Advertisment

IND vs NZ 1st T20: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய நியூசிலாந்து... இந்தியாவுக்கு மோசமான தோல்வி!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs NZ 1st T20 Match 2023 Live Score,India vs New zealand  1st T20 Match 2023 Live, IND vs NZ 1st T20 Match 2023

IND vs NZ 1st T20 Match 2023 Live Cricket Score Streaming Online

IND vs NZ 1st T20 Match 2023 Highlights in tamil: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடந்த ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.

Advertisment

இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டியானது ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. எனவே, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் - டெவோன் கான்வே ஜோடி களமாடினர். இந்த ஜோடியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஃபின் ஆலன் 2 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பிறகு வந்த மார்க் சாப்மேன் பூஜ்ஜிய ரன்னில் வாஷிங்டன் சுந்தர் வீசிய அதே ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். 17 ரன்கள் எடுத்த கிளென் பிலிப்ஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெவோன் கான்வே 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவரது 9வது சர்வதேச டி20 அரைசதம் ஆகும். தொடர்ந்து அதிரடி காட்ட முயன்ற அவர் 52 ரன்னில் அவுட் ஆனார். கான்வே விக்கெட்டுக்குப் பிறகு வந்த அதிரடி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் மிட்செல் சான்டனர் 7 ரன்னில் அவுட் ஆனார்.

மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேரில் மிட்செல் அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டார். அத்துடன் தனது அரைசத்தையும் பதிவு செய்தார். அடுத்து பவுண்டரி, 2 இரண்டு ரன்கள் என மொத்தமாக 27 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவர் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவுக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 177 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியின் டாப் ஆடர் வீரர்களில் இஷான் கிஷன் (4), ராகுல் திரிபாதி (0), சுப்மான் கில் (7), சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிரடியாக விளையாடிய மிடில்-ஆடர் வீரர் சூரியகுமார் யாதவ் 47 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். மறுமுனையில், இருந்த ஹர்திக் பாண்டிய 21 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதி வரை போராடிய அவர் அரைசதம் விளாசி 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 20 ஓவர்கள் முடிவில் 9. விக்கெட்டுகளை இழந்த இந்தியா 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகனாக டேரில் மிட்செல் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil



  • 22:28 (IST) 27 Jan 2023
    வாஷிங்டன் சுந்தர் அரைசதம்!

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 177 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.



  • 21:52 (IST) 27 Jan 2023
    கேப்டன் ஹர்திக் பாண்டியா அவுட்!

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 177 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணியில் விளையாடி வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.



  • 21:50 (IST) 27 Jan 2023
    சூரியகுமார் அவுட்; இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு!

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 177 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வந்த சூரியகுமார் 47 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



  • 21:41 (IST) 27 Jan 2023
    விக்கெட் சரிவை மீட்ட சூரியகுமார்... அற்புத ஸ்டைலில் ஆட்டம்!

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 177 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.

    சூரியகுமார் யாதவ் (39) - ஹர்திக் பாண்டியா (20) களத்தில் விளையாடி வருகின்றனர்.



  • 21:25 (IST) 27 Jan 2023
    7 ஓவர்கள் முடிவில் இந்தியா!

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 177 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

    சூர்யகுமார் யாதவ் (17) - ஹர்திக் பாண்டியா (10) களத்தில் விளையாடி வருகின்றனர்.



  • 21:13 (IST) 27 Jan 2023
    அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; திணறும் இந்தியா!

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 177 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.



  • 20:44 (IST) 27 Jan 2023
    கான்வே, மிட்செல் அரைசதம்... இந்தியாவுக்கு 177 ரன்கள் இலக்கு!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த கான்வே 52 ரன்களும், டேரில் மிட்செல், 59 ரன்களும் எடுத்தனர்.



  • 20:34 (IST) 27 Jan 2023
    மிட்செல் சான்டனர் அவுட்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் மிட்செல் சான்டனர் 7 ரன்னில் அவுட் ஆனார்.



  • 20:29 (IST) 27 Jan 2023
    மைக்கேல் பிரேஸ்வெல் ரன்-அவுட்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் டெவோன் கான்வே விக்கெட்டுக்குப் பிறகு வந்த அதிரடி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

    தற்போது 15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.



  • 20:28 (IST) 27 Jan 2023
    மைக்கேல் பிரேஸ்வெல் ரன்-அவுட்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் டெவோன் கான்வே விக்கெட்டுக்குப் பிறகு வந்த அதிரடி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

    தற்போது 15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.



  • 20:24 (IST) 27 Jan 2023
    கான்வே அவுட்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவோன் கான்வே 31 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.



  • 20:17 (IST) 27 Jan 2023
    கான்வே அரைசதம்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெவோன் கான்வே 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவரது 9வது சர்வதேச டி20 அரைசதம் ஆகும்.



  • 20:13 (IST) 27 Jan 2023
    15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.



  • 20:04 (IST) 27 Jan 2023
    கிளென் பிலிப்ஸ் அவுட்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், 17 ரன்கள் எடுத்த கிளென் பிலிப்ஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • 19:50 (IST) 27 Jan 2023
    10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.



  • 19:34 (IST) 27 Jan 2023
    அடுத்தடுத்த விக்கெட் இழப்பு... பந்துவீச்சில் கலக்கும் வாஷிங்டன் சுந்தர்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த ஃபின் ஆலன் வாஷிங்டன் சுந்தர் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மார்க் சாப்மேன் வாஷிங்டன் சுந்தர் வசமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    தற்போது பவர் பிளே முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.



  • 19:05 (IST) 27 Jan 2023
    ஆட்டம் இனிதே தொடக்கம்!

    டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ள நிலையில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமாடியுள்ளது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் - டெவோன் கான்வே ஜோடி களமிறங்கியுள்ளது. முதலாவது ஓவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசி வருகிறார்.



  • 19:01 (IST) 27 Jan 2023
    இரு அணிகளின் ஆடும் லெவன்!

    இந்தியா ஆடும் லெவன்

    இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்



  • 18:59 (IST) 27 Jan 2023
    ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு அணியிடம் பணிந்த ஜடேஜா டீம்

    ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தியது தமிழ்நாடு அணி.

    https://tamil.indianexpress.com/sports/ranji-trophy-tamil-news-tamil-nadu-beat-ravindra-jadeja-led-saurashtra-583661/



  • 18:44 (IST) 27 Jan 2023
    இரு அணிகளின் ஆடும் லெவன்!

    நியூசிலாந்து ஆடும் லெவன்

    ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்



  • 18:36 (IST) 27 Jan 2023
    டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு: நியூசிலாந்து முதலில் பேட்டிங்!

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. எனவே, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும்.



  • 18:20 (IST) 27 Jan 2023
    ராஞ்சி ஆடுகளம் எப்படி?

    ராஞ்சி சர்வதேச ஸ்டேடியத்தில் இந்திய அணி இதுவரை மூன்று டி20 போட்டியில் விளையாடி அனைத்திலுமே வெற்றியை ருசித்துள்ளது. இதில் 2021-ம் ஆண்டு நவம்பரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் அடங்கும்.

    மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆட்டத்தில் டாசும் முக்கிய பங்கு வகிக்கும். இரவில் பனி தாக்கம் காரணமாக 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு அதிக பலன் கிடைக்கும்.



  • 18:19 (IST) 27 Jan 2023
    நேருக்கு நேர்!

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் சர்வதேச டி20 போட்டியில் இதுவரை 22 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 12 ஆட்டங்களிலும், நியூசிலாந்து அணி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளது.



  • 18:12 (IST) 27 Jan 2023
    நியூசிலாந்து அணி எப்படி?

    ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் தலைமையில் நியூசிலாந்து அணி களமாடுகிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய டிவான் தொடக்க வீரர் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், பின் ஆலென், ஆல்-ரவுண்டர்கள் மிட்செல் சான்ட்னெர், டேரில் மிட்செல் ஆகிய வீரர்கள் பேட்டிங்கில் வலுசேர்க்கிறார்கள். பந்து வீச்சில் லோக்கி பெர்குசன், பிளேர் டிக்னெர், ஜேக்கப் டப்பி, சோதி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.



  • 18:11 (IST) 27 Jan 2023
    ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!

    தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், மணிக்கட்டு காயத்தால் அவதிப்படும் நிலையில், அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக களமாடும் வீரர் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும், தொடக்க வீரர்களுக்கான போட்டி அணியில் நிலவிய வண்ணம் தான் உள்ளது. ஏன்னென்றால், அணிக்கு புதிய வராக பிருத்வி ஷா வந்துள்ளார். விக்கெட் கீப்பர் வீரரான இஷான் கிஷன் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ள நிலையில், மற்றொரு தொடக்க வீரருக்கான இடத்திற்கு பிருத்வி ஷா – சுப்மன் கில் ஆகிய வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். கில்-லின் தற்போதைய ஃபார்மை பார்க்கையில் அவருக்கே அதிக வாய்ப்பு என்று தெரிகிறது.



  • 18:10 (IST) 27 Jan 2023
    ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!

    தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், மணிக்கட்டு காயத்தால் அவதிப்படும் நிலையில், அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக களமாடும் வீரர் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும், தொடக்க வீரர்களுக்கான போட்டி அணியில் நிலவிய வண்ணம் தான் உள்ளது. ஏன்னென்றால், அணிக்கு புதிய வராக பிருத்வி ஷா வந்துள்ளார். விக்கெட் கீப்பர் வீரரான இஷான் கிஷன் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ள நிலையில், மற்றொரு தொடக்க வீரருக்கான இடத்திற்கு பிருத்வி ஷா – சுப்மன் கில் ஆகிய வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். கில்-லின் தற்போதைய ஃபார்மை பார்க்கையில் அவருக்கே அதிக வாய்ப்பு என்று தெரிகிறது.



  • 17:44 (IST) 27 Jan 2023
    பாண்டியா தலைமையிலான இந்திய அணி எப்படி?

    டி20 கோப்பை தோல்வி எதிரொலியாக பாண்டியா தலைமையில் ஒரு வலுவான டி20 அணியை கட்டமைக்க இந்திய நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அவ்வகையில், டி20 போட்டிகளுக்கு இந்தியா அவரையே கேப்டனாக நியமித்து வருகிறது. சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள தொடரில் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு பணிச்சுமை காரணமாக இத்தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில், பிரித்வி ஷா போன்ற வீரர்களும், பந்து வீச்சில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்களும் உள்ளனர்.



  • 17:40 (IST) 27 Jan 2023
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.



India Vs New Zealand Sports Cricket Indian Cricket Team Live Cricket Score Live Updates Live Updats Indian Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment