31 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரில் இந்தியா ஒயிட் வாஷ்! நியூஸி., வெற்றி

ind vs NZ 3rd ODI live match : இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.

India vs New Zealand, IND vs NZ 2020 Live Score
India vs New Zealand, IND vs NZ 2020 Live Score

India Vs New Zealand 3rd ODI Live Telecast : இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (பிப்.11) நடைபெற்று வருகிறது.

உலக கோப்பை கபடி : விளையாட்டுத்துறைக்கே தெரியாமல் பாகிஸ்தான் சென்ற இந்திய வீரர்கள்!

நியூசிலாந்து எதிரான டி20 தொடரை, 5-0 என்ற கணக்கில் வென்ற பிறகு, கடந்த 5ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் , 8 ம் தேதி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

Mount Maunganui மைதானத்தில் நடக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. ஸ்ரேயாஸ் ஐயரும், கே.எல் ராகுலும் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

Live Blog

ind vs NZ 3rd ODI live updates : 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், ஏற்கனவே இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது . இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.


16:04 (IST)11 Feb 2020

இந்தியா தோல்வி

297 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து, 47.1வது ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 300 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. 

12:05 (IST)11 Feb 2020

இந்தியா 296 ரன்கள்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 296 ரன்கள் சேர்த்திருக்கிறது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 114 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களும் சேர்த்தனர்.

09:54 (IST)11 Feb 2020

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒரு நாள் போட்டி : இந்தியா நிதான ஆட்டம்

இந்தியா, நியூசிலாந்து  இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி Mount Maunganui மைதானத்தில் நடைபெற்று வருகிறது .   டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்துள்ளனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்கள் எடுத்தார்.      

ind vs NZ 3rd ODI live updates : இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து எதிரான டி20 தொடரை, 5-0 என்று கணக்கில் இந்திய அணி வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கடந்த 8ம் தேதி நடந்த போட்டியில் நியூசிலாந்து வென்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இன்று மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி Mount Maunganui மைதானத்தில் நடைபெற்று வருகிறது

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ind vs new 3rd odi live streaming168239

Next Story
உலக கோப்பை கபடி : விளையாட்டுத்துறைக்கே தெரியாமல் பாகிஸ்தான் சென்ற இந்திய வீரர்கள்!World cup Kabaddi 2020, Pakistan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express