IND vs BAN 3rd ODI: குல்தீப் சென், ரோகித், சஹாருக்கு காயம்; யார் யாருக்கு வாய்ப்பு?

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 12:00 மணிக்கு தொடங்குகிறது.

IND vs BAN 3rd ODI 2022, Probable XIs in tamil
Bangladesh vs India, 3rd ODI: predicted playing 11 in tamil

India vs Bangladesh, 3rd ODI predicted 11 Tamil News: வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் – 05) நடந்த முதலாவது ஒரு போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத்தொடர்ந்து, கடந்த புதன்கிழமை நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால், தொடரைக் கைப்பற்றியுள்ள வங்கதேச அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 12:00 மணிக்கு தொடங்குகிறது.

சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் வங்கதேச அணி களமாடும். மறுபுறம், தொடரை இழந்த இந்தியா ஆறுதல் வெற்றியுடன் விடைபெற நினைக்கும். தொடரில் கடைசி ஆட்டம் என்பதால், இந்திய அணி சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டன் ரோஹித் ஷர்மா உட்பட மூன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் காயம் காரணமாக தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரோஹித் இல்லாத நிலையில், இந்திய அணியை துணை கேப்டன் கேஎல் ராகுல் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குல்தீப் யாதவ் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய டி20 அணிக்கு மீண்டும் திரும்பினார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட அவரால் விளையாட முடியவில்லை. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக குல்தீப் வங்கதேசக்கு எதிரான இந்திய அணியில் சேர வேண்டும். ஆனால் இப்போது அவர் முன்னதாக வந்து மூன்றாவது போட்டியில் விளையாடத் தயாராகிவிட்டார்.

இதற்கிடையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு கேப்டன் ரோஹித் விளையாடுவது குறித்து பின்னர் எடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

“இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது ரோஹித்தின் இரண்டாவது ஓவரில் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. பிசிசிஐ மருத்துவக் குழு அவரை மதிப்பீடு செய்து டாக்காவில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் ஸ்கேன் செய்யப்பட்டது. சிறப்பு ஆலோசனைக்காக மும்பை சென்றுள்ள அவர், இறுதி ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார். அவர் வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான அழைப்பு பின்னர் எடுக்கப்படும்” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மிர்பூரில் நடந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் அறிமுகமான குல்தீப் சென், காயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாஹர் மீண்டும் தொடை தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

“வேகப் பந்துவீச்சாளர் குல்தீப் சென் முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு முதுகில் விறைப்பு இருப்பதாக புகார் கூறினார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரை மதிப்பீடு செய்து, 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டது. குல்தீப் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொடரில் இருந்து விலகியுள்ளார். சக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 2வது ஒருநாள் போட்டியின் போது இடது தொடை வலியால் அவதிப்பட்டு தொடரில் இருந்தும் வெளியேறினார். குல்தீப் மற்றும் தீபக் இருவரும் இப்போது தங்கள் காயங்களை மேலும் நிர்வகிப்பதற்கு NCA-க்கு அறிக்கை செய்வார்கள்.” என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாஹரின் பெயரை எடுக்காமல், இரண்டாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட பிறகு NCA இன் பங்கு குறித்து ரோஹித் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஏற்கனவே தொடரை இழந்துள்ள நிலையில், கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, நம்பிக்கையுடன் டெஸ்ட் தொடரை வென்று தொடரை உச்சத்தில் முடிக்க இந்தியா முனைப்புடன் உள்ளது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கான திருத்தப்பட்ட இந்திய அணி:

கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் , முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்.

வங்கதேச அணி:

அனாமுல் ஹக், லிட்டன் தாஸ் (கேப்டன்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, எபாடோட் ஹொசைன், முஸ்தாபிசுர் மஹ்முத்மான், ஹஸ்ஸனிர் ரஹ்மான், ஹஸ்ஸனிர் ரஹ்மான், தஸ்கின் அகமது, நூருல் ஹசன்

இந்தியா vs வங்கதேசம்: 3வது ஒருநாள் உத்தேச லெவன்

இந்தியா:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்

வங்கதேசம்:

நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, எபாடோட் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs ban 3rd odi 2022 probable xis in tamil

Exit mobile version