India vs Bangladesh Chennai Test Live Streaming: கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடைவெளிக்குப் பிறகு, சென்னையில் தொடங்கி நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி களம் திரும்பியுள்ளது. இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் வெற்றியுடன் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் இலங்கை அணியிடம் ஏமாற்றமளிக்கும் வகையில் 0-2 ஒருநாள் போட்டித் தொடரில் தோல்வியை எதிர்கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh Test Series Live Streaming: When and where to watch IND vs BAN 1st Test live?
இதற்கிடையில், ராவல்பிண்டியில் சமீபத்தில் முடிவடைந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய வங்கதேசம் எழுச்சி கண்டுள்ளது. அந்த அணியின் ஷகிப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் இந்தியாவுக்கு தலைவலியை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சுழற்பந்து வீச்சாளர்களைப் பற்றி பேசுகையில், சமீபத்திய ஆண்டுகளில், இந்திய பேட்டர்கள் சுழலுக்கு எதிராக தடுமாறி வருகிறார்கள். வங்கதேசம் அதைப் பயன்படுத்திக் கொள்ளும். இலங்கைக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில், 3 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி இருந்தார்கள்.
இந்தியா vs வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எப்போது நடக்கிறது?
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செப்டம்பர் 19, 2024 அன்று காலை 9:30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கும்.
இந்தியா vs வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எங்கே நடக்கிறது?
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா vs வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டியை எந்த டி.வி-யில் பார்ப்பது?
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் சேனல் நேரடியாக ஒளிபரப்பும்.
இந்தியா vs வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டியை ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை ஜியோசினிமா ஆப் மற்றும் அதன் இணையதளம் ஆகிய இரண்டிலும் ஆன்லைனில் லைவ் ஆக பார்க்கலாம்.
நேருக்கு நேர்
இந்தியாவும் வங்கதேசமும் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 13 ஆட்டங்களில் இந்தியா 11ல் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் வங்கதேசம் ஒருமுறை கூட முறையும் வெற்றி பெறவில்லை. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்தியா (முதல் டெஸ்ட்): ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், எம்.டி. சிராஜ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள்.
வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), லிட்டன் குமர் தாஸ் (விக்கெட் கீப்பர்), தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன் , ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, நஹித் ராணா, சையத் கலீத் அகமது, ஜாக்கர் அலி அனிக்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“