IND vs ENG T20 Match T20 world cup Semi final match 2022 | ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அடிலெய்ட்டில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இன்று வானிலையிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்பதால், முழு போட்டியும் எந்த தடங்கலும் இன்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற சூழல் அமையும்.
எனினும், காலை வேளையில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிற்பகலில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேகங்கள் வெளியேறினால் காற்றின் வேகம் மணிக்கு 20 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு (பிற்பகல் 1:30 IST) இந்தியா – இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்தியா குரூப் 2 பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றிகளுக்குப் பிறகு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி நல்ல நிலையில் உள்ளது. நாக் அவுட் கட்டத்தில், இந்திய அணி பெர்த்தில் தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே தோற்றனர்.
மறுபுறம் இங்கிலாந்து தனது குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பட்லர் தலைமையிலான அணி நியூசிலாந்து அணியை உறுதியுடன் தோற்கடித்தனர், ஆனால் இலங்கைக்கு எதிராக வாழ்வா, சாவா மோதலில் ஒரு சாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கு முன்பு 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நாக் அவுட் போட்டியில் இந்தியா ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி: கே.எல்.ராகுல், ரோகித்சர்மா (கே), விராட்கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்டியா, ரிஷப் பன்ட் (அ)தினேஷ் கார்த்திக், அக்சர்பட்டேல்(அ) தீபக் ஹூடா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து அணி : பட்லர் (கே), ஹேல்ஸ், பில்சால்ட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், சாம்கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க்வுட் (அ) கிறிஸ் ஜோர்டன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“