India vs Bangladesh 1st ODI Match 2022 on 4th December, Dhaka Tamil News
India vs Bangladesh {IND VS BAN} 1st ODI Match 2022 Live Streaming | இந்தியா vs வங்கதேசம் {IND VS BAN} முதல் சர்வதேச ஒருநாள்போட்டி 2022 நேரடி ஒளிபரப்பு: வங்க தேச மண்ணிற்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இந்தியா - வங்க தேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை (டிசம்பர் 4 ஆம் தேதி) டாக்காவில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Advertisment
கேப்டன் தமீம் இக்பால் விலகல் - ஜடேஜா களமாடுவாரா?
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்க தேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமிம் இக்பால் விலகியுள்ளார் . பயிற்சியின்போது தமீம் இக்பால் காயம் அடைந்ததால் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று வங்க தேச அணி தேர்வுக்குழு தலைவர் மின்ஹாஜூல் அபேடின் தெரிவித்துள்ளார்
Advertisment
Advertisements
மறுபுறம், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்னும் 100% உடற்தகுதியை அடையாத நிலையில் அவர் இந்த தொடர்களில் விளையாட மாட்டார். இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளும் ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார்.
இந்தியா vs வங்க தேசம்: ஒருநாள் தொடர் 2022: அட்டவணை மற்றும் அணி வீரர்கள் பட்டியல் பின்வறுமாறு:-
இந்தியா vs வங்க தேசம்: ஒருநாள் தொடர் அட்டவணை (IST - இந்திய நேரப்படி)
முதலாவது ஒருநாள் போட்டி, டிசம்பர் 4, பிற்பகல் 12:30 IST - ஷேர் பங்களா தேசிய மைதானம், டாக்கா.
2வது ஒருநாள் போட்டி, டிசம்பர் 7, பிற்பகல் 12:30 IST - ஷேர் பங்களா தேசிய மைதானம், டாக்கா.
3வது ஒருநாள் போட்டி, டிசம்பர் 10, பிற்பகல் 12:30 IST - ஷேரே பங்களா தேசிய மைதானம், டாக்கா.
இந்தியா vs வங்க தேசம்: இந்தியாவில் ஒளிபரப்பும் சேனல்?
சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இந்தியாவில் இந்த சுற்றுப்பயணத்தின் போட்டிகளை ஒளிபரப்பும் மற்றும் நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை வாங்கியுள்ளது. பின்வரும் சேனல்கள் போட்டிகளை டிவியில் ஒளிபரப்பும்:
Sony Sports Ten 3, Sony Sports Ten 3 HD (இந்தி), Sony Sports Ten 4, Sony Sports Ten 4 HD (தமிழ் மற்றும் தெலுங்கு), Sony Sports Ten 5 மற்றும் Sony Sports Ten 5 HD (ஆங்கிலம்).
இந்தியா vs வங்க தேசம்: லைவ் ஸ்ட்ரீமிங்?
இந்தியா - வங்க தேச அணிகள் மோதும் ஒருநாள் தொடரை ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்கில் அனைத்து மொழிகளிலும் சோனி எல்ஐவி இணையதளம் மற்றும் பயன்பாட்டில் (Sony LIV app) கிடைக்கும். போட்டிகளை நேரலையில் காண ரசிகர்கள் சந்தா கட்ட வேண்டியிருக்கும்.