இந்தியாவுக்கு எதிராக முதல் டி20 வெற்றி – வங்கதேசம் சாதனை!

Ind vs Ban 1st T20 Updates: இந்தியா vs வங்கதேசம் முதல் டி20 கிரிக்கெட் போட்டி, வங்கதேசம் வெற்றி

By: Updated: November 4, 2019, 07:17:29 AM

India vs Bangladesh 1st T20 Updates: இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு, இதுவரை ஒரு முழு தொடரை இந்தியா நடத்தியதில்லை. இப்போது முதன் முதலாக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவாக இன்றைய முதல் டி20 போட்டி நடைபெற்றது.

2016 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் டி20 வெற்றி சதவிகிதம் 63.83 என்று உள்ளது. இருப்பினும், இந்தியா டெஸ்ட் போட்டிகளில் அசத்துவது போல, டி20 களங்களில் முழுமையாக டாமினேட் செய்வது கிடையாது. இந்தியா டி20 தொடர்களில் வெற்றிப் பெறுவது போல் தெரிந்தாலும், அந்த ‘டாமினேஷன்’ என்பது மிஸ் ஆகிக் கொண்டே இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரியும்.

இந்நிலையில், வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்வது கூடுதல் கவனத்தைப் பெற்றது. கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் கேப்டனாக செயல்படுவது நமக்கு தெரிந்த ஒன்றே.

வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன், தமீம் இக்பால் இல்லாவிட்டாலும் பலம் பொருந்திய அணியாகவே அச்சுறுத்துகிறது. கணிக்க முடியாத சவுமியா சர்கர், லிட்டன் தாஸ், ‘ஆல் டைம் ஃபார்ம்’ பிளேயர் முஷ்பிகுர் ரஹீம், அச்சுறுத்தும் மஹ்மதுல்லா என்று பேட்டிங் வலிமையாக இருந்தது.

இந்தியா பேட்டிங்

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹ்மதுல்லா பவுலிங்கை தேர்வு செய்தது.


இந்திய அணியில் இளம் ஆல் ரவுண்டர் ஷிவம் துபே சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி பிளேயிங் XI

ரோஹித் ஷர்மா (c), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(wk), ஷிவம் துபே, க்ருனால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, யுவேந்திர சாஹல்.

ஷஃபியுல் இஸ்லாம் ஓவரில், 9 ரன்களில் ரோஹித் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள்:

ரோஹித் ஷர்மா (இந்தியா) – 2451 ரன்கள்
விராட் கோலி (இந்தியா) – 2450 ரன்கள்
மார்டின் கப்டில் (நியூசி.,) – 2326 ரன்கள்
சோயிப் மாலிக் (பாக்.,) – 2263 ரன்கள்
பிரண்டன் மெக்கலம் (நியுசி., ) – 2140 ரன்கள்

லோகேஷ் அவுட்:

17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல், அமினுள் இஸ்லாம் ஓவரில் கேப்டன் மஹ்மதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷ்ரேயாஸ் அவுட்:

13 பந்துகளில் 22 ரன்கள் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர், அமினுள் இஸ்லாம் ஓவரில் கேட்ச்சானார்.

இறுதிக் கட்டத்தில் 5 பந்துகளில் 14 ரன்களை வாஷிங்டன் சுந்தர் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் அணியில், லிட்டன் தாஸ் 7 ரன்களில் தீபக் சாஹர் ஓவரில் கேட்ச் ஆனார்.

இருப்பினும், நைம் – சர்கார் ஜோடி சிறப்பாக ஆடி வருகிறது. 6 ஓவர்களில் அந்த அணி 45-1

வங்கதேசம் 2வது விக்கெட்

சாஹல் ஓவரில், நைல் 26 ரன்களில் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சௌமியா சர்கார் 39 ரன்கள் எடுத்து அவுட்டானாலும், முஷ்பிகுர் ரஹீம் 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து, இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார்.

கலீல் அஹ்மது வீசிய 19வது ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரிகள் அடித்து ரஹீம் மிரட்டினார். அதேசமயம், இரு முறை மிக மிக எளிதான அவுட் வாய்ப்பில் இருந்து ரஹீம் எஸ்கேப் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தியாவும் – வங்கதேசமும் 9 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், வங்கதேசம் பெற்ற முதல் வெற்றி இதுவேயாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ind vs ban 1st t20 live streaming when and where to watch

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X