scorecardresearch

IND vs NZ 1st T20: கில், சுந்தர், குல்தீப் இடம் பெறுவார்களா? இந்தியா பிளேயிங் 11 இழுபறி

தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், மணிக்கட்டு வலியால் அவதிப்பட்டதை அடுத்து அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

IND vs NZ 1st T20: India Playing XI today in tamil
India vs New Zealand, 1st T20I – JSCA International Stadium Complex, Ranchi

 India Predicted Playing XI vs NZ 1st T20 Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடந்த ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது. இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 நாளை முதல் தொடங்குகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டியானது ராஞ்சியில் இரவு 7 மணிக்கு நடக்கிறது.

கில், சுந்தர், குல்தீப் இடம் பெறுவார்களா? இந்தியா பிளேயிங் 11 இழுபறி

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்திய நிலையில், டி20 தொடருக்கான அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார். சூரியகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் அணியில் மிடில்-ஆடரில் நங்கூரமாகவும் இருப்பார். தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், மணிக்கட்டு வலியால் அவதிப்பட்டதை அடுத்து அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக களமாடும் வீரர் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இருப்பினும், தொடக்க வீரர்களுக்கான போட்டி அணியில் நிலவிய வண்ணம் தான் உள்ளது. ஏன்னென்றால், அணிக்கு புதிய வராக பிருத்வி ஷா வந்துள்ளார். விக்கெட் கீப்பர் வீரரான இஷான் கிஷன் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ள நிலையில், மற்றொரு தொடக்க வீரருக்கான இடத்திற்கு பிருத்வி ஷா – சுப்மன் கில் ஆகிய வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். கில்-லின் தற்போதைய ஃபார்மை பார்க்கையில் அவருக்கே அதிக வாய்ப்பு என்று தெரிகிறது.

லெக் ஸ்பின்னர் ஸ்லாட்டுக்கு ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஒரு இடத்திற்கான மற்றொரு சுவாரஸ்யமான போட்டி யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இடையே இருக்கும். இருப்பினும், இருவரும் ஒன்றாக விளையாடுவதற்கான வாய்ப்புகள் தொலைவில் உள்ளன. மாறாக ஒரு இடத்துக்காகப் போராடுவார்கள். ஒருநாள் போட்டிகளில் குல்தீப் மீதும், டி20 போட்டிகளில் சாஹல் மீதும் அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த தொடரிலும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளது

மற்றொரு தந்திரமான தேர்வு முடிவு தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பற்றியதாக இருக்கும். ஹூடா 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து இலங்கைக்கு எதிராக 6வது இடத்தில் பேட்டிங் செய்தார். அக்சர் படேல் இல்லாததால், லோ மிடில் ஆர்டரைப் பெறுவதற்கு அவருக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணிக்கு திரும்பிய பிறகு வாஷிங்டன் சுந்தர் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தவில்லை. அவர் பெரிதாக ரன்களை எடுக்கவில்லை, அதிக விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை.

இந்தியா vs நியூசிலாந்து: முதல் டி-20 போட்டி – இந்தியாவின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

சுப்மான் கில்/ பிரித்வி ஷா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, யுஸ்வேந்திர சாஹல்

இந்தியா vs நியூசிலாந்து: இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs nz 1st t20 india playing xi today in tamil