Border Gavaskar Trophy Tamil News: இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 9ம் தேதி மகாராஷ்டிராவில் மாநிலம் நாக்பூரில் தொடங்குகிறது. இதையொட்டி பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூரு புறநகரான ஆலூரில் உள்ள கர்நாடகா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல், நாகபூரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் நேற்று முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு உதவும் டூப்ளிகேட் அஸ்வின்
இந்திய மண்ணில் நடக்கும் இந்த டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்கம் மேலோங்கி இருக்கும். இந்திய அணியில் அஸ்வின், அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அஸ்வினை போல் சுழற்பந்து வீசும் மகேஷ் பித்தியா (வயது 21) என்ற பவுலரை தேடிப்பிடித்து, வலைப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறது ஆஸ்திரேலியா. மகேஷ் பித்தியா குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சுழலை சமாளிப்பதே முக்கிய டாஸ்க்; பயிற்சிக்காக 8 ஸ்பின்னர்களை குவித்த பி.சி.சி.ஐ
மறுபுறம், ஆஸ்திரேலியாவின் சுழலை சமாளிக்க இந்திய கிரிக்கெட் அணி 8 ஸ்பின்னர்களை குவித்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் ஜடேஜா, அஷ்வின், அக்சர் மற்றும் குல்தீப் ஆகிய 4 வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் ஐபிஎல் நட்சத்திரங்களான ராகுல் சாஹர் மற்றும் ஆர் சாய் கிஷோர் போன்ற வீரர்களும் இணைந்துள்ளனர். தற்போது பிசிசிஐ வாஷிங்டன் சுந்தர் மற்றும் சவுரப் குமார் ஆகிய இருவரையும் வலைப்பயிற்சியில் பந்துவீச அழைப்பு விடுதுள்ளது.
வேகப்பந்து வீச்சுக்கு முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் அணியில் இருப்பதால், பிசிசிஐ மேலும் வேகப்பந்து வீச்சாளர்களை சேர்க்கவில்லை. இருப்பினும், சில உள்ளூர் வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீச்ச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆடுகளம் சுழலுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், இந்தியா 8-ஸ்பின்னர்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
And the practice continues….#INDvAUS https://t.co/qwRUSxcLBY pic.twitter.com/5mECrOjWiG
— BCCI (@BCCI) February 3, 2023
சவுரப் குமார் சமீபத்தில் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணிக்கு இரண்டு முறை அழைக்கப்பட்டார். அவர் இன்னும் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகவில்லை. சாய் கிஷோர் மற்றும் ராகுல் சாஹர் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சுந்தர் இதற்கிடையில் காயம் காரணமாக 2021 முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அக்சர் படேலின் எழுச்சியும் அவர் திரும்புவதை தாமதப்படுத்தியுள்ளது. ஆயினும்கூட, இந்த தொடருக்கான இந்தியாவின் தயாரிப்பில் அவர் முக்கிய வீரரராக கருதப்படுகிறார்.
அணியில் ஏற்கனவே நான்கு தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா மீண்டும் களமிறங்க உள்ளார், அதே நேரத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அணியில் உள்ளனர். எனினும், இந்த இவர்களில் மூன்று பேருக்கு மட்டுமே ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil