IND vs BAN 3rd ODI Score: 182 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; கடைசி போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்; இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

IND vs BAN 3rd ODI Match 2022 Live Score updates in tamil
IND vs BAN 3rd ODI Match 2022 Live Cricket Score Streaming Online

IND vs BAN 3rd ODI Match 2022 Updates | IND vs BAN கடைசி மற்றும் மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி 2022 நேரடி அறிவிப்புகள்: வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் – 05) நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து, கடந்த புதன்கிழமை நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம். இந்த வெற்றிகள் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ள வங்கதேச அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 11:30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்; இந்தியா முதலில் பேட்டிங்

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்கை தேர்வு செய்தது. எனவே, இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

இந்தியா

ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்

வங்கதேசம்:

அனாமுல் ஹக், லிட்டன் தாஸ் (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், யாசிர் அலி, முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, அபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், எபாடோட் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது.

இந்தியா பேட்டிங்:

இந்திய அணி தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் – இஷான் கிஷன் ஜோடி களமாடினர். அணிக்கு வலுவான தொடக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவான் 3 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து களமாடி விராட் கோலி தொடக்க வீரர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார். அணிக்கு மிகச்சிறப்பான பங்களிக்கப்பை கொடுத்த இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக அணியின் ஸ்கோர் 15 ரன்கள் என்று இருந்த போது ஜோடி சேர்ந்த இவர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்ந்த்தினர். மறுபுறம் இந்த ஜோடியை உடைக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் போராடினர்.

ஆனால், அவர்களின் பந்து வீச்சை இந்த ஜோடி நொறுக்கி அள்ளியது. இந்த ஜோடியில் 83 பந்துகளில் தொடக்க வீரர் இஷான் கிஷன் தனது முதலாவது ஒருநாள் சதத்தை விளாசினார். கோலி 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். மீண்டும் ரன் வேட்டையை நடத்திய இந்த ஜோடியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 126 பந்துகளில் 23 பவுண்டரி, 9 சிக்சருடன் 210 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். சச்சின், சேவாக், ரோகித்துக்கு பிறகு இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றார்.

அவருடன் ஜோடியில் இருந்த கோலி தனது ரன் வேட்டையை தொடர்ந்திருந்தார். மேலும், தனது 72வது சர்வதேச சதத்தை விளாசினார் கோலி. 92 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில், அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும், அக்சர் படேல் ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 409 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஒருநாள் போட்டியில் 6வது முறையாக 400 ரன்களை கடந்து இந்தியா அசத்தியுள்ளது. வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன், தஸ்கின் அகமது மற்றும் எபாடோட் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

வங்கதேசம் பேட்டிங்

வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அனாமுல் ஹக் 8 ரன்னிலும், லிட்டன் தாஸ் 29 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த முஷ்பிகுர் ரஹீம் 7 ரன்னில் அவுட் ஆனார்.

இதன்பிறகு களம் புகுந்து ஒரு சிக்ஸர் 2 பவுண்டரியை விரட்டிய யாசிர் அலி 25 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது வங்கதேசம். அந்த அணியின் ஷாகிப் அல் ஹசன் 39 ரன்களுடனும், மஹ்முதுல்லா 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இருப்பினும் சிறிது நேரத்தில் ஷகிப் 43 ரன்களில் அவுட் ஆனார். அவர் குல்தீப் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைன் 8 ரன்களிலும், மெஹிடி 3 ரன்களிலும் அவுட் ஆகினர். இருவரது விக்கெட்டையும் ஷர்துல் தாக்கூர் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய தஸ்கின் அகமது ஒரு முனையில் நிதானமாக ஆடி வர, மறுமுனையில் இருந்த ஹொசைன் டக் அவுட் ஆனார். இந்த விக்கெட்டையும் தாக்கூர் வீழ்த்தினார். அடுத்து வந்த முஸ்தாபிஷூர் 13 ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தஸ்கின் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் தாக்கூர் 3 விக்கெட்களையும், அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்களையும், சிராஜ், குல்தீப், சுந்தர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். வங்கதேச அணி ஏற்கனவே தொடரை வென்றிருந்தாலும், கடைசிப் போட்டியில் இஷான் கிஷனின் அபார இரட்டை சதம், கோலியின் அசத்தல் சதத்துடன் இந்தியாவின் வாணவேடிக்கை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதிவேக இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

India in Bangladesh, 3 ODI Series, 2022Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram   07 June 2023

Bangladesh 182 (34.0)

vs

India   409/8 (50.0)

Match Ended ( Day – 3rd ODI ) India beat Bangladesh by 227 runs

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs ban 3rd odi match 2022 live score updates in tamil

Exit mobile version