Advertisment

டி20 உலகக்கோப்பை: நமிபியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!

India vs Namibia live updates, live streaming and live score in tamil: நடப்பு உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நமிபியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாததால் தாய்நாடு திரும்புகிறது.

author-image
WebDesk
New Update
IND vs NAM live match tamil: IND vs NAM live updates, live streaming match highlights

IND vs NAM match highlights in tamil: டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய (திங்கள் கிழமை )கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நமிபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே நமிபியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

Advertisment

அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்டீபன் பார்ட் - மைக்கேல் வான் லிங்கன் ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில், 2 பவுண்டரிகளை விளாசி 14 ரன்கள் சேர்த்த மைக்கேல் வான் லிங்கன் பும்ரா வீசிய 4.4வது ஓவரில் ஷமி வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கிரேக் வில்லியம்ஸ் டக் அவுட் ஆகி நடையை கட்டினார். மறுமுனையில் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த ஸ்டீபன் பார்ட் 21 பந்துகளில் 1 சிக்ஸர் 1 பவுண்டரி என 21 ரன்கள் சேர்த்து ஜடேஜா சுழலில் சிக்கி lbw முறையில் அவுட் ஆனார்.

தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். 2 பவுண்டரிகளை விளாசி 26 ரன்கள் சேர்த்த டேவிட் வைஸ் அந்த அணியில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் ஆனார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்த நமிபியா அணி 132 ரன்களை சேர்த்தது. எனவே இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா தரப்பில் சுழலில் மிரட்டிய ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 133 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய இந்தியாவுக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. இந்திய அணி முதல் விக்கெட் இழப்பு 86 ரன்களை சேர்த்தது. 37 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்த தொடக்க வீரர் ரோஹித் சர்மா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

களத்தில் இருந்த கேஎல் ராகுல் - சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணி 15.2 வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேஎல் ராகுல் 36 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சேர்த்தார்.

நடப்பு டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 தோல்வி 3 வெற்றிகளை பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாததால், இந்திய அணியினர் நாளை நாடு திரும்பிகின்றனர்.

அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள அணிகளில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி நவம்பர் 10ம் தேதியும், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது அரையிறுதி நவம்பர் 11ம் தேதியும் அரங்கேறுகின்றன. இதில் தகுதி பெறும் அணிகள் நவம்பர் 14ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் களமிறங்குவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:52 (IST) 08 Nov 2021
    நமிபியா வீழ்த்திய இந்தியா; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    133 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய அணி 15.2 வது இலக்கை எட்டிப்பிடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


  • 22:24 (IST) 08 Nov 2021
    கேஎல் ராகுல் அரைசதம்!

    133 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் இந்திய அணியில் 35 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளை விளாசிய தொடக்க வீரர் கேஎல் ராகுல் தனது அரைசத்தை பதிவு செய்தார்.


  • 22:05 (IST) 08 Nov 2021
    10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி!

    நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 133 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ள நிலையில் 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 87 ரன்களை சேர்த்துள்ளது.


  • 22:01 (IST) 08 Nov 2021
    ரோஹித் சர்மா அவுட்!

    நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 133 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் இந்திய அணியில் 37 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்த தொடக்க வீரர் ரோஹித் சர்மா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.


  • 21:53 (IST) 08 Nov 2021
    ரோஹித் சர்மா அரைசதம்!

    நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 133 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் இந்திய அணியில் 31 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளை துரத்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா தனது 24 வது டி20 அரைசத்தை பதிவு செய்தார்.


  • 21:51 (IST) 08 Nov 2021
    பவர் முடிவில் இந்திய அணி!

    நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 133 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ள நிலையில் பவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்களை சேர்த்துள்ளது.

    தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் 15(12) ரன்களுடனும் ரோஹித் சர்மா 39(24) ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.


  • 21:39 (IST) 08 Nov 2021
    இந்திய அணிக்கு நல்ல தொடக்கம்!

    நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 133 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ள கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா ஜோடி அணிக்கு வலுவான ரன்களை குவித்து வருகின்றனர்.


  • 21:05 (IST) 08 Nov 2021
    நமிபியாவுக்கு எதிரான ஆட்டம்; இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்கு!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த நமிபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 132 ரன்களை சேர்த்துள்ளது. எனவே இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நமிபியா அணியில் அதிகபட்சமாக டேவிட் வைஸ் 26 ரன்களை சேர்த்தார். இந்தியா தரப்பில் சுழலில் மிரட்டிய ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


  • 20:50 (IST) 08 Nov 2021
    அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; நிதான ஆட்டத்தில் நமிபியா!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்துவரும் நமிபியா அணி அடுத்தடுத்த ஓவரிகளில் விக்கெட்டுகளை இழந்துள்ள நமிபியா அணி 18 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் சேர்த்துள்ளது.


  • 20:19 (IST) 08 Nov 2021
    10 ஓவர்கள் முடிவில் நமிபியா!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்துவரும் நமிபியா அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 51 ரன்களை சேர்த்துள்ளது. களத்தில் உள்ள டேவிட் வைஸ் - ஹெஹார்ட் எராஸ்மஸ் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.


  • 20:06 (IST) 08 Nov 2021
    ஸ்டீபன் பார்ட் அவுட்!

    1 சிக்ஸர் 1 பவுண்டரியை துரத்தி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்க முயன்ற தொடக்க வீரர் ஸ்டீபன் பார்ட் ஜடேஜாவின் சுழலில் சிக்கி lbw முறையில் அவுட் ஆனார்.


  • 20:04 (IST) 08 Nov 2021
    பவர் பிளே முடிவில் நமிபியா!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்துவரும் நமிபியா அணி அடுத்தடுத்த ஓவரிகளில் விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனால் அந்த அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்களை இழந்து 34 ரன்களை சேர்த்துள்ளது.


  • 19:35 (IST) 08 Nov 2021
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நமிபியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே நமிபியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    அந்த அணியின் ஸ்டீபன் பார்ட் - மைக்கேல் வான் லிங்கன் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.


  • 19:18 (IST) 08 Nov 2021
    இந்தியா அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பின்வருமாறு!

    கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ராகுல் சாஹர், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா


  • 19:18 (IST) 08 Nov 2021
    நமிபியா அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பின்வருமாறு!

    ஸ்டீபன் பார்ட், மைக்கேல் வான் லிங்கன், கிரேக் வில்லியம்ஸ், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(கேப்டன்), ஜேன் கிரீன்(விக்கெட் கீப்பர்), டேவிட் வைஸ், ஜான் ஃப்ரைலின்க், ஜேஜே ஸ்மிட், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ரூபன் டிரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ்


  • 19:14 (IST) 08 Nov 2021
    நமிபியாவுக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா – நமிபியா அணிகள் மோதுகின்றன. கடைசி லீக் ஆட்டமான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே நமிபியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.


  • 18:28 (IST) 08 Nov 2021
    முடிவுக்கு வரும் கோலி-சாஸ்திரி கூட்டணி!

    நடப்பு உலககோப்பையுடன் விராட் கோலி இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதனால் அவர் 20 ஓவர் அணியின் கேப்டனாக விளையாடப்போகும் கடைசி போட்டி இதுவாகும். அத்துடன் ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பணியும் இந்த ஆட்டத்துடன் முடிவுக்கு வருவது நினைவு கூரத்தக்கது.


  • 18:14 (IST) 08 Nov 2021
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

    7வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் சூப்பர்-12 சுற்று ஆட்டத்தின் கடைசி லீக் போட்டி இன்று அரங்கேறுகிறது. மாலை 7:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் நமிபியாவை துபாயில் வைத்து சந்திக்கிறது இந்தியா.


Sports Cricket Indian Cricket Team Live Cricket Score Live Updates T20 Indian Cricket Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment