India vs Bangladesh Score Today Match in tamil: வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் – 05) நடந்த முதலாவது ஒரு போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படியுங்கள்: ‘அது உண்மையல்ல’: சவுதி கிளப் அணியில் இணைந்தது பற்றி ரொனால்டோ மறுப்பு
இந்நிலையில், இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் 2வது ஒருநாள் ஆட்டம் இன்று புதன்கிழமை டாக்கா மைதானத்தில் பகல் 11:30 மணிக்கு நடக்கிறது.
டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு; இந்தியா முதலில் பவுலிங்
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.
இந்தியா vs வங்கதேசம்: இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
இந்தியா
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்
வங்கதேசம்:
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, எபாடோட் ஹொசைன், முஸ்தபிஜுர் ரஹ்மான்.
வங்கதேசம் பேட்டிங்:
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணியில், அனாமுல் ஹக் - கேப்டன் லிட்டன் தாஸ் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அனாமுல் ஹக் 11 ரன்னிலும், லிட்டன் தாஸ் 7 ரன்னிலும் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு களத்தில் இருந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 21 ரன்னிலும், ஷாகிப் அல் ஹசன் 8 ரன்னிலும் அவுட் ஆகினர்.
After 10 overs, Bangladesh are 44/2
Live - https://t.co/e8tBEGspdJ #BANvIND pic.twitter.com/UHiaGf91Ez— BCCI (@BCCI) December 7, 2022
தொடர்ந்து களம் கண்ட முஷ்பிகுர் ரஹீம் (12) மற்றும் அபிஃப் ஹொசைன் (0) வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி அதே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Two in Two for @Sundarwashi5 👏👏
Mushfiqur and Afif Hossain depart.
Bangladesh 79/6 after 21 overs.
Live - https://t.co/e8tBEGspdJ #BANvIND pic.twitter.com/GiSFhRF4KJ— BCCI (@BCCI) December 7, 2022
இதன்பின்னர் ஜோடி சேர்ந்த மஹ்முதுல்லா - மெஹிதி ஹசன் மிராஸ் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில் அரைசதம் அடித்த மஹ்முதுல்லா 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்து அரைசதம் விளாசிய மிராஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து ஆட்டத்தில் கடைசி ஓவரில் தனது முதலாவது சர்தேச ஒருநாள் சதத்தையும் பதிவு செய்தார். கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்த அவர் 83 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் எடுத்தார்.
Innings Break!
Bangladesh post a total of 271/7 on the board.
Three wickets for Washington and two wickets apiece for Umran Malik and Siraj.
Scorecard - https://t.co/e8tBEGspdJ #BANvIND pic.twitter.com/B1hyZOdMas— BCCI (@BCCI) December 7, 2022
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்குள் 271 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர். கோலி 5 ரன்கள் எடுத்து எடபாட் ஹொசைன் பந்தில் போல்டானார். ஷிகர் தவான் 8 ரன்கள் எடுத்து முஸ்தாபிஸூர் பந்தில் மெஹிடி ஹசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 13 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி, 11 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஷகிப் பந்தில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் பொறுமையாக விளையாடிய நிலையிலும் 14 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 65 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
அடுத்ததாக அக்சர் பட்டேல் களமிறங்கினார். அவர் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். ஸ்ரேயாஸ்- அக்சர் ஜோடி விக்கெட்டை கொடுக்காமல் சிறப்பாக விளையாடியது. நிதானமாக ஆடிவந்த ஸ்ரேயாஸ் அரை சதம் அடித்தார். இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 82 ரன்களில் ஸ்ரேயாஸ் அவுட் ஆனார். அவர் மெஹிடி பந்தில் ஹொசைனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக ஷர்துல் தாக்கூர் களமிறங்கிய நிலையில், அக்சர் பட்டேல் அரைசதம் எடுத்து அசத்தினார்.
56 ரன்கள் அடித்த நிலையில், அக்சர் பட்டேல் அவுட் ஆனார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஷர்துல் தாக்கூர் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தீபக் சாஹர் 11 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய, ரோகித் சர்மா ரன்களின் தேவையை உணர்ந்து தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி ரன்களை குவித்தார். இதற்கிடையில் முகமது சிராஜ் 2 ரன்களில் அவுட் ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரோகித் சர்மா 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசிய நிலையில், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து 2-0 என வங்கதேசம் தொடரை வென்றுள்ளது.
வங்கதேச அணி தரப்பில் ஹொசைன் 3 விக்கெட்களையும், மெஹிடி மற்றும் ஷகிப் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.