இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.
Advertisment
டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், வங்கதேசத்திடம் வாங்கிய செமத்தியான அடிக்கு பிறகு, இன்றைய இரண்டாவது டி20 போட்டியை இந்தியா எதிர்கொண்டது.
தவானின் பதட்டம் கலந்த பேட்டிங், லோகேஷ் ராகுலின் 'இவ்வளவு தானா' மோட் பேட்டிங், ரிஷப் பண்ட்டின் 'நானும் ரவுடிதான்' மோட் என்று பேட்டிங்கில் பெரும் சொதப்பல் செய்த இந்திய அணி, பந்து வீச்சிலும் விமர்சனத்தையே பதிவு செய்தது.
Advertisment
Advertisements
அதிலும், கலீல் அஹ்மது ஓவரை டார்கெட் செய்து வங்கதேசம் புரட்டி எடுத்தது.
மஹா புயல் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒருவேளை இன்று போட்டி நடைபெற்றால், இன்றும் கலீல் அஹ்மது தான் வங்கதேசத்தின் முக்கிய இலக்காக இருப்பார்.
இன்று இரவு 6:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில், ஹாட் ஸ்டாரில் போட்டியை பார்க்கலாம். தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு ரசிக்க முடியும்.
டாஸ் வென்ற இந்தியா
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி, 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது. நைம் 17 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
19:29 - ரிஷப் பண்ட் செய்த பெரும் தவறு
சாஹல் ஓவரில் இரங்கி வந்து ஆட முயன்ற லிட்டன் தாஸ் 17 ரன்களில், கீப்பர் ரிஷப் பண்ட்டால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். ஆனால், பந்து ஸ்டம்ப்பை தாண்டுவதற்கு முன்பே ரிஷப் கிளவுசில் பந்து பட்டதால், அவுட் கொடுக்கப்படாமல், நோ பால் கொடுக்கப்பட்டது.
அதாவது, ஸ்டெம்ப்பை பந்து கடப்பதற்கு முன்பாகவே கிளவுஸில் பந்து பட்டதால் அவுட் கொடுக்கப்படவில்லை.
19:35 - வங்கதேசம் 6 ஓவருக்கு 54-0
19:39 - ரன் அவுட்
லிட்டன் தாஸ் 29 ரன்களில், ரிஷப் பண்ட் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார்.
19:55 - நைம் அவுட்
வாஷிங்டன் சுந்தர் ஓவரில், தூக்கி அடித்த நைம் 36 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
20:04 - கடந்த மேட்ச் ஹீரோ அவுட்
சாஹல் ஓவரில், லெக் சைடில் தூக்கி அடித்த முஷ்பிகுர் 4 ரன்களில் வெளியேறினார். கடந்த போட்டியில், இதே சாஹல் ஓவரில், கேட்சை கோட்டைவிட்ட க்ருனால் பாண்ட்யா கையாலேயே, முஷ்பிகுர் இப்போது அவுட்டாகியுள்ளார்.