New Update
00:00
/ 00:00
India vs Canada T20 World Cup 2024 Playing 11: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக கட்டத்தை எட்டிருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இந்திய அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் ஆட உள்ளது.
அதன்படி, ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான 33-வது லீக் ஆட்டம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வரிசையாக வீழ்த்தி 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எனவே இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம். குல்தீப் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன்ஆகியோருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs CAN T20 World Cup 2024 2024 Playing 11
துபேக்கு பதில் சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் அவரது முத்திரையை பதிக்க முடியவில்லை. அதன் பிறகு அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக 31 ரன்கள் குவித்து, உலகக் கோப்பையில் இந்தியாவின் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய சிவம் துபேவுக்கு ஓய்வு அளிக்க கனடாவுக்கு எதிரான போட்டி சரியானதாக இருக்கலாம். அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் துபேயின் ஃபார்ம் கவலைக்குரியதாக இருப்பதால், இந்தியா நிச்சயமாக சஞ்சுவை நல்ல நிலையில் வைத்திருக்க விரும்புகிறது. குறிப்பாக சூப்பர் 8 போட்டிகளில் ஆட உள்ளதால் அவருக்கு இடம் அளிக்கலாம்.
ஜடேஜாவுக்கு பதில் குல்தீப்
ரவீந்திர ஜடேஜா இந்த போட்டியில் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு வழிவிடக் கூடும். ஏனெனில், இதுவரை அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் பேட்டிங் அல்லது பவுலிங்கில் போதுமான ரன்கள் அல்லது ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதன் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா முக்கியமான ஓவர்களை வீச அக்சர் படேலை அழைத்தார். ஜடேஜாவை விட படேலின் பந்துவீச்சு நன்றாக சிறப்பாக இருப்பதால் அவர் வெளியேற்றப்பட மாட்டார். எனவே, சூப்பர் 8 தொடங்குவதற்கு முன், ஃபார்மில் உள்ள குல்தீப்பை ஆட இந்தியா விரும்பினால், அதற்கான போட்டி இதுதான்.
இரு அணிகைளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
கனடா: ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால், பர்கத் சிங், தில்ப்ரீத் பஜ்வா, நிக்கோலஸ் கிர்டன், ஷ்ரேயாஸ் மோவா (விக்கெட் கீப்பர்), தில்லன் ஹெய்லிகர், சாத் பின் ஜாபர் (கேப்டன்), கலீம் சனா, ஜுனைத் சித்திக், ஜெர்மி கார்டன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.