/tamil-ie/media/media_files/uploads/2022/12/Indian-Test-Top-5-Player.jpg)
வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், வெற்றிக்கான இலக்கை எட்ட தடுமாறி வருகிறது.
டி20 உலககோப்பை தொடருக்கு பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றிவிட்டது. அதன்பிறகு இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பெட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமதாக மாமினுள் 84 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில், உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளும், உனத்கட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்நந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 314 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், ரிஷப் பண்ட் (93) ஸ்ரேயாஸ் அய்யர் (87) ஆகியோரின் அரைசதத்தால் இந்திய 300 ரன்களை கடந்தது. வங்கதேச அணி தரப்பில், ஷாகிப் அல் ஹசன், டைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
87 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிப்ப முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், ஜாகீர் ஹாசன் 57 ரன்களும், லிட்டன் தாஸ் 73 ரன்களும் குவித்ததால் வங்கதேச அணி 227 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், சிராஜ் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றதால் இந்திய அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. 2 நாட்கள் மீதமிருந்த நிலையில் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு வங்கதேச பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். கில் 7 ரன்களிலும், ராகுல் 2 ரன்களிலும், புஜாரா 6 ரன்கள், விராட்கோலி 1 என முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேறினர்.
இதனால் 3-ம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. அக்சர் பட்டேல் 26 ரன்களுடனும், உனத்கட் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து இன்று தொடங்கிய 4-வது நாள் ஆட்டத்தில் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி களமிறங்கியது.
இதில் அணியின் ஸ்கோர் 56 ரன்களை எட்டியபோது 13 ரன்கள் எடுத்திருந்த உனத்கட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 9 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குபிடித்த அக்சர் பட்டேல் 34 ரன்களிலும், ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 74 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியாவின் டாப் 5 வீரர்களான சுப்மான் கில், கேப்டன் கே.எல்.ராகுல், விராட்கோலி, புஜாரா, பண்ட் என முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கில் பெவிலியின் திரும்பியது இந்திய அணியை சரிவுக்குள் கொண்டு சென்றது. இதில் பண்ட் மட்டும் முதல் இன்னிங்சில் 93 ரன்கள் குவித்தார். மீதமுள்ள நால்வரும் முதல் இன்னிங்சிலும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் இந்திய அணி இனி வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஆனால் தரவரிசையில் பின்தங்கியுள்ள வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மேசமாக ஆடியுள்ளது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.