Advertisment

IND VS BAN Test: தொடக்க வீரராக கில்; மீண்டும் களமாடும் கோலி: கே.எல் ராகுல் பதில்

ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து கேப்டன் ரோகித் இன்னும் மீளாத நிலையில், அவருக்கு இந்த டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ind vs ban test series: press conference by KL Rahul in tamil

IND vs BAN: India Test Squad for Bangladesh Tamil News

India tour of Bangladesh, 2022 - KL Rahul  Tamil News: வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்க அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் தொடங்குகிறது.

Advertisment

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்த இந்தியா சட்டோகிராமில் நடந்த கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோகித் விலகிய நிலையில், கேஎல் ராகுல் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் (210) - விராட் கோலி (113) சிறப்பான ஜோடியை அமைத்து தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடியின் அதிரடியால் இந்திய அணி வங்கதேசத்திற்கு 410 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அதைத் துரத்திய வங்கதேசம் 184 ரன்னில் சுருண்டது. தற்போது இதே உத்வேகத்துடன் டெஸ்ட் போட்டியிலும் களமாட தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள் இந்திய வீரர்கள்.

ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து கேப்டன் ரோகித் இன்னும் மீளாத நிலையில், அவருக்கு இந்த டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் கேஎல் ராகுல் பொறுப்பு கேப்டனாக செயல்படுகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் இருந்த ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெக்கபந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

டி20 ஆசியக் கோப்பையில் தனது 71வது சர்வதேச சதத்தை அடித்ததன் மூலம், சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிக ரன் குவித்த வீரராகவும், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மேலும் ஒரு சதம் அடித்ததன் மூலமாகவும், விராட் கோலி தனது சமீபத்திய ஆட்டத்தை டெஸ்டில் வெளிப்படுத்த முடியும் என்று பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல் கருதுகிறார். மேலும், சுப்மான் கில் ஒரு அனைத்து ஃபார்மேட் வீரர் என்றும் பாராட்டியுள்ளார்.

வருகிற புதன்கிழமை (டிசம்பர் 14 ) தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல், "கோலி நீண்ட காலமாக விளையாடி வரும் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர். அவரது மனநிலை, அணி மீதான அவரது ஆர்வம் எப்போதும் மாறாமல் உள்ளது. அணிக்காக அவர் அளிக்கும் அர்ப்பணிப்பு, இது அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதை நீங்கள் உண்மையில் கேள்வி கேட்க முடியாது.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் ஒரு அனைத்து ஃபார்மேட் வீரர். அவர் எப்படி மாற்றப்பட்டார் மற்றும் அவரது ஆட்டத்தில் அவர் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார் என்பதைப் பார்ப்பது அற்புதம். டெஸ்ட் போட்டிகள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் அணிக்காக பணியாற்றியுள்ளார் என்று நினைக்கிறேன். அவர் இளமையாக இருக்கிறார், ஆனால் டெஸ்ட் போட்டி வடிவம் அல்லது அவர் விளையாடும் எந்த வடிவத்திலும் அவருக்கு ஒரு குணம் உள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.

இரு அணி வீரர்கள் பட்டியல்:

இந்தியா

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்

வங்கதேசம்

ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொமினுல் ஹக், யாசிர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், நூருல் ஹசன், ஜாகிர் ஹசன், அனமுல் ஹக், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, இ கலீத் அகமது, ஹொசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், ரெஜவுர் ரஹ்மான் ராஜா

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment