/indian-express-tamil/media/media_files/2025/07/31/ind-vs-eng-india-vs-england-5th-test-live-cricket-score-updates-shubman-gill-ollie-pope-kennington-oval-london-tamil-news-2025-07-31-16-05-05.jpg)
இங்கிலாந்து vs இந்தியா, 5வது டெஸ்ட் - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், கென்னிங்டன் ஓவல், லண்டன்.
இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது. லீட்சில் நடந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இதனைத் தொடர்ந்து லண்டனில் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பின்னர் மான்செஸ்டரில் நடந்த 4-வது போட்டி டிரா ஆனா நிலையில், தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் வியாழக்கிழமை (ஜூலை 31) முதல் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடக்கிறது.
முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் - இந்தியா முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல் ராகுல் களம் புகுந்தனர். இதில் 2 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார் ஜெய்ஸ்வால். ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 14 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, களத்தில் இருந்த கேப்டன் சுப்மன் கில் - சாய் சுதர்சன் ஜோடியில், கேப்டன் கில் 21 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 9 ரன்களுக்கும், துருவ் ஜொரேல் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 153 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் கருண் நாயருடன் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தார். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து அணி மேற்கொண்ட முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.
முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. அரைசதம் கடந்த கருண் நாயர் 52 ரன்களுடனும், வாஷிங்டன் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணியில் டங், அட்கிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
2-வது நாள் ஆட்டம் - இந்திய அணி பேட்டிங்
வெள்ளிக்கிழமை 2-ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், களத்தில் இருந்த கருண் நாயர் - வாஷிங்டன் சுந்தர் ஜோடியில் கருண் 57 ரன்னுக்கும், வாஷிங்டன் 26 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்த வந்த வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 224 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டையும், ஜோஷ் டங்கு 3 விக்கெட்டையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி
தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், முதல் விக்கெட் சரிந்தபின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனாலும் இந்திய அணியை விட, முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அரைசதம் கடந்த க்ரௌலி 64 ரன்களும், புரூக் 53 ரன்களும், டங்கெட் 43 ரன்களும், ரூட் 29 ரன்களும், ஒல்லி போப் 22 ரன்களும், எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய அணி பேட்டிங்
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல், 28 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் 29 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகாஷ் தீப் முதல் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில், 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு, 75 ரன்கள் எடுத்து 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால், 49 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
2-வது நாள் ஆட்டம் - இந்திய அணி பேட்டிங்
இன்று சனிக்கிழமை 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. களத்தில் இருந்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஆகாஷ் தீப் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றினர். இதில் ஜெய்ஸ்வால் ஏற்கனவே அரைசதம் அடித்த நிலையில், ஆகாஷ் தீப் தனது பங்கிற்கு அரைசதம் அடித்து மிரட்டினார். இதன் மூலம், 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு நைட் வாட்ச்மேனாக களம் புகுந்து அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார். முதல் வீரராக 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக 84 ரன்கள் எடுத்த அமித் மிஸ்ரா இருக்கிறார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இந்த ஜோடியை உடைக்க இங்கிலாந்து பவுலர்கள் கடுமையாக போராடினர். இருவரும் கிட்டத்தட்ட 107 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக இருந்தனர். 94 பந்துகளில் 12 பவுண்டரியை விரட்டிய ஆகாஷ் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த கில் 11 ரன்னுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கருண் நாயர் 17 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜடேஜா ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 234 ரன்கள் எடுத்து 211 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணி பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அன்ஷுல் கம்போஜ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: சாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்கு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.