scorecardresearch

U19 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்தியா சாம்பியன்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

IND vs ENG Women’s U19 World Cup Final Live Score updates in tamil
India Women U19 vs England Women U19 Final: India battle England in the finale.

Women’s U19 T20 World Cup 2023, IND vs ENG Updates in tamil: பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியின் டாப் ஆடரில் களமாடிய கேப்டன் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (4), லிபர்ட்டி ஹீப் (0), நியாம் பியோனா ஹாலண்ட் (10), செரன் ஸ்மால் (3) சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் கே 19 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் தரமான பந்துவீச்சிற்கு எதிராக தொடர் விக்கெட் சரிவால் துவண்டு போன இங்கிலாந்து மகளிர் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து 69 ரன்கள் கொண்ட எளிய வெற்றி இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி 14 வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்தது. கேப்டன் ஷஃபாலி வர்மா 15 ரன்களுடனும், ஸ்வேதா செஹ்ராவத் 5 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். 3 பவுண்டரிகளை ஓட விட்ட கோங்காடி த்ரிஷா 24 ரன்கள் எடுத்தார். அவருடன் சிறப்பான ஜோடியை அமைத்த ரிச்சா கோஷ் 24 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த அபார வெற்றியின் மூலம் ஐசிசி நடத்தும் முதலாவது 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் டி20 உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்று அசத்தியுள்ளது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். யு-19 இந்திய மகளிர் அணி மற்றும் துணை ஊழியர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

இரு அணியில் விளையாடும் வீராங்கனைகள் பட்டியல்:

இந்திய அணி:

ஷஃபாலி வர்மா (கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத், சௌமியா திவாரி, கோங்காடி த்ரிஷா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹ்ரிஷிதா பாசு, டிடாஸ் சாது, மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, சோனம் யாதவ்

இங்கிலாந்து அணி:

கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (கேப்டன்), லிபர்ட்டி ஹீப், நியாம் பியோனா ஹாலண்ட், செரன் ஸ்மால் (விக்கெட் கீப்பர்), ரியானா மெக்டொனால்ட் கே, சாரிஸ் பாவேலி, அலெக்சா ஸ்டோன்ஹவுஸ், சோபியா ஸ்மேல், ஜோசி க்ரோவ்ஸ், எல்லி ஆண்டர்சன், ஹன்னா பேக்கர்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs eng womens u19 world cup final live score updates in tamil

Best of Express