Ind vs Ire 2nd T20 live Score: இந்தியா - அயலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மையதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய அணி தரப்பில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டாம் தர இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வழிநடத்துகிறார். முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு ஆபரேஷன் செய்துகொண்ட பும்ரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இணைந்துள்ளார்.
இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டிகள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் மழை காரணமாக டக்வொர்த் லெவிஸ் முறையில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா - அயலாந்து அணிகள் மோதும் -2-வது டி20 போட்டி டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மையதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அயர்லாந்து அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
இந்தபோட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு உள்ளது.
இரு அணி விளையாடும் வீரர்களின் விவரம்
அயர்லாந்து : ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ரவி பிஷ்னோய்
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்தார் சஞ்சு சாம்சன். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். சிறப்பாக ஆடிய சாம்சன் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரிங்கு சிங் அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ருதுராஜ் அரைசதம் விளாசினார். ருதுராஜ் 58 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த சிவம் துபே கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினார்.
இதற்கிடையில் சிறப்பாக ஆடிவந்த ரிங்கு சிங் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். அடுத்ததாக வாஷிங்க்டன் சுந்தர் களமிறங்கிய நிலையில், இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் மெக்கார்த்தி 2 விக்கெட்களையும், மார்க், கிரேக், பெஞ்சமின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அயர்லாந்து பேட்டிங்
அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஆண்ட்ரூ மற்றும் பால் களமிறங்கினர். ஆண்ட்ரூ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, பால் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த டக்கரும் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஹாரி 7 ரன்களிலும், கேம்பர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரூ அரைசதம் அடித்தார். அடுத்து வந்த டாக்ரெல் 13 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக மார்க் களமிறங்கிய நிலையில், ஆண்ட்ரூ 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மார்க் 23 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஆடிய மெக்கார்த்தி 2 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக கிரேக் மற்றும் ஜோஷ்வா களமிறங்கிய நிலையில், அயர்லாந்து அணி தோல்வியை தழுவியது. அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களையும், அர்ஷ்தீப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.