India vs New Zealand 1st ODI 2023 Tamil News: இந்தியா வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், இவ்விரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நாளை புதன்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. எனவே, இந்தியா இந்த வெற்றி உற்சாகத்தில் களமாடும். இந்திய அணியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். இதேபோல், தனது சொந்த காரணங்களால் கே.எல்.ராகுல் விடுப்பில் சென்றுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக ரஜத் படிதார் அணியில் இடம்பிடித்துள்ளார். இருப்பினும், பாடிதர் விளையாடும் 11ல் களமாடுவாரா என்பதில் சந்தேகம் தான். ஏனெனில், ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சூர்யகுமார் யாதவ் முதல் தேர்வாக இருப்பார். விக்கெட் கீப்பர் வீரரான கேஎல் ராகுல் இடத்தில் இஷான் கிஷன் அல்லது கேஎஸ் பாரத் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு நிச்சயம்.
அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் ஷர்துல் தாக்கூர் உள்ளார். அதே சமயம் அக்சர் படேல் இடத்தில் ஷாபாஸ் அகமதுவுக்கு திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வரிசையில் ஏராளமான இடது கை வீரர்கள் உள்ளதால், அவர்களுக்கு எதிராக மிகவும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தும் வாஷிங்டன் சுந்தர் உள்ளே வரலாம்.
இந்திய அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக் அல்லது ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்
இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஸ்ரீகர் பாரத். , ஷாபாஸ் அகமது, ரஜத் படிதார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“