India vs New Zealand {IND VS NZ} 1st T20 Match 2022 Match Date, Schedule, Venue, Squad, Playing XI Details in tamil: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்து வெளியேறியது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இதனால், தற்போது இந்திய அணியில் இளம் வீரர்கள் சேர்க்கப்பட வேண்டும், அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளது.
இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அறிந்தோ, அறியாமலோ இந்திய நிர்வாகம் ஹர்திக் பாண்டிய தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய டி-20 அணியை நியூசிலாந்து தொடருக்காக, டி20 உலகக்கோப்பை தொடங்கும் முன்பே அறிவித்தது. தற்போது இருக்கும் சூழலில் அவரையோ அல்லது ரிஷப் பண்டையோ தான் ரசிகர்கள் அடுத்த டி-20 அணி கேப்டனாக எதிர்பார்க்கிறார்கள்.
ஹர்திக் பாண்டிய தலைமையிலான இந்திய அணியைப் பொறுத்தவரை, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள். கேப்டன் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆல்ரவுண்டர் வீரர்களாக உள்ளனர். சுழலுக்கு யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும், வேகப்பந்து வீச்சுக்கு அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் ஆகியோரும் உள்ளனர்.
Did anyone say Captains' photoshoot? 📸
— BCCI (@BCCI) November 16, 2022
That's Some Entry! 😎 #TeamIndia | #NZvIND pic.twitter.com/TL8KMq5aGs
தொடக்க ஆட்டக்காரர்களுக்கான இந்தியாவின் விருப்பங்கள்:
சுப்மன் கில்
இஷான் கிஷன்
தீபக் ஹூடா
சூர்யகுமார் யாதவ்
ரிஷப் பந்த்
சஞ்சு சாம்சன்
தொடக்க வீரர்களாக யார் யார் களமிறங்குவார்கள்?
டி20 உலகக்கோப்பையில் இந்தியா எதிர்கொண்ட மோசமான பிரச்சனைகளில் ஒன்று தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டம். இதை கொடுக்க தரமான தொடக்க வீரர்கள் இந்தியாவுக்கு வேண்டும். மேலே குறிப்பிட்ட வீரர்களில், எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு எதிராக சில சமயங்களில் இஷான் கிஷன் போராடியிருந்தாலும், 3வது இடத்தை விட ஓப்பனிங்கில் அவர் இன்னும் சிறந்த தேர்வாக இருக்கிறார். ஆனால், அவருடன் யார் ஜோடியாக இருப்பார்கள் என்பதை லக்ஷ்மண்-ஹர்திக் ஆகியோர் முடிவு செய்ய வேண்டும்.
சூர்யகுமார், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக தொடக்க வீரர்களாக களமாடி இருக்கிறார்கள். சூர்யகுமார் 4வது இடத்தில் நம்பகமான விருப்பமாக இருந்தாலும், தொடக்கத்தில் அணிக்கு அதிரடியாக ரன்களை குவிக்கும் வீரர் தேவை. இதை சூர்யகுமார் நிறைவு செய்வார் என்று அவர் மீது நம்பிக்கை வைத்து, அவரை மீண்டும் ஒரு தொடக்க வீரராக முயற்சிக்கலாம்.
ரிஷப் பந்த் 5-வது இடத்தில் இருந்து, தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், டாப் ஆர்டரை தொந்தரவு செய்ய ராகுல் டிராவிட் தயங்கினார். அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், தொடக்க ஜோடியை முறியடித்து, புதிதாக ஒன்றை முயற்சிக்கலாம்.
2021 மற்றும் 2022 டி20 உலகக்கோப்பையில் மோசமான தொடக்க ஆட்டம் காரணமாக இந்தியா போராடியது. இது பண்ட்டுக்கு அணியில் ஒரு பங்கையும் கொடுக்கும். நீண்ட நாட்களாக யாரும் இல்லாமல் இருந்த அவர், அணி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.
தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் குறிப்பிட்ட ரோல்கள் இல்லாத மற்ற இரண்டு பேட்ஸ்மேன்களாக உள்ளார்கள். ஹூடா ஓப்பனிங் முதல் 7வது இடம் வரை அனைத்து இடங்களிலும் விளையாடியுள்ளார். ஆனால், அவரும் தனது பங்கு பற்றி தெளிவு இல்லாமல் இருக்கிறார். எனினும், அயர்லாந்திற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடக்க வீரருக்கான உரிமையை கோருகிறார்.
சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரை, அணியில் அவரின் பங்கு குறித்து தெளிவு இல்லாமலே அணி நிர்வாகம் உள்ளது. அவர் அடுத்த சுற்றுப்பயணத்தில் இருப்பாரா என்பதில் அவருக்கும் கூட தெளிவு இல்லை. ஆனால் தேர்வாளர்கள் நியூசிலாந்து மற்றும் வங்கதேச சுற்றுப்பயணங்களுக்கு சாம்சனை தேர்வு செய்வதால், அவருக்கு சில வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தொடக்க இடத்திற்கு வலுவான போட்டியாளராக இருந்தாலும், சூர்யாவுக்கு பதிலாக அவர் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது.
மற்ற இடங்களைப் பொறுத்தவரை, ஃபினிஷராக ஹர்திக் பாண்டியா இருப்பார். தினேஷ் கார்த்திக் வெளியேறியதால், பாண்டியா தன்னை ஒரு ஃபினிஷராக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர் காயங்களால் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் வாஷிங்டன் சுந்தர் அவருக்கு சிறந்த ஜோடியாக இருப்பார்.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நீண்ட கால மாற்றாக சுந்தர் கருதப்படுகிறார். ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பும் வரை அவர் பந்து வீச்சை வீச வேண்டும் என்றாலும், அவர் தனது பேட்ட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு முன்பு அவர் 3 டி20 போட்டிகளில் விளையாடலாம்,
— BCCI (@BCCI) November 16, 2022
உம்ரான் மாலிக் எங்கே பொருந்துகிறார்?
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அணி தேர்வு செய்யப்பட்டிருந்தால், புவனேஷ்வர் குமார் அணியில் இடம் பெற்றிருக்க மாட்டார். அவரிடம் சிறந்த ஸ்விங் திறன் இருந்தாலும், கடினமான பந்துவீச்சு சூழ்நிலைகளில் விக்கெட் வீழ்த்துவதில் அவர் தோல்வியடைகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் வெறும் 9 ஓவர்கள் வீசிய பின்னர் கைவிடப்பட்ட உம்ரான் மாலிக் மீண்டும் கலக்கியிருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் எதுவும் பணயம் இல்லை, அவர் அணி நிர்வாகத்தின் ஆதரவைத் தான் எதிர்பார்க்கிறார். அவரது தரமான வேகம் அவரது ஆயுதமாக இருந்து வருகிறது. பேட்டர்களுக்கு கடினமாக இருக்கும் வகையில் சில மாறுபாடுகள் மற்றும் யார்க்கர்களையும் உருவாக்கி வருகிறார். முதல் டி20 இல்லாவிட்டாலும் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அர்ஷ்தீப் சிங் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதன் மூலம் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார். இருப்பினும், மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் குறித்து லக்ஷ்மன் தான் முடிவு எடுக்க வேண்டும். முகமது சிராஜ், ஹர்ஷல் படேல் இருவரும் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், அவர்களில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். நடப்பு உலகக் கோப்பை அணியில் இந்த வீரர்கள் இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனவே, புவனேஷ்வருக்குப் பதிலாக சிராஜை அணி நிர்வாகம் சோதிக்கலாம்.
சுழலில், யுஸ்வேந்திர சாஹல் இந்தியாவின் நம்பர் 1 லெகியாகக் கருதப்பட்ட போதிலும், டிராவிட் மற்றும் ரோகித் அவருக்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கத் தவறினர். ஆனால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில், குல்தீப் யாதவை பெஞ்சில் வைத்து அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ஹர்திக் பாண்டியா (சி), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விசி மற்றும் டபிள்யூ கே), சஞ்சு சாம்சன் (டபிள்யூ கே), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்
இந்தியாவின் உத்தேச லெவன்:
சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், தீபக் ஹூடா அல்லது வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil