IND vs BAN 2nd Test Match 2022 Day - 2 highlights | IND vs BAN 2வது டெஸ்ட் போட்டி 2022: வங்கதேசத்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 14 ஆம் தேதி முதல் சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று (வியாழக்கிழமை) முதல் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, வங்கதேச அணி முதலில் களமிறங்குகிறது. இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
வங்கதேசம்
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, தஸ்கின் அகமது
இந்தியா
கே.எல். ராகுல் (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனட்கட், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
முதல் நாள் ஆட்டம் - வங்கதேசம் பேட்டிங்:
வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ - ஜாகிர் ஹசன் ஜோடி களமிறங்கிய நிலையில், ஜெய்தேவ் உனத்கட் வீசிய 14.5 வது ஓவரில் ஜாகிர் ஹசன் 15 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ அஸ்வினின் சுழலில் சிக்கி 24 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
Happiness is watching @JUnadkat get his first Test wicket 🥹💙
Pure joy on the face of the left-arm pacer as he gets his first scalp following his comeback for 🇮🇳 in Whites after 1️⃣2⃣ years 🙌#BANvIND #JaydevUnadkat #SonySportsNetwork pic.twitter.com/2txsBaQ284— Sony Sports Network (@SonySportsNetwk) December 22, 2022
பின்னர் வந்த வீரர்களில் ஷாகிப் அல் ஹசன் 16 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்னிலும், லிட்டன் தாஸ் 25 ரன்னிலும், மெஹிதி ஹசன் மிராஸ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனிடையே, நிதானமாக விளையாடிய அரைசதம் விளாசிய மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். நூருல் ஹசன், கலீத் அகமது, தஸ்கின் அகமது போன்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்கதேச அணி 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் தலா 4 விக்கெட்டுகளையும், ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Innings Break!
Four wickets apiece for @y_umesh & @ashwinravi99 and two wickets for @JUnadkat as Bangladesh are bowled out for 227 in the first innings.
Scorecard - https://t.co/XZOGpedaAL #BANvIND pic.twitter.com/ed2GOu09YQ— BCCI (@BCCI) December 22, 2022
தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமாடியுள்ளனர்.
தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி 8 ஓவர்களில் 19 ரன்களை எடுத்துள்ளனர். இதில் கில் 14 ரன்னுடனும், ராகுல் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச அணி இந்தியாவை விட 208 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
2 ஆம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
தொடர்ந்து 2 ஆம் நாள் ஆட்டத்தில் களமாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் 10 ரன்னிலும், கில் 20 ரன்னிலும், புஜாரா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த விராட் கோலி 24 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பண்ட்-ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிலைத்து நின்று ஆடினர். இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் விளாசி அசத்தினர். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 93 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த அக்சர் படேல் 4 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியாக முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86.3 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்து. இதன் மூலம் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது நாள் ஆட்டம் - விக்கெட் சரிவு
3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க வீரர் சான்டோ 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த ஜாகீர் ஹசன் 51 ரன்களிலும், அரைசதம் கடந்த லிட்டன் தாஸ் 73 ரன்களிலும், நூரல் ஹசன், டஸ்கின் அகமது தலா 31 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், வங்கதேச அணி 2-வது இன்னிங்சில், 70.2 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், அஸ்வின், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், உமேஷ்யாதல், உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றதால் இந்திய அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சுப்மான் கில் 7 ரன்களிலும், கேப்டன் ராகுல் 2 ரன்களிலும், புஜாரா 6 ரன்களிலும், விராட்கோலி 22 பந்துகளில் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. அக்சர் பட்டேல் 26 ரன்களுடனும், உனத்கட் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில், மெகடி ஹாசன் 3 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். வெற்றிக்கு இன்னும் 100 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணியின் கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளது.
இன்னும் 2- நாட்கள் மீதமுள்ள நிலையில், 4-வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் 3-வது நாளில் 14 விக்கெட்கள் வீழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
4-வது நாள் ஆட்டம்
தொடர்ந்து இன்று தொடங்கிய 4-வது நாள் ஆட்டத்தில் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் அணியின் ஸ்கோர் 56 ரன்களை எட்டியபோது 13 ரன்கள் எடுத்திருந்த உனத்கட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 9 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குபிடித்த அக்சர் பட்டேல் 34 ரன்களிலும், ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 74 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
வெற்றிக்கு அடுத்து 71 ரன்கள் தேவை என்ற நிலையில், 8-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்ரேயாஸ் அய்யர் அஸ்வின்ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி 47 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
வெற்றிக்கு அழைத்துச்சென்ற ஸ்ரோயாஸ் அய்யர் – அஸ்வின் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர், அஸ்வின் 62 பந்துகளில் 4 பவுணடரி ஒரு சிக்சருடன் 42 ரன்களும், ஸ்ரேயாஸ் 46 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 29 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒருநாள் தொடரில் பெற்ற தோல்விக்கு பழி தீர்த்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.