England vs India World Cup 2019 Score: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இன்று(ஜூன்.30) பிர்மிங்கம் நகரின் எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.
இதில், முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. தொடர்ந்து சேஸிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால், இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதி வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கிக் கொண்டது.
Live Blog
47வது ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சரை தோனியும் அடிக்கவில்லை. கேதர் ஜாதவும் அடிக்கவில்லை. மொத்தமாகவே அந்த ஓவரில் அடிக்கப்பட்ட ரன்கள் 5. இந்தியாவுக்கான தேவைப்படும் ரன் ரேட் கடல் கடந்து உள்ளது. ஓவருக்கு 18 ரன்கள் அடிக்க வேண்டும்.
சரி.. சரி... எல்லோரும் போய் படுங்க!!
பிளங்கட் ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, ஸ்ட்ரெய்ட்டில் ஜேம்ஸ் வின்சிடம் கேட்ச் கொடுத்து, 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஏற்கனவே ரன் ரேட் கையை மீறி போய்க் கொண்டிருக்கும் நிலையில், பாண்ட்யாவின் விக்கெட் இந்தியாவின் கதையை ஏறக்குறைய முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.
ஹர்திக் பாண்ட்யா நிச்சயம் பெரிய ஷாட்களை ஆடுவார். ஆனால், அவர் ரிலாக்ஸாக ஷாட்களை ஆட வேண்டுமெனில், தோனி பக்கபலமாக நிற்க வேண்டும். நிற்க வேண்டுமெனில், அவரும் அதிரடியாக ஆடி, பாண்ட்யாவியன் டென்ஷனை குறைக்க வேண்டும்.
தோனிக்கு இன்று சோதனை காத்திருக்கிறது!.
தோனிக்கும், ஹர்திக் பாண்ட்யாவிற்கும் செக் வைப்பது போன்று ஃபீல்ட் செட் செய்து நெருக்கடி கொடுத்து வருகிறார் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன். தோனி தொடக்கத்தில் பொறுமையாக விளையாடுவார் என்பதால் அவருக்கான கட்டம் இன்னமும் மோசமாகவே உள்ளது.
லியம் பிளங்கட் ஓவரில், டீப் பாயிண்ட்டில் தனது ஃபேவரைட் ஷாட்டை அடித்த ரிஷப் பண்ட், க்றிஸ் வோக்ஸ்-ன் அட்டகாசமான டைவ் கேட்ச்சால், 32 ரன்களில் வெளியேறினார்.
CHRIS WOAKES, YET AGAIN!
This time he's at it in the field, taking a superb catch under pressure on the leg-side boundary.
Rishabh Pant goes.
Is that the turning point?#CWC19 | #ENGvIND pic.twitter.com/5BTfnuHHCO
— Cricket World Cup (@cricketworldcup) 30 June 2019
தல தோனி இன்....
ரோஹித்தைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யா க்றிஸ் வோக்ஸ் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்துள்ளார். மிட்- ஆன், டீப், டீப் மிட் விக்கெட் என்று பந்துகளை பறக்கவிட, ரசிகர்களுக்கு லேசான அறுதல்...
அப்பவும் இந்த Required Run Rate மனம் இறங்குதா பாரேன்... கல்லு மனசுக்காரனா இருக்கும் போல...
ரோஹித் ஷர்மா அவுட்டானது இந்தியாவை இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளது. தற்போது களத்தில் இருக்கும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவருமே இதற்கு முன் இப்படியொரு பதட்டமான சூழலை சர்வதேச போட்டிகளில் அதிகம் சந்தித்ததில்லை. ஆகையால், அவர்களால் பதட்டமின்றி வெற்றிக்கான இன்னிங்சை ஆட முடியுமா என்பது மிகவும் சந்தேகமே. தவிர, தோனி பெரிய ஃபார்மில் இல்லை. 40 ஓவர்களுக்கு மேல் ஜோஃப்ரா ஆர்ச்சரும் பந்துவீச வந்துவிடுவார் என்பதால், வெற்றி வாய்ப்பு இங்கிலாந்துக்கே 90 சதவிகிதம் உள்ளது!.
க்றிஸ் வோக்ஸ் மீண்டும் வந்து இந்திய அணிக்கு சரிவை ஏற்படுத்தி இருக்கிறார். அவரது ஸ்லோ பந்தில், எட்ஜ் ஆன ரோஹித் ஷர்மா, 102 ரன்களில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்தியா தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது.
