Worldcup 2023 | india-vs-australia | chennai-weather-report | chepauk: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்கியது. 10 அணிகள் களமாடியுள்ள இந்த தொடரின் தொடக்கப் போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறியது. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரில் இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அதன் தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வருகிற ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்திய - ஆஸி., போட்டிக்கு மழை ஆபத்து இருக்கா?
சென்னையின் பல பகுதிகளில் இன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியின் போது மழைப் பொழிவு இருக்குமா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று மழை பெய்யுமா என்பது குறித்து வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. இதன்படி, இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளின் தொடக்க போட்டி நடக்கும் சென்னையில் ஞாயிறு அன்று வழக்கமான ஈரப்பதத்துடன் பிரகாசமாகவும், வெயிலாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், லேசான ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்காது. போட்டி முழுவதுமாக நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“