/tamil-ie/media/media_files/uploads/2019/06/z1134.jpg)
England vs India Live, India vs England Match 2019
India vs England Match Score Updates: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.30) பிர்மிங்கம் நகரின் எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.
இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி, 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகள் பெற்று, +1.160 ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக, அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணியாக இந்தியா இருக்கும்.
மேலும் படிக்க - India vs England Live Score: இந்தியா vs இங்கிலாந்து லைவ் கிரிக்கெட் ஸ்கோர்
அதேசமயம், 7 போட்டிகளில் ஆடியுள்ள இங்கிலாந்து 4 வெற்றி மற்றும் 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ரன் ரேட் +1.051. அரையிறுதிக்கு முன்னேற, இன்றைய போட்டியில் இங்கிலாந்து நிச்சயம் வெல்ல வேண்டிய சூழலில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக கண்டு களிக்கலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மூலம் போட்டியைக் காணலாம். உங்கள் மொபைலில் ‘ஷேர் இட்’ ஆப் வைத்திருந்தால், அதன் வாயிலாக, ஹாட்ஸ்டார் மூலம் போட்டியை காணலாம்.
தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் பிரத்யேக லைவ் கமெண்ட்ரியை நேயர்கள் காணலாம்.
மழைக்கான வாய்ப்பு – 0%
ஈரப்பதம் – 85%
காற்று – 14 km/h
அதிகபட்ச வெப்பநிலை – 21 டிகிரி செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை – 12 டிகிரி செல்சியஸ்
இன்றைய ஆட்டத்தின், மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.