022-09-18T164650.423.jpg)
மறுபுறம் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, உலகில் தரமான அணியாக வலம் வருகிறது. அந்த அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் வாஷ்-அவுட் செய்த உத்வேகத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமாக உள்ள டிம் டேவிட் அந்த அணியின் எக்ஸ்-ஃபேக்டராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர்தான் 'பிரம்மாஸ்திரா' என்றும் கிரிக்கெட் ரசிர்கர்கள் கூறி வருகிறார்கள். அவருடன் இணைந்து பேட்டிங்கில் மிரட்ட க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் போன்ற முன்னணி வீரர்களும் உள்ளனர்.
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இருந்த அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முழங்கால் காயத்தாலும், ஆல்-ரவுண்டர்கள் மிட்செல் மார்ஷ் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தாலும், மார்கஸ் ஸ்டோனிஸ் விலாபகுதி காயத்தாலும் விலகி இருக்கின்றனர். அவர்களுக்கு பதிலாக நாதன் எலிஸ், டேனியல் சாம்ஸ், சீன் அப்போட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா: போட்டி - முழு அட்டவணை
செப்டம்பர் 20 - 1வது டி20, மொஹாலி
செப்டம்பர் 23 - 2வது டி20, நாக்பூர்
செப்டம்பர் 25 - 3வது டி20, ஹைதராபாத்
இந்தியா vs ஆஸ்திரேலியா: இரு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
/tamil-ie/media/media_files/uploads/2022/09/tamil-indian-express-2022-09-18T164711.013.jpg)
இந்தியா:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா
ஆஸ்திரேலியா:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டிம் டேவிட், ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், நாதன் எலிஸ், ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஆடம் ஜம்பா.
இந்தியா vs ஆஸ்திரேலியா: டெலிகாஸ்ட் மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்கள்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பாகும். மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.