scorecardresearch

IND VS NZ: விடாது பெய்த மழை… ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் ரத்து!

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.

IND VS NZ: விடாது பெய்த மழை… ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் ரத்து!
IND VS NZ 1st T20 Match 2022 Live Cricket Score Streaming Online

IND VS NZ 1st T20 Match 2022 tamil news:

நியூசிலாந்து மண்ணில் சுற்றிப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி-20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு தொடங்க இருந்தது.

தொடர் மழை ஆட்டம் ரத்து

ஆனால், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி நடக்கவிருந்த வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் தொடர் மழை காரணமாக டாஸ் போடுவது தாமதம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. வருண பகவான் கடைசி வரை இரக்கம் காட்டவில்லை.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மவுன்ட் மவுங்கானுய்யில் நடக்கிறது.

இந்தியா அணி எப்படி?

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் படை களமாடுகிறது.

இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், பண்ட் போன்ற அதிரடி வீரர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். உலக கோப்பையில் கலக்கிய சூர்யகுமாருக்கு, 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்தவரான முகமது ரிஸ்வானின் (பாகிஸ்தான்) சாதனையை தகர்க்க இன்னும் 286 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த தொடரில் அதை நெருங்குவதற்கு அவருக்கு நல்ல வாய்ப்புள்ளது.

பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், குலதீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அதிவேக பவுலர் உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள். அடுத்த டி20 உலக கோப்பை போட்டிக்கு இளம் வீரர்களை கொண்டு வருவதற்கான முதற்படிக்கட்டாக இந்த தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி எப்படி?

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து வலுவான அணியாக உள்ளது. அணியின் பேட்டிங்கில் டிவான் கான்வே, பின் ஆலென், கிளென் பிலிப்ஸ், கேப்டன் வில்லியம்சன், டேரில் மிட்செல், பந்து வீச்சில் லோக்கி பெர்குசன், டிம் சவுதி, சான்ட்னெர் மிரட்ட காத்திருக்கிறார்கள். அந்த அணிக்கு உள்ளூர் சூழல் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

நியூசிலாந்து மைதானங்கள் சிறியவை என்பதால் ரன்வேட்டை நடத்த முடியும். அதற்கு வெலிங்டனும் விதிவிலக்கல்ல. 2019-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.

வானிலை முன்னறிவிப்பு

வெலிங்டன் நகர வானிலையைப் பொறுத்தவரை காலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் போட்டி உள்ளூர் நேரப்படி இரவில் நடப்பதால் அந்த சமயத்தில் மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேருக்கு நேர்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் டி 20 கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் இந்தியாவும், 9ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

2020-ம் ஆண்டில் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் டி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. அதே போன்று மறுபடியும் இந்தியா ஆதிக்கம் செலுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நேரலை

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கும். இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன், ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அத்துடன் இதற்கான பிரத்யேகமான உரிமத்தை பெற்றுள்ள பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்திலும் பார்க்கலாம்.

இரு அணி வீரர்கள் பட்டியல்:

இந்திய அணி:

சுப்மன் கில், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேட்ச்), ரிஷப் பந்த்(வ), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐய் , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல்

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவோன் கான்வே(w), கேன் வில்லியம்சன்(c), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி

இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:

இந்தியா

சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், தீபக் ஹூடா/வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

நியூசிலாந்து

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்.

India in New Zealand, 3 T20I Series, 2022Sky Stadium, Wellington   08 December 2022

New Zealand 

vs

India  

Match Abandoned without toss ( Day – 1st T20I ) Match Abandoned

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs nz 1st t20 match 2022 live score in tamil