‘ராஸ் தி பாஸ்’ – 348 ரன் டார்கெட்டை விடாப்பிடியாக துரத்தி முதன்முறை மூச்சு விட்ட நியூசி!

IND vs NZ 1st ODI Live Score: இந்தியா vs நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி லைவ்

By: Feb 5, 2020, 10:50:23 PM

IND vs NZ ODI Full Scorecard: இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டன் நகரில் இன்று(ஜன.5) தொடங்கியது.

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சுவரை நன்றாக வச்சு செய்து ஒயிட் வாஷ் அடித்த பிறகு, இந்தியா இப்போது 50 ஓவர் களத்தில் கிவிஸ்களை எதிர்கொள்கிறது.


காயம் காரணமாக ரோஹித் ஷர்மா விலகியிருக்கும் நிலையில், மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: 

லோகேஷ் ராகுல்(w), மாயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, விராட் கோலி(c), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, முகமது ஷமி, யுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், ஷர்துள் தாகூர்.

IE Tamil commentary

India in New Zealand, 3 ODI Series, 2020Seddon Park, Hamilton 21 January 2021

New Zealand 348/6 (48.1)

vs

India 347/4 (50.0)

Match Ended ( Day - 1st ODI ) New Zealand beat India by 4 wickets

Live Blog
India Vs New Zealand 1st ODI Live Streaming, Seddon Park, Hamilton : இந்தியா vs நியூசிலாந்து முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி லைவ், ஹாமில்டன்
15:46 (IST)05 Feb 2020
நியூசிலாந்து வெற்றி

348 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி, இந்த சீரிஸின் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது நியூசிலாந்து. 

109 ரன்கள் குவித்து, 'ராஸ் தி பாஸ்' என்று பாராட்டுகளை பெற்று வருகிறார் டெய்லர்.

15:34 (IST)05 Feb 2020
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்

ஜேம்ஸ் நீஷம் 9 ரன்களில் ஷமி ஓவரில் கேட்ச்சாக, அடுத்து களமிறங்கிய டி கிராண்ட்ஹோம் 1 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

15:21 (IST)05 Feb 2020
ராஸ் டெய்லர் சதம்

வெயிட்டான சேசிங்கில் முக்கிய பங்காற்றிய நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், சதம் அடித்து அசத்தியுள்ளார், அதுவும் 73 பந்துகளில்.

இருந்தாலும், அண்ணனை டி20ல இந்தியா வச்சு செஞ்சிட்டாங்க!!!

15:12 (IST)05 Feb 2020
டாம் லாதம் அவுட்....

லெக் சைடில் பொளந்து வந்த டாம் லாதம், குல்தீப் ஓவரில் 69 ரன்களில் கேட்ச் ஆனார். 

ரைட்டு... சைத்தான் வண்டில ஏறிடுச்சு!!!

14:54 (IST)05 Feb 2020
வெற்றியை நோக்கி நியூசிலாந்து

38 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்துள்ளது. 

அட அவிங்க அப்படி தான்யா ஜெயிக்குற மாதிரியே விளையாடுவாய்ங்க....கடைசில வந்து டர்ரு வாங்கிடுவாய்ங்க...

14:19 (IST)05 Feb 2020
விராட் கோலியின் அபார ரன்-அவுட் , நியூசிலாந்து- 178/3

நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்துள்ளது.  ரோஸ் டெய்லரும் நிக்கோலஸும் மூன்றாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் மேல் குவித்திருந்த நிலையில், விராட் கோலியின் அபார ரன் அவுட் மூலம்  நிக்கோலஸ் ஆட்டமிழந்தார்.  

13:15 (IST)05 Feb 2020
மார்ட்டின் கப்டில் அவுட், 93/1

நியூசிலாந்து தனது முதலாவது விக்கெட்டை பறிகொடுத்தது. நிதானமாக விளையாடிய மார்ட்டின் கப்டில் தாக்கூர் வீசிய பந்தில் அவுட் ஆகியுள்ளார்.    நியூசிலாந்து தற்போது 93/1 

11:36 (IST)05 Feb 2020
ராகுல் அதிரடி, இந்தியா 347/4

முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்களை எடுத்துள்ளது.  இந்தியா பேட்டிங்கில்  ஷ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களும், கே.எல் ராகுல் 88 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்களின் விவரம்:  விராட் கோலி -  51 , கேதார் ஜாதவ் - 26 , அகர்வால் - 32,   ஷா - 20 . 

10:52 (IST)05 Feb 2020
ஸ்ரேயாஸ் ஐயர் சதம் - இந்தியா 279/3

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது  முதலாவது  சதத்தை நிறைவேற்றினார் ஸ்ரேயாஸ் ஐயர். 102 பந்துகளில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் இதில் அடங்கும்.  4 வது விக்கெட்டில் சதம் அடித்த 5 வது இந்திய வீரர் என்ற  பெருமையையும் பெற்றுள்ளார் . 

இதற்கு முன்,  5-வது விக்கெட்டில் சதம் அடித்த இந்திய வீரர்கள்: 

  • அம்பதி ராயுடு - 2018
  • யுவராஜ் சிங்- 2017
  • மனீஷ் பாண்டே- 2016
  • மனோஜ் திவாரி - 2011

 

10:43 (IST)05 Feb 2020
கே.எல் ராகுல் அரை சதம்

கே.எல் ராகுல் 41 பந்துகளின் மூலம் தனது அரை சதத்தை நிறைவேற்றியுள்ளார். மறுமுனையில் விளையாடும் ஷ்ரேயாஸ் 98 ரன்கள்    

10:41 (IST)05 Feb 2020
ஸ்ரேயாஸ் ஐயர்- கே.எல் ராகுல் ஜோடி 100 ரன்கள் குவிப்பு

2015 ஆம் ஆண்டிற்கு பின் முதல் முறையாக 3 மற்றும் 4 வது விக்கெட்டுகள் 100 ரன்களை கடப்பது இதுவே முதல் முறையாகும்.  ஒட்டுமொத்தமாக இது 5-வது  முறை 

10:11 (IST)05 Feb 2020
ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் - இந்தியா 201/3

மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.    ஷ்ரேயாஸ் 65 ரன்களும், ராகுல் 26 ரன்களும் எடுத்து களத்தில் விளையாடி வருகின்றனர்.   

09:47 (IST)05 Feb 2020
கோலி 51 ரன்களில் அவுட்

கோலி 63 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில், சோதீ பந்தில் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்திய அணியின் ஸ்கோர் 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.

09:45 (IST)05 Feb 2020
கேப்டன் கோலி அரைசதம்

கேப்டன் விராட் கோலி நிதானமாகவும் அதேசமயத்தில் பொறுப்பாகவும் விளையாடி அரைசதத்தை பூர்த்தி செய்தார். 

08:42 (IST)05 Feb 2020
இந்தியா நிதான ஆட்டம்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி நிதானமான ஆட்டம் ஆடிவருகிறது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷா 20 ரன்களிலும், மயங்க் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். களத்தில் கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளனர்.  இந்தியா 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.

 

07:31 (IST)05 Feb 2020
டாஸை வென்ற நியூசிலாந்து அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆகையால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. 

Web Title:Ind vs nz 1st odi live score card live score updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X