அடுத்து களமிறங்கி இருப்பது தோனி அல்ல.. ஹர்திக் பாண்ட்யா என்பது கூடுதல் தகவல்
ஹிட்மேன் ரோஹித் ஷர்மா 95 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்னும் 5 ரன்களே மீதம்... இந்தியாவை கொண்டாடப் போகும் அந்த சதத்தை அடிப்பாரா? இந்திய அணிக்கு தேவைப்படும் ரன் ரேட் 9.47. அதாவது, இனி ஓவருக்கு 10 ரன்கள் என்று இந்திய அணி அடித்தே ஆக வேண்டும்.
1947க்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைந்த இந்தியா - பாகிஸ்தான் - வங்கதேசம்.
புரியலையா?... இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளின் உலகக் கோப்பை அரையிறுதி கனவு நீடிக்கும். தோற்றால், இரு அணிகளுமே வெளியேறிவிடும். இதனால், இந்திய ரசிகர்களைத் தாண்டி, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்கள் இந்திய அணிக்கு இன்று ஆதரவை குவித்து வருகின்றனர்.
17 ஓவர்கள் முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இந்த 17 ஓவர்களில், இங்கிலாந்து பவுலர்கள் கிட்டத்தட்ட 70 சதவிகித பந்துகளை சரியான லைன் அன்ட் லென்த்களில் வீசியுள்ளனர். இதனால், சுத்தமாகவே ரோஹித்தால் அடிக்க முடியவில்லை. அவரது ஃபேவரைட் ஷாட்களை கூட அடிக்க முடியாமல் திணறுகிறார்.
14வது ஓவரில், இந்திய அணி 50 ரன்களைக் கடந்திருக்கிறது. விராட் கோலியும் தனது வழக்கமான ஷாட்களை ஆட ரொம்பவே தடுமாறுகிறார். இந்திய பவுலிங்கோடு ஒப்பிடுகையில், இங்கிலாந்து பவுலிங் பக்கா என்று நிச்சயம் சொல்லலாம்.
இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது!.
ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரில், ரோஹித் ஷர்மா கொடுத்த கேட்சை, செகன்ட் ஸ்லிப்பில் நின்றிருந்த ஜோ ரூட் தவறவிட, அடுத்த ஓவரை வீசிய க்றிஸ் வோக்ஸ், லோகேஷ் ராகுலை 0 ரன்களில், அவரே கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.
Chris Woakes' first three overs today:
. . . . . . | . . W . . . | . . . . . .
The Wizard has started his spell with three maidens on the bounce, and claimed the key wicket of KL Rahul 👏 🧙 #ENGvIND | #CWC19 | #WeAreEngland pic.twitter.com/bdc5W0YcNb
— Cricket World Cup (@cricketworldcup) 30 June 2019
உலகக் கோப்பை போட்டிகளில், இதுவரை இந்திய அணி 300 ரன்களை சேஸ் செய்து வெற்றிப் பெற்றதே கிடையாது. ஒருவேளை, இன்று இந்தியா சேஸ் செய்து வெற்றிப் பெற்றால் புதிய சாதனை படைக்கும். ஆனால், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற டேஞ்சர் பவுலர்களை எதிர்த்து, இந்தியா இந்த இலக்கை எட்ட முடியுமா?
நிச்சயம் 350 செல்லும் என்றே தோன்றுகிறது. ஏனெனில், பென் ஸ்டோக்ஸ் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். தவிர, ஜோஸ் பட்லர் இனிமேல் தான் களமிறங்கவே போகிறார். கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, கணக்கு சரியா வரும்-ன்னு நினைக்கிறோம். பும்ராவுக்கு இன்னும் 5 ஓவர்கள் மீதமுள்ளது. அந்த 5 ஓவரில் அடிக்கும் ரன்களைப் பொறுத்தே எல்லாம் இருக்கிறது.
உண்மையில் இது இந்திய அணியின் மிக மிக பிரமாதமான கம் பேக் என்றே சொல்ல வேண்டும். சூறாவளி போல் சுழன்றுக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியில் இருந்து மூன்று ஆணிகளை பிடுங்கி எறிந்திருக்கிறது. குறிப்பாக, இங்கிலாந்து ரன் ரேட்டை பவுலர்கள் குறைத்துள்ளனர்.
இப்போது தான் சொல்லி முடித்தோம்.. ஷமி இரண்டாவது ஸ்பெல்லில் விக்கெட் எடுத்து தர வேண்டும் என்று. அதேபோல், 109 ரன்களில் 111 ரன்கள் அடித்திருந்த பேர்ஸ்டோ, ஷமி ஓவரில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அப்போ நமக்கு நாமே தான் வாழ்த்துகள் சொல்லணும்!! அதான் நமக்கு நாமே!.
இங்கிலாந்து அணி, 28 ஓவர்கள் முடிவில், 194/1 ரன்கள் எடுத்துள்ளது. ரவுண்டாக 30 ஓவருக்கு 6 ரன் ரேட் என்றால் 180. ஸோ, ஒரு 20-25 ரன்கள் மட்டும் நாம் அதிகம் கொடுத்திருக்கிறோம். ஆகையால், இனிமேலாவது பந்துவீச்சை கடினப்படுத்தினால் அவர்களை 325 ரன்களுக்குள் இந்தியாவால் அடக்கிவிட முடியும். அந்த டார்கெட் நிச்சயம் இந்தியாவுக்கு மிகவும் கடினமானது அல்ல.
Substitute-ஆக ஃபீல்டிங்குக்கு வந்த ரவீந்திர ஜடேஜாவின் அட்டகாசமான கேட்சால், முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளது இந்தியா. 55 பந்துகளில் 67 ரன்கள் அடித்திருந்த ஜேசன் ராய், குல்தீப் ஓவரில் இறங்கி வந்து ஸ்ட்ரெய்ட்டில் லோ-வாக தூக்கி அடிக்க, சிக்ஸ் லைனில் பாய்ந்து வந்து பந்தை பிடித்தார் ஜத்து!!.
பும்ராவைத் தவிர, அனைவரது ஓவரிலும் சரமாரியாக இங்கிலாந்து ஓப்பனர்கள் சிக்ஸர்கள் விளாசி வருகின்றனர். 20.1 வது ஓவரில், பார்ட்னர்ஷிப் 150 ரன்களைக் கடந்தது. இருவருமே மனசாட்சியே இல்லாமல் அடித்து வருகின்றனர். இதனால், யாரை பந்து வீச அழைப்பது என்பதிலேயே கோலி குழப்பமைடந்துள்ளார்.
ஜானி பேர்ஸ்டோ - ஜேசன் ராய் கூட்டணி 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அட்டகாசமாக ஆடி வருகிறது. ஹர்திக் பாண்ட்யா, சாஹல் என இருவரது ஓவரையும் தாறுமாறாக அடித்து வருகின்றனர். குறிப்பாக, ஸ்வீப் ஷாட் எல்லாம் அடித்து கோலியை பெரும் பீதிக்கு ஆளாக்கியுள்ளனர். சதக் கூட்டணியை நோக்கி வீறுநடை போட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது இந்த பார்ட்னர்ஷிப்.
ஹர்திக் பாண்ட்யா வீசிய 10.5வது பந்தில், ஜேசன் ராய் கிளவுசில் பட்டு பந்து லெக் சைடில் தோனியிடம் சென்றது. ஆனால், தோனி, கோலி, பாண்ட்யா தீவிரமாக டிஸ்கஸ் செய்தும் ரிவியூ போகவில்லை. ஒருவேளை போயிருந்தால், அது க்ளீயர் அவுட். மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது இந்தியா. அம்பயர் அந்த பந்துக்கு வைட் கொடுக்க, அடுத்த பந்து சிக்ஸ், அடுத்தது பவுண்டரி..
சாஹல் வீசிய எட்டாவது ஓவரில், ஜேசன் ராய் அடுத்தடுத்து, இரண்டு காட்டடி பவுண்டரியை அனுப்பி இருக்கிறார். இங்கிலாந்தின் இண்டென்ட் நம்மை உண்மையில் அச்சுறுத்துகிறது. குறிப்பாக, அவரது பேட்டிங்கும் சரி, மாடுலேஷனும் சரி, 'இவனுங்கலாம் ஒரு பவுலரா?'-ங்கற மோடிலேயே இருக்கிறார்.
பும்ரா தான் ஏதாவது பார்த்து செய்யனும் போலிருக்கே!!
ஷமி ஓவரில் பெரியளவு வேரியேஷன் இல்லை. பந்தும், பேட்டை நோக்கி செல்கிறது. பிட்ச், பேட்டிங்குக்கு சப்போர்ட் செய்கிறது. ஆகையால், ஷமியை மாற்றிவிட்டு, ஆறாவது ஓவரை வீச சாஹலை கொண்டுவந்தார் கேப்டன் கோலி. ஆனால், அந்த ஓவரிலும் பேர்ஸ்டோ பவுண்டரியை பறக்க விடுகிறார்.
இது எங்க போய் முடியப் போகிறதோ!!?
காயத்தில் இருந்து மீண்டும் வந்திருக்கும் ஜேசன் ராய், எந்தவித சுணக்கமும் இல்லாமல் ஆடுவதைப் பார்த்தால், அவர் 100 சதவிகிதம் உடற்தகுதி பெற்றுவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பந்தை அவர் மீட் பண்ணும் அந்த கனெக்ஷன் பெர்ஃபெக்ட்டாக இருப்பதால் நமக்கு இந்த சந்தேகம்!.
