Advertisment

India vs Bangladesh Live Score: இந்தியா vs வங்கதேசம் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

ICC World Cup 2019, India vs Bangladesh Live Streaming : இந்தியா - வங்கதேசம் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக கண்டு களிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Bangladesh Live Streaming

India vs Bangladesh Live Streaming

India vs Bangladesh Match Live Score Updates: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூலை.2) பிர்மிங்கம் நகரின் எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மஷ்ரபே மோர்டசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதுகின்றன.

Advertisment

இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி, 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று, +0.854 ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக, அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணியாக இந்தியா இருக்கும்.

அதேசமயம், 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி என 7 புள்ளிகளுடன் இருக்கு வங்கதேசம், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க, கட்டாயம் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய சூழலில் உள்ளது.

இந்தியா – வங்கதேசம் இடையிலான ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக கண்டு களிக்கலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மூலம் போட்டியைக் காணலாம். உங்கள் மொபைலில் ‘ஷேர் இட்’ ஆப் வைத்திருந்தால், அதன் வாயிலாக, ஹாட்ஸ்டார் மூலம் போட்டியை காணலாம்.

தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் பிரத்யேக லைவ் கமெண்ட்ரியை நேயர்கள் காணலாம்.

மழைக்கான வாய்ப்பு – 0%

ஈரப்பதம் – 89%

காற்று – 8 km/h

அதிகபட்ச வெப்பநிலை – 18 டிகிரி செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை – 9 டிகிரி செல்சியஸ்

இன்றைய ஆட்டத்தின், மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment