India vs Nepal Live score Asia Cup 2023 Tamil News: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் பல்லகெலெவில் இன்று நடைறும் ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இந்தியா பவுலிங்
இந்தப் போட்டியில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதனால் நேபாளம் அணி பேட்டிங் செய்து வருகிறது. மைதானத்தில் மழை பெய்து வருவதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கியது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பின்வருமாறு:
நேபாளம்
குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் பவுடல் (கேப்டன்), பீம் ஷர்கி, சோம்பால் கமி, குல்சன் ஜா, திபேந்திர சிங் ஐரி, குஷால் மல்லா, சந்தீப் லமிச்சனே, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி
இந்தியா
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்
ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இந்தியா - நேபாளம் அணிகள் இடையேயான போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டம். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் இருவரும் முறையே 38 மற்றும் 58 ரன்கள் குவித்தனர். இவர்களை அடுத்து வந்த வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
நேபாளம் 37.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மழை நின்ற பிறகு, ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, நேபாள அணியின், திபேந்திர சிங் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால், நேபாளம் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் குவித்தனர்.
இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்பெற https://t.me/ietamil“