வேறென்ன... சரியா விளையாடாமல் போனது தான். என்னவொரு ஆறுதலான விஷயம்-னா, விராட் கோலி 'காலில் ஏற்பட்டிருக்கும் காயத்தால விஜய்க்கு பதில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படுகிறார்'-னு சொன்னது தான்.
எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்... அப்போ பார்த்துக்குறோம்!!
ஷமி வீசிய முதல் ஓவரில், ஜேசன் ராய் ஆஃப் சைடில் ஒரு பவுண்டரி அடித்தார் பாருங்க... அந்த பவுண்டரி நமக்கு சொல்லும் பதில், ஸ்கோர் 300+ போகலாம் என்று. ஏனெனில், பந்து பேட்டுக்கு மிக அழகாக வருகிறது. பேட்ஸ்மேன் பெரிதாக சிரமப்பட தேவையில்லை. ஆகவே, இந்திய பவுலர்ஸ் தொடக்கத்தில், கொஞ்சம் எச்சரிக்கையாகவே பந்து வீசணும்!!
இங்கிலாந்தின் மெகா அதிரடி ஓப்பனர்கள் ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ, இந்திய பந்துவீச்சை பதம் பார்க்க களமிறங்கியுள்ளனர்.
ஆரஞ்சு சட்டையில் இந்திய வீரர்களை பார்ப்பதற்கே, EA Sports கிரிக்கெட் கேமில் விளையாடுவது போன்ற ஃபீல் நமக்கு!.
இந்தியாவுடனான போட்டி குறித்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலி அளித்த பேட்டியில், 'விராட் கோலியை அவுட்டாக மற்ற பவுலர்கள் சிரமப்படலாம். ஆனால், நான் அவரை எளிதில் அவுட் செய்து விடுவேன்' என்று கூறியிருந்தார். ஆனால், இங்கிலாந்து பிளேயிங் லெவனில், அவருக்கு விளையாடவே இன்று வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'அவன அவுட்டாக்குவேன்னு தானடா சொன்னேன்.. என்னைய 'Out' பண்ணிட்டீங்களே டா!!!
இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்கிறது. எட்ஜ்பேஸ்டன் கொஞ்சம் ஸ்லோ பிட்ச் தான். ஆகையால், இங்கு ரன்கள் கடுமையாக விளாச முடியாது. மீடியம் ஃபேஸ் பவுலிங்கில் எதிரணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, ஸ்பின் அச்சுறுத்தலாம். தோனியின் 'ஷேடோ கேப்டன்' பலம், பும்ராவின் யார்க்கர்ஸ், ஷமியின் அச்சுறுத்தும் ஃபேஸ், ஸ்பின் ட்வின்ஸான குல்தீப் - சாஹல் ஆகியோர் என அனைவரையும் கணக்கில் கொண்டு பார்த்தால், இங்கிலாந்து அதிகபட்சம் 280 ரன்கள் வரை அடிக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக காயம் காரணமாக விஜய் ஷங்கர் நீக்கப்பட்டு, ரிஷப் பண்ட் அவருக்கு பதில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனால், நான்காவது இடத்தில் ரிஷப் களமிறங்குகிறார்.
#EoinMorgan has won the toss and elected to bat first at Edgbaston!
🏴 changes: Jason Roy, Liam Plunkett IN; James Vince, Moeen Ali OUT
🇮🇳 changes: Rishabh Pant IN; Vijay Shankar OUT#CWC19 | #ENGvIND pic.twitter.com/elr1yiOhvV
— Cricket World Cup (@cricketworldcup) 30 June 2019
நாம் ஃபீல் பண்ற அளவுக்கு வானிலை மோசமாக இல்லை. நல்ல க்ளீயரான மேகங்கள் பிர்மிங்கம் நகரில் மிதக்கின்றன. அதில், லேசான கரு மேகங்கள் கண்ணுக்கு தெரிந்தாலும், அச்சம் கொள்ளத் தேவையில்லை. முழு போட்டியையும் நேயர்கள் ரசிக்கலாம் என்பதே வானிலை மையத்தின் அறிவிப்பாகும்.
இது நியூசு!!
நேயர்கள் அனைவருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் மதிய வணக்கங்கள். நாலு நாளா நல்லா கிளைமேட் இருந்துச்சு. இப்போ மறுபடியும், வெயில் சுள்ளுன்னு அடிக்குது!! நம்ம தலையெழுத்து அவ்ளோ தான்..ம்.... விஷயத்துக்கு வருவோம். இன்று, இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா மோதும் ஆட்டத்தின் லைவ் கமெண்ட்ரி உங்களுக்காக நமது ஐஇ தமிழ் வழங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights