Advertisment

இந்தியா- நியூசிலாந்து டி20 போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் 'லைவ்' பார்ப்பது எப்படி?

நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நாளை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND VS NZ 1st T20 Match 2022 Live Streaming in tamil

India vs New Zealand  1st T20 Match 2022 on 18th Nov, Friday

India vs New Zealand {IND VS NZ} 1st T20 Match 2022 Live Streaming | இந்தியா vs நியூசிலாந்து {IND VS NZ} T20 போட்டி 2022 நேரடி ஒளிபரப்பு: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25ல் தொடங்குகிறது.

Advertisment

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் மூத்த வீரர் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். இதேபோல், ஒருநாள் அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

publive-image

சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் தோல்வியடைந்தன. இதில் இங்கிலாந்திடம் இந்தியாவும், பாகிஸ்தானிடம் நியூசிலாந்தும் தோல்வி கண்டன. இந்நிலையில், தற்போது இந்த இரு அணிகளும் தோல்வி முகத்தை துடைக்க இந்த தொடரில் விளையட ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிகளை நேரலையில் எப்போது, ​​​​எங்கு பார்ப்பது என்பது குறித்தும், போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங்கிற்கான சில விவரங்கள் குறித்தும் இங்கு பார்க்கலாம்.

IND vs NZ 2022: டி-20 தொடர் அட்டவணை

1வது டி-20: 18 நவம்பர், மதியம் 12:00 IST வெலிங்டன்

2வது டி-20: 20 நவம்பர், மதியம் 12:00 IST பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய்.

3வது டி-20: 22 நவம்பர், மதியம் 12:00 IST நேப்பியர் மெக்லீன் பூங்கா.

IND vs NZ: முதல் டி20 போட்டி எப்போது, ​​எங்கு விளையாடப்படும்?

நியூசிலாந்துக்கு எதிராக, இந்தியா தனது முதல் டி20 போட்டியை நாளை, வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2022 அன்று மதியம் 12 மணிக்கு விளையாடுகிறது. இது நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் பிராந்திய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

IND vs NZ: முதல் டி20 போட்டியை எந்த டிவி சேனல்களில் பார்க்கலாம்?

இந்தியாவில், 18 நவம்பர் 2022 அன்று பிற்பகல் 12 மணி முதல் இந்தியா - நியூசிலாந்து டி20 மோதலின் நேரடி போட்டியை ஒளிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு மட்டுமே உரிமை உள்ளது.

IND vs NZ: முதல் டி20 போட்டியை ஆன்லைனில் எங்கே பார்க்கலாம்?

நியூசிலாந்துக்கான இந்திய சுற்றுப்பயணத்தின் கிரிக்கெட் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த போட்டியின் கவரேஜ் 11 மணிக்கு தொடங்கும் என்று அமேசான் ப்ரைம் (Amazon Prime) வீடியோ அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கு போட்டியைப் பார்க்க அமேசான் ப்ரைம் (Amazon Prime) சந்தா தேவைப்படும். பிரைம் மெம்பர்ஷிப்பின் விலை ரூ.179 (மாதம்), ரூ.459 (காலாண்டு) மற்றும் ரூ.1,499 (ஆண்டு) ஆகும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Cricket Sports Indian Cricket T20 Hardik Pandya India Vs New Zealand Kane Williamson Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment