Advertisment

IND vs ENG: 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி; தொடரை வென்று அசத்தல்

IND vs ENG 3 ஆவது ஒருநாள் போட்டி; பந்து வீச்சில் அசத்தில் பாண்ட்யா, சஹல், சிராஜ் அசத்தல்; ரிஷப் பண்ட் சதம்; இந்தியா அபார வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றியது

author-image
WebDesk
New Update
IND vs ENG: 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி; தொடரை வென்று அசத்தல்

IND vs ENG 3rd ODI Cricket Score Updates: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3 ஆவது ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.

Advertisment

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் 2 அணிகளும் தலா 1 வெற்றியை பதிவுசெய்துள்ளன. எனவே தொடரை வெல்லும் அணி எது என்ற எதிர்ப்பார்ப்பு, இந்த போட்டியை சுவாரஸ்மாக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒதுங்க வேண்டுமா விராட் கோலி? பிரபலங்கள் கூறுவது என்ன?

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணி விவரம் : ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், யஷ்வேந்திர சஹல், பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து அணி விவரம் : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியம் லிங்க்ஸ்டன், மொயீன் அலி, கிரேக் ஓவர்டன், டேவிட் வில்லி, பிரைடன் கார்ஸே, ரீஸ் டோப்லே

இங்கிலாந்து 259 க்கு ஆல் அவுட்

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். ஜானி பேர்ஸ்டோ டக் அவுட் ஆக, அடுத்து வந்த ஜோ ரூட்டும் டக் அவுட் ஆனார். இருவரது விக்கெட்களையும் சிராஜ் வீழ்த்தினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜேசன் ராய் 31 பந்துகளில் 41 ரன்கள் அடித்து, அவுட் ஆனார்.

இன்னொரு ஆட்டக்காரரான ஸ்டோக்ஸ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரது விக்கெட்டையும் ஹர்திக் பாண்ட்யா வீழ்த்தினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் மொயீன் அலி அணியின் எண்ணிக்கையை உயர்த்த கடுமையாக போராடினர். மொயீன் அலி 34 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டன் நிதானமாக ஆடி வந்த நிலையில், 27 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ரன் எதுவும் சேர்க்காத நிலையில் பட்லரும் அவுட் ஆனார். இருவரது விக்கெட்டையும் பாண்ட்யா வீழ்த்தினார். அடுத்து டேவிட் வில்லியும், ஓவர்டனும் சிறிது நேரம் தாக்குபிடித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த உதவினர். வில்லி 18 ரன்களிலும், ஓவர்டன் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரது விக்கெட்களையும் சஹல் வீழ்த்தினார்.

அடுத்து வந்த டோப்லே டக் அவுட் ஆக இங்கிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. கார்ஸே 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில், பாண்ட்யா 4 விக்கெட்களையும், சஹல் 3 விக்கெட்களையும், சிராஜ் 2 விக்கெட்களையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ரிஷப் பண்ட் சதம்

அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் ரோகித் மற்றும் கோலி நிதானமாக ஆடி வந்த நிலையில், இருவரும் தலா 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்கள் மூவரின் விக்கெட்டையும் டோப்லே வீழ்த்தினார்.

அடுத்தாக ரிஷப் பண்டுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி, 16 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த பாண்ட்யாவும் ரிஷப் பண்ட்டும் அற்புதமாக ஆடி ரன்களை குவித்தனர்.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில், 71 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா அவுட் ஆனார். பின்னர் உள்ளே வந்த ஜடேஜா கம்பெனி கொடுக்க, ரிஷப் பண்ட் அற்புதமாக ஆடி சதம் விளாசினார்.

இந்தியா அபார வெற்றி

சதம் விளாசிய பிறகு அதிரடி காட்டிய ரிஷப் 42.1 ஓவர்களிலே இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 113 பந்துகளில் 125 ரன்கள் அடித்திருந்தார். மறுமுனையில் 7 ரன்களுடன் ஜடேஜா களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் டோப்லே 3 விக்கெட்களையும், ஓவர்டன் மற்றும் கார்ஸே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment