டி20 போட்டிகளில் அப்படி இப்படி என சொதப்பினாலும், டெஸ்ட் போட்டிகளில் மத கஜ ராஜாவாக வலம் வருகிறது '2019 இந்தியா'. அதுவும் பும்ரா இல்லாமலேயே தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்தது அதகளம்.
இப்போது வங்கதேசத்தை சத்தமே இல்லாமல், வழித்து எடுத்து சுத்தம் செய்து வருகிறது இந்திய அணி.
16, 2019
இந்தூரில் கடந்த நவ.14ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, இஷாந்த், உமேஷ் காட்டிய வேகத்திலும், குத்தி எகிறிய பவுன்சிலும் ஆட்டம் கண்டு போனது வங்கப் புலிகள்.
மேலும் படிக்க - தோனி என்ன செய்திருப்பார்? தினேஷ் கார்த்திக்கின் திறமையை நாம மிஸ் பண்ணிட்டோமா? (வீடியோ)
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து விட்டது. மாயங்க் அகர்வால் 243 ரன்கள் குவிக்க, துக்கத்தை வெளியே சொல்ல முடியாமல் கண்ணீரை அடக்கிக் கொண்டது வங்கதேசம்.
அந்த அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து தோல்வியை நோக்கி படையப்பா பட ஸ்பீடுடன் சென்றுக் கொண்டிருக்கிறது.
இறுதியில், 213 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட்டாக, இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.