mohammed siraj Tamil News: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ட்ரா ஆனா நிலையில், 2வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. எனவே தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3து டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பகுதியில் இங்கிலாந்து ரசிகர்கள், இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜியை சீண்டியுள்ளனர். ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது இனவெறி ரீதியாக சிராஜ் சில சீண்டல்களை சந்திருந்தார். தற்போது இங்கிலாந்து ரசிகர்கள் பவுண்டரி கோட்டின் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த அவரை நோக்கி பந்தை எறிந்து சீண்டியுள்ளனர்.
அதோடு இங்கிலாந்து அணியின் ரன் என்ன என்று அவரிடம் கேட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்த இளம் வீரர் சிராஜ் இங்கிலாந்து ரசிகர்களை நோக்கி நாங்கள் இந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை வென்று விட்டோம். இங்கிலாந்து பூஜ்ஜியத்தில் உள்ளது என்பது போன்று சைகை செய்தார்.

இது குறித்து முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், ‘நாங்கள் கத்துவோம், எதையாவது சொல்லி கூச்சலிடுவோம். அது எங்களது விருப்பம் என்று நீங்கள் (ரசிகர்கள்) சொல்லலாம். ஆனால் களத்திற்குள் எதையும் தூக்கி வீசக்கூடாது. இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல’ என்று கூறினார்.

இளம் வீரர் சிராஜ் இங்கிலாந்து ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிராஜிற்கு ஆதரவளித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
These english fans have no idea who they’re messing with.
— Cover Drive (@KohliChokaMarNa) August 25, 2021
Miyaan bhai 🔥 @mdsirajofficial !!#INDvENG #ENGvIND #Siraj pic.twitter.com/zifHYiwQdJ
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil