Tickets for India vs Australia 2nd Test in New Delhi ‘sold out’ Tamil News: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. நாக்பூரில் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 9) முதல் தொடங்கி நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
அடுத்ததாக, இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வருகிற வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 17) முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசியுள்ள டிடிசிஏ இணைச் செயலாளர் ராஜன் மஞ்சந்தா, “டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. நாங்கள் ஃபுல் ஹவுஸ் எதிர்பார்க்கிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு டெல்லியில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
2017 டிசம்பருக்குப் பிறகு டெல்லி தனது முதல் டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. அதன் அருண் ஜெட்லி ஸ்டேடியம் ஏறக்குறைய 40,000 பேர் அமரும் வசதி கொண்டது. மொத்தம் 24,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அதே நேரத்தில் 8000 டிடிசிஏ உறுப்பினர்களிடையே விநியோகிக்கப்பட்டது, இது அங்குள்ள பொதுவான விதிமுறை. மீதமுள்ள இருக்கைகள் விளையாட்டில் கலந்துகொள்ளும் பிரமுகர்களுக்கு பயன்படுத்தப்படும். ஸ்டாண்டின் ஒரு பகுதி விளையாட்டுக்கான பாதுகாப்பை வழங்கும் குடும்பங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் நடந்த தொடரின் தொடக்க டெஸ்ட் போட்டி ஆரோக்கியமான கூட்டத்தை ஈர்த்தது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நல்ல விளம்பரமாக அமைந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil