/indian-express-tamil/media/media_files/2025/06/24/ind-vs-eng-1st-test-why-leeds-is-the-best-haunt-for-fourth-innings-chase-tamil-news-2025-06-24-20-25-32.jpg)
2000 ஆம் ஆண்டு முதல், இங்கிலாந்தில் உள்ள எந்தவொரு டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் லீட்ஸின் ஹெடிங்லி 33.09 (தி ஓவலுக்கு சமம்) என்ற சராசரியுடன் விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன்களின் சராசரியைக் கொண்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை சொந்த மண்ணில் ஆடும் போது, அந்நாட்டு அணிக்கு 'ஹோம் அட்வான்டேஜ்' இருக்கும். அதேநேரத்தில், எந்த ஆடுகளத்தில் ஆட இறங்கினாலும் அதனை இஞ்ச் பை இஞ்ச் அளந்தும், படித்தும் வைத்திருப்பார்கள். குறிப்பாக டாஸ் விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.
அப்படித்தான், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தீர்க்கமான முடிவை எடுத்தார். போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கும் முன் போடப்பட்ட டாஸில் இங்கிலாந்து வெல்ல, ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அவர் அப்படி தேர்வு செய்ய வலுவான காரணம் இருக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
சர்வதேச டெஸ்ட் அரங்கில் இதுவரை நடந்த 2,586 டெஸ்ட் போட்டிகளில், 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போட்டிகளில் 36 முறை மட்டுமே வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்டுள்ளது. இதில் 400-க்கு மேல் இருந்த இலக்கு நான்கு முறை சேசிங் செய்யப்பட்டு இருக்கிறது. அவ்வகையில், லீட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டிகளில் 300 அல்லது 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போது, 4 முறை வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்டு இருக்கிறது.
லீட்ஸ் மைதானத்தில் அதிகபட்சமாக சேசிங் செய்யப்பட்டு ஸ்கோர் 404 ஆகும். 1948 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா 114 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, ஆர்தர் மோரிஸ் மற்றும் டொனால்ட் பிராட்மேனின் சதங்களுடன் இலக்கை வெற்றிகரமாக எட்டியது. 2003 ஆம் ஆண்டு ஆன்டிகுவாவில் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் வரை இது ஒரு சாதனையாக இருந்தது.
சமீபத்திய காலத்தில், இங்கிலாந்து 2019 ஆம் ஆண்டில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது. பென் ஸ்டோக்ஸின் அற்புதமான 135 நாட் அவுட் மற்றும் லோ-ஆடர் வீரர் ஜாக் லீச்சுடன் 17 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்த அவரது அற்புதமான கடைசி விக்கெட் ஆட்டத்தால் இங்கிலாந்து வெற்றியை ருசித்தது.
2017 இல் வெஸ்ட் இண்டீஸ் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2001 இல் இங்கிலாந்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்றன. இதேபோல், 2022 ஆம் ஆண்டில் நியூசிலாந்தை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த இங்கிலாந்து 296 ரன்களை துரத்தி வேட்டையாடியது. இங்கு நடந்த முந்தைய டெஸ்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஏழு விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது.
2000 ஆம் ஆண்டு முதல், இங்கிலாந்தில் உள்ள எந்தவொரு டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் லீட்ஸின் ஹெடிங்லி 33.09 (தி ஓவலுக்கு சமம்) என்ற சராசரியுடன் விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன்களின் சராசரியைக் கொண்டுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கிற்கு சோதனையாக இருந்திருந்தால், ஆட்டம் முன்னேறும்போது ஆடுகளம் தட்டையாகி, கடைசி இன்னிங்ஸில், அது பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும். இதனால், இமாலய ஸ்கோர்கள் கூட இங்கு சேசிங் செய்ய சாத்தியமாகும். இதேபோல், 2010 முதல் இங்கு நடந்த 11 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. நான்காவது இன்னிங்ஸ் இலக்குகளை அணிகள் பாதுகாத்த ஆட்டங்களில் 450, 350 மற்றும் 468 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.
இத்தகைய சூழலில், லீட்ஸின் ஹெடிங்லி ஆடுகளத்தில் முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய இந்தியா 471 ரன்கள் குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து 465 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 2-வது இன்னிங்சில் ஆடிய இந்தியா 364 ரன்கள் எடுத்தது. இதனால், இங்கிலாந்து 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து முதல் விக்கெட்டுக்கு 188 ரன்களும், 2-வது விக்கெட்டுக்கு 206 ரன்களும் எடுத்து வலுவாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அந்த அணி வெற்றியை நோக்கி நடைபோடுகிறது.
400 ரன்கள் எடுத்தாலும் போதாத இந்த ஆடுகளத்தில் இந்தியா குறைந்தபட்சம் 450 ரன்களாவது எடுத்திருக்க வேண்டும். முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடியது போல, 2-வது இன்னிங்சில் அதிகபட்சமாக 500 ரன்களை எடுத்திருந்தால் போட்டி இந்தியாவின் வசம் இருந்திருக்கும். எளிதில் துரத்தப்படும் ஸ்கோராக இருப்பதால், இங்கிலாந்துக்கு வெற்றி பிரகாசமாக இருக்கிறது. இந்தப் போட்டியில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us