scorecardresearch

Ind vs Ban 2nd Test Day 1 Highlights: டெஸ்ட் கேப்டனாக கோலி அதிவேக 5000! இந்தியா 174/3

India vs Bangladesh 2nd Test Live Score, Ind vs Ban Test Live Cricket Score : இந்தியா vs வங்கதேசம் 2வது டெஸ்ட் லைவ்

Ind vs Ban 2nd Test Day 1 Highlights: டெஸ்ட் கேப்டனாக கோலி அதிவேக 5000! இந்தியா 174/3
India vs Bangladesh 2nd Test Cricket Score

India vs Bangladesh (Ind vs Ban) 2nd Test Cricket Score : பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (நவ.22) தொடங்கியது. பகல் – இரவு போட்டியாக இந்தியா விளையாடும் முதல் போட்டி என்ற வரலாற்று சிறப்புடன் இப்போட்டி நடைபெறுகிறது.

இந்தத் தொடரையும் இந்திய அணி கைப்பற்றினால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வென்ற 12-வது தொடராக இது பதிவாகும்.


வங்காளதேச அணியும் இதற்கு முன்பு பகல்-இரவு டெஸ்டில் ஆடியது கிடையாது. முதலாவது டெஸ்டில் 3 நாட்களுக்குள் அடங்கிப்போன அந்த அணி இந்த டெஸ்டிலும் பெரிய சவால் அளித்துவிடும் என்று கூற முடியாது.

இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ், ராகுல் டிராவிட், கும்பிளே உள்ளிட்டோர் நேரில் பார்க்க உள்ளனர். செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பேட்மிண்டன் மங்கை பி.வி.சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் போட்டியின் போது கவுரவிக்கப்படுகிறார்கள்.

முதல் நான்கு நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. ஈடன் கார்டனில் 1934-ம் ஆண்டில் இருந்து இதுவரை 41 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 12-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும், 20-ல் டிராவும் கண்டுள்ளது.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.

வங்கதேசம் பேட்டிங்

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மொமினுல் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பிங்க் பந்தில் அட்டகாசமாக பந்து வீசி வரும் இந்திய பவுலர்களை எதிர்கொள்ள முடியாமல், வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. 12 ஓவர்களில் 26 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருக்கிறது.


உணவு இடைவேளையின் போது, வங்கதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக், முஷ்பிகுர், மஹ்மதுல்லா ஆகிய 3 வீரர்கள் டக் அவுட்டானார்கள்.

உமேஷ் 3 விக்கெடுட்களும், இஷாந்த் 2 விக்கெட்டுகளும், ஷமி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

மேலும் படிக்க – கேப்டன் கோலியை கொண்டாட வைத்த ரோஹித், சஹா கேட்ச் – வீடியோவை பார்த்தாலே விசிலடிக்கத் தோணுதே!!

முடிவில், வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


12 வருடங்களுக்குப் பிறகு, இந்திய மண்ணில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்திய பேட்டிங்:

முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த மாயங்க் அகர்வால், முதல் இன்னிங்ஸில் 14 ரன்களில் அல் அமின் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து, ரோஹித் 21 ரன்களில் எபாடட் ஹொசைன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆக, இந்திய அணி 2வது விக்கெட்டை இழந்தது.

இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்தாலும், புஜாரா – கோலி நிலையான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். இதில், புஜாரா அரைசதம் அடித்துள்ளார்.

எனினும், ஹொசைன் ஓவரில் புஜாரா 55 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறியுள்ளார்.

கேப்டன் கோலி அரைசதம் கடந்து ஆடிக் கொண்டிருக்கிறார். மேலும், டெஸ்ட் கேப்டனாக அதிவேகமாக 5000 ரன்கள் முதல் வீரர் எனும் பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

உள்ளூரில் டெஸ்ட் போட்டியில், 50 ரன்கள் கடந்த விராட் கோலியின் சமீபத்திய இன்னிங்ஸ்கள்

235
204
104*
213
243
50
139
254*
50* (இன்று).

இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 59 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs ban 2nd test day night test live score card updates