India vs Bangladesh {IND VS BAN} 1st ODI Match 2022 Live Streaming | இந்தியா vs வங்கதேசம் {IND VS BAN} முதல் சர்வதேச ஒருநாள்போட்டி 2022 நேரடி ஒளிபரப்பு: வங்க தேச மண்ணிற்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இந்தியா – வங்க தேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை (டிசம்பர் 4 ஆம் தேதி) டாக்காவில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

கேப்டன் தமீம் இக்பால் விலகல் – ஜடேஜா களமாடுவாரா?
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்க தேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமிம் இக்பால் விலகியுள்ளார் . பயிற்சியின்போது தமீம் இக்பால் காயம் அடைந்ததால் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று வங்க தேச அணி தேர்வுக்குழு தலைவர் மின்ஹாஜூல் அபேடின் தெரிவித்துள்ளார்
மறுபுறம், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்னும் 100% உடற்தகுதியை அடையாத நிலையில் அவர் இந்த தொடர்களில் விளையாட மாட்டார். இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளும் ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார்.
இந்தியா vs வங்க தேசம்: ஒருநாள் தொடர் 2022: அட்டவணை மற்றும் அணி வீரர்கள் பட்டியல் பின்வறுமாறு:-
இந்தியா vs வங்க தேசம்: இரு அணி வீரர்கள் பட்டியல்
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் , ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர் மற்றும் குல்தீப் சென்.
வங்க தேசம் அணி:
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, யாசிர் அலி, ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், அபிஃப் ஹொசைன் துருபோ, எபடோட் ஹொசைன், அனாமுல் ஹக், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம் ( விக்கெட் கீப்பர்) நூர் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், நசும் அகமது மற்றும் தஸ்கின் அகமது.
இந்தியா vs வங்க தேசம்: ஒருநாள் தொடர் அட்டவணை (IST – இந்திய நேரப்படி)
முதலாவது ஒருநாள் போட்டி, டிசம்பர் 4, பிற்பகல் 12:30 IST – ஷேர் பங்களா தேசிய மைதானம், டாக்கா.
2வது ஒருநாள் போட்டி, டிசம்பர் 7, பிற்பகல் 12:30 IST – ஷேர் பங்களா தேசிய மைதானம், டாக்கா.
3வது ஒருநாள் போட்டி, டிசம்பர் 10, பிற்பகல் 12:30 IST – ஷேரே பங்களா தேசிய மைதானம், டாக்கா.
இந்தியா vs வங்க தேசம்: இந்தியாவில் ஒளிபரப்பும் சேனல்?
சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இந்தியாவில் இந்த சுற்றுப்பயணத்தின் போட்டிகளை ஒளிபரப்பும் மற்றும் நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை வாங்கியுள்ளது. பின்வரும் சேனல்கள் போட்டிகளை டிவியில் ஒளிபரப்பும்:
Sony Sports Ten 3, Sony Sports Ten 3 HD (இந்தி), Sony Sports Ten 4, Sony Sports Ten 4 HD (தமிழ் மற்றும் தெலுங்கு), Sony Sports Ten 5 மற்றும் Sony Sports Ten 5 HD (ஆங்கிலம்).
இந்தியா vs வங்க தேசம்: லைவ் ஸ்ட்ரீமிங்?
இந்தியா – வங்க தேச அணிகள் மோதும் ஒருநாள் தொடரை ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்கில் அனைத்து மொழிகளிலும் சோனி எல்ஐவி இணையதளம் மற்றும் பயன்பாட்டில் (Sony LIV app) கிடைக்கும். போட்டிகளை நேரலையில் காண ரசிகர்கள் சந்தா கட்ட வேண்டியிருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil