IND vs NZ 1st ODI Match 2023 Score Updates | IND vs NZ முதல் ஒருநாள் போட்டி 2023 நேரடி அறிவிப்புகள்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமான வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அதன்படி, இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - சுப்மான் கில் களமிறங்கிய நிலையில், 2 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விரட்டிய ரோகித் 34 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த கோலி (8), இஷான் கிஷன் (5) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு வந்த சூரியகுமாருடன் தொடக்க வீரர் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் தனது 6வது அரைசத்தை அடித்தார் கில். மறுமுனையில் இருந்த சூரியகுமார் 4 பவுண்டரிகளை ஓட விட்ட நிலையில் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பிறகு ஹர்திக் பாண்டியாவோடு ஜோடி அமைத்த கில் சதம் விளாசி மிரட்டினார். தொடர்ந்து தனது அதிரடியைக் கைவிடாத அவர் ஒரு சிக்ஸரை பறக்க விட்டு 150 ரன்கள் குவித்தார். ஆனால், அவருடன் மறுமுனையில் ஜோடியில் இணைந்த வீரர்கள் ஆட்டமிழந்தனர். 3 பவுண்டரிகளை விரட்டிய பாண்டியா 28 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
எனினும், மனதை சிறிதும் தளரவிடாத கில் தனி ஒருவனாய் போராட துணித்தார். இரட்டை சதம் அடிக்காமல் வெளியேற மாட்டேன் என்ற அவரது கர்வத்தையும் சுமந்து கொண்டு இருந்தார். அந்த தருணத்தில் குலதீப் யாதவ் கில்லுடன் ஜோடியில் சேர்ந்தார். சில சிங்கிள்களை விரட்டி குலதீப் கில்லுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தார்.
ஆட்டத்தின் 49வது ஓவரை ஃ பெர்குசன் வீச 184 ரன்களுடன் ஸ்ட்ரைக்கில் இருந்தார் கில். முதல் பந்தை ஃபைன் லெக் திசையிலும், 2வது பந்தை லெக் திசையிலும் 3வது பந்தை லாங்-ஆஃப்பிலும் என ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டார். கடைசியில் அவரது இரட்டை சதத்தையும் பதிவு செய்து அசத்தினார்.
A SIX to bring up his Double Hundred 🫡🫡
Watch that moment here, ICYMI 👇👇#INDvNZ #TeamIndia @ShubmanGill pic.twitter.com/8qCReIQ3lc— BCCI (@BCCI) January 18, 2023
இந்த அசத்தல் இரட்டை சதம் மூலம் இந்தியாவுக்காக இளம் வயதியில் இரட்டை சதம் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் சுப்மான் கில் (23). தொடர்ந்து தனது அதிரடியை ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில் 208 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். எனினும், ஐதராபாத் மண்ணில் அதிக ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன் பெவிலியன் நோக்கி நடந்தார். அவருக்கு இந்திய வீரர்கள் எழுந்து நின்று கைதட்டல்களை கொடுத்தனர். கோலி, பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
200 reasons to cheer! 👏 👏
Shubman Gill joins a very special list 👌 👌
Follow the match 👉 https://t.co/IQq47h2W47 #TeamIndia | #INDvNZ | @ShubmanGill pic.twitter.com/xsZ5viz8fk— BCCI (@BCCI) January 18, 2023
இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லி மற்றும் டேரில் மிட்செல் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Innings Break!
A massive knock of 208 by @ShubmanGill as #TeamIndia post a formidable total of 349/8 on the board.
Scorecard - https://t.co/DXx5mqRguU #INDvNZ @mastercardindia pic.twitter.com/wMsuCcBfm5— BCCI (@BCCI) January 18, 2023
நியூசிலாந்து பேட்டிங்
நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆலன் மற்றும் கான்வே களமிறங்கினர். கான்வே 10 ரன்களில் வெளியேறினார். அவர் சிராஜ் பந்தில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக ஹென்றி நிக்கோலஸ் களமிறங்கி நிதானமாக ஆடினார். மறுமுனையில் ஆடிய ஆலன் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசிய ஆலன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் தாக்கூர் பந்தில் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாக மிட்செல் களமிறங்க, சிறிது நேரத்திலேயே நிக்கோலஸ் 18 ரன்களில் அவுட் ஆனார். குல்தீப் யாதவ் அவரை போல்டாக்கினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மிட்செல், குல்தீப் பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் வெளியேறினார்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த டாம் லாதம் மற்றும் பிலிப்ஸ் இருவரும் விக்கெட் இழப்பை தடுக்கும் வகையில் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இந்தநிலையில், பிலிப்ஸை 11 ரன்களில் ஷமி போல்டாக்கினார். இதைத் தொடர்ந்து ப்ரேஸ்வெல் களமிறங்கினார். ப்ரேஸ்வெல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் மிகவும் பொறுமையாக ஆடி வந்த லாதம் 24 ரன்களில் அவுட் ஆனார். அவர் சிராஜ் பந்தில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அப்போது நியூசிலாந்து அணி 28.4 ஓவருக்கு 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக சாண்ட்னர் களமிறங்கினார். ப்ரேஸ்வெல் – சாண்ட்னர் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய ப்ரேஸ்வெல் சதம் அடித்தார். சாண்ட்னர் அரை சதம் அடித்தார். இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். அணியின் எண்ணிக்கை 293 ஆக இருந்தப்போது சாண்ட்னர் அவுட் ஆனார். சாண்ட்னர் 57 ரன்கள் அடித்து சிராஜ் பந்தில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாக களமிறங்கிய சிப்லே டக் அவுட் ஆனார். அவரை சிராஜ் போல்டாக்கினார். அடுத்து வந்த லாக்கி பெர்குசன் 8 ரன்களில் வெளியேறினார். அவர் பாண்ட்யா பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஒருபக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ப்ரேஸ்வெல் அதிரடியை தொடர்ந்து வந்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் என்ற நிலையில், முதல் பந்தை சிக்சர் அடித்த ப்ரேஸ்வெல் அடுத்த பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். தாக்கூர் அவரை வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ப்ரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் விளாசினார். இதில் 10 சிக்சர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும். இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்களையும், குல்தீப் மற்றும் தாக்கூர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இரு அணியில் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி
Captain @ImRo45 wins the toss and elects to bat first in the 1st ODI at Hyderabad.
A look at our Playing XI for the game.
Live - https://t.co/A8LXxHogCU #INDvNZ pic.twitter.com/H8ruY6Efr6— BCCI (@BCCI) January 18, 2023
நியூசிலாந்து:
ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்
இரு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஸ்ரீகர் பாரத், ஷாபாஸ். அஹ்மத், ரஜத் படிதார்
நியூசிலாந்து அணி
டாம் லாதம் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, லாக்கி பெர்குசன், ப்ளேயர் டிக்ரேவெல், மார்கப் டிக்ரேவெல், சாப்மேன், ஹென்றி ஷிப்லி